Tuesday, March 10, 2009

அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்

அரசு மருத்துவமனை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு மட்டும் இன்றி மூக்குக்கும்வருவது அதன் பினாயில் நெடியும், சுகாதரமற்ற பராமரிப்பும்தான். எல்லோரிடமும் இருக்கும் ஒரு நினைப்பு காய்ச்சல் வந்து அங்கு போனால் அதோடு வயிற்றுப்போக்கையும் வாங்கி வரவேண்டும் அல்லது ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்கபோனால் அதோடு இலவச இனைப்பும் வரும் என்ற பயம். இவை அனைத்தும் உங்கள் மனதில் இருக்குமானால் இனி அதை அழித்துவிடுங்கள்.

சென்னையில் சென்ட்ரலில் இருக்கும் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் இருக்கும் பொதுக் கழிப்பறைகூட அத்தனை சுத்தம். சமீபத்தில் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் திருச்சியில் காவேரி என்ற மருத்துவமனையின் பின் புலம் தெரியாமல் அங்கு கொண்டு போய் சேர்த்து ஒரு 10 நாட்கள் அங்கு இருந்து அவர்களிடம் இருக்கும் அத்தனை புதியமெசினுக்கும் கப்பம் கட்டிவிட்டு கடைசியாக ரிசல்ட் வந்தது "நுரையீரல் புற்று நோய்" என்று, மேலும் உறுதி படுத்த இன்னும் மீச்சம் மீதி இருக்கும் மெசின்களுக்கும் வேலை வைக்க எண்ணியவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, அப்பாவின் நண்பரும் சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய டாக்டர். சிவராமன் என்பவர் மூலம் அரசு மருத்துவமனையில் சேருங்கள் மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றதால் அங்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.
(பொங்கலுக்காக நெக்லஸ் மற்றும் வித விதமான ஆபரனங்களோடு மருத்துவமனையின் முகப்பு )

அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அங்கு இல்லாத வசதியே இல்லை, எத்தனை எத்தனை விதமான பிரிவுகள் எத்தனை எத்தனைவிதமான தொழில்நுட்ப உபகரணங்கள், அங்கு அம்மாவுடன் 20 நாட்கள் இருந்தேன், பின் அங்கு ஒரு முறைக்கு இரு முறை செய்த டெஸ்டில் கேன்சர் இல்லை என்று வந்தது. பின் நுரையீரலில் சுற்றி நிரம்பி இருக்கும் தண்ணியை வெளியேற்ற சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது. 6 மணி நேரத்துக்கு ஒரு முறை நான்கு ஊசிகள் போட வேண்டும்காலை 6 மணிக்கு ஒன்று, மதியம் 12 மணிக்கு ஒன்று, மாலை 6 மணிக்கு ஒன்று, பின் இரவு 12 மணிக்கு ஒன்றுஇருந்த 20 நாட்களிளும் ஒரு நாள் கூட 12.01க்கோ அல்லது 6.01க்கோ ஊசி போட்டது இல்லை மணி சரியாக 12 நெருங்கும் வேலையில் கூப்பிடாமலேயே தானாக வந்து ஊசி போட்டுவிட்டு செல்வார்கள் அந்த செவிலியர்கள்.
அதுபோல் முன்பு எல்லாத்துக்கும் வழங்கப்பட்டு வந்த த/அ என்ற வெள்ளை மாத்திரை இல்லாமல் பெரிய கம்பெணிகளில்தரமான மாத்திரையே வழங்கப்படுகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத வாடகையில் ஒரு சிங்கிள் பெட் ஏ/சி ரூம், ரூ600வாடகையிலும் இரு பெட் போடப்பட்ட அறை ரூ 300 க்கும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 4 முறையாவது சுத்தம் செய்கிறார்கள், மூக்கை துளைக்கும் மருந்து நெடி இல்லை.
மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி மிகவும் கனிவோடும் அதே சமயம் அக்கரையோடும் இருந்ததால் அங்கு இருந்த வரைஅம்மா மிகவும் நிம்மதியாகவே இருந்தார்கள்.

மிடில் கிளாஸ் மக்கள் பலரும் தன் சொத்தை விற்று மருத்தும் செய்யதற்கு பதில் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம்பார்த்துக்கொண்டு பின் உங்களால் முடிந்த அளவுக்கு அந்த துறைக்கு சில உதவிகளை செய்துவிட்டு வாருங்கள்!
********************************************************************
அங்கு இருந்த ஒவ்வொரு நாளும் எத்தனை விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தெரியுமா? அங்கு இருந்த 20 நாட்களும் வித விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிவதை கண்டேன், சக்கரை வியாதியினால் இரு கால்களை இழந்த கணவனை தன் முதுகில் தூக்கி கொண்டு வந்த மனைவி, 50 வயதில் சிறு நீரகப்பிரச்சினையினால் கணவரின் மூத்திரபையை கையோடும் கணவனைதோளில் கைப்போட்டு அழைத்து சென்ற அம்மா, மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சைக்காக காத்து கிடக்கும் கணவன், புது தாலியோடு கணவனின் அடிப்பட்ட காலுக்கு அருகிலேயே உட்காந்து இருந்த புது மனைவி என்று எத்தனை எத்தனைவிதமான காதலர்கள். பந்தம் என்பதை தாண்டி அதில் இருக்கும் அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்.
***************************************************************************
நம் சக வலைப்பதிவர் Dr. Buruno அங்குதான் வேலைப்பார்க்கிறார், மூன்று முறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு பேசிக்கொண்டு இருந்து விட்டு சென்றார்,பேசிக்கொண்டு இருந்த பொழுது ஒரு முறை சொன்னார் நாளை 24 மணி நேர டூட்டி இப்பொழுதான் முடிந்தது என்று, சும்மா ஒரு சேரில் உட்காந்துக்கிட்டு 8 மணி நேரம்பொட்டி தட்டிட்டு வீட்டுக்கு போய் ஒரு லாரி கல்லை உடைத்ததை போல் பில்டப் கொடுக்கும் நம்மை போல் ஆட்கள் எல்லாம் இது போன்றவர்களிடம் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கிறது. அரசு மருத்துவமனையில் 8 மணி நேர வேலை என்றாலே எத்தனை சிரமம் அதிலும் 24 மணி நேர டூட்டி முடிந்து கொஞ்சமும் சோர்வு இல்லாமல் முகத்தில் புன்னகையோடு சேவைசெய்யும் இவரை போன்ற மருத்துவர்கள் பலர் அங்கு இருப்பதால் தான் அங்கு காதலர்கள் நிம்மதியோடு இருக்கமுடிகிறது.

அங்கு இருக்கும் சில குறைகள்.

1) டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
2) புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.
3) பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை.      - thanks   - குசும்பன்
 
Adhirai- Abu Sumayya
From-    Jeddah

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?