Thursday, March 26, 2009

தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி !

கோவை மார்ச் 23 : தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி! காக்கா சப்ளை செய்த 4 பேர் கைது - கோவையில் சிக்கன் என்ற பெயரில் ஓட்டல்களில் காக்கா பிரியாணி சப்ளை ஜோராக நடந்து வந்துள்ளது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களிடம் விசாரணை நடக்கிறது.Image

கோவை மதுக்கரை பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சிக்கன் என்ற பெயரில் காக்கை பிரியாணி சப்ளை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சோதனை நடத்தினர். அப்போது 4 பேர் காக்கைகளை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), உரிச்சான் (40), கிருஷ்ணன் (60) எனத் தெரியவந்தது. இவர்கள் காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். சில்லி சிக்கன், சில்லி பிரை என்ற பெயரில் அசைவ பிரியர்களுக்கு காக்கை இறைச்சி சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. காக்கை பிரியாணியும் சிக்கன் பிரியாணி விலையில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
Image

அவர்களிடம் இருந்து 25 காக்கைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காக அவற்றை அவர்கள் தோலுரித்து தயார் நிலையில் வைத்திருந்தனர். வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே புதைத்தனர். 4 பேரும் கைது செய்யப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எந்தெந்த ஓட்டல்களுக்கு காக்கை சப்ளை செய்யப்பட்டு வந்தது என்பது பற்றியும், ஓட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோர் மீதும், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

- ஹூஸைன்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி !"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?