வேவ் என்றால் அலை...
அலையைப் போல கூகுள் வேவிற்கும் எல்லை இல்லை என்று தான் தோன்றுகிறது அதன் முன்னோட்டத்தைப் பார்த்த போது.
கூகுளின் புதிய அவதாரம் தான் "கூகுள் வேவ்"..
இதில் என்ன புதிதாக உள்ளது?
சாட் செய்யும் போதே மொழிபெயர்க்கும் வசதி:
நீங்கள் ஆங்கிலம் அதிகமாகத் தெரியாத ஒரு நண்பருடன் சாட் செய்கிறீர்கள்... நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்வதை அவருக்கு தன் மொழியில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்? இது தான் மொழிபெயர்க்கும் வசதி!! இந்த வசதியில் தமிழிழும் இருந்தால், நம்ம பெற்றோருடனும், தாத்தா பாட்டியிடனும் கூட சாட் செய்ய போல... (keypad ஆங்கிலத்தில் தான் உள்ளது என்பது வேறு விஷயம்!!)
மிக விரைவாக சாட்.. ( Sarfudeen is typing...)
நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)
புதிய முறையில் ஈ-மெயில் :
நாம் நம் நண்பர்களுக்கு மெயில் அனுப்புகிறோம். அவர்கள் பதிலோ அல்லது அவர் பிறருக்கோ அனுப்புகிறார்.. இதை ஒரு விவாதமாகமோ அல்லது தொகுப்பாகவோ "ஒரே பக்கத்தில்" பார்த்தால் எப்படி இருக்கும்?
அது தான் வேவின் புதிய முறை...
இதில் புதிதாக ஒருவரை நமது விவாதத்திற்கு அழைக்கலாம்.. அவரும் நமது விவாதித்தின் இடையில் Comment செய்யலாம்..
பிளேபேக் (Playback) வசதி:
மேலே குறிப்பிட்ட விவாதத்தில் பலரும் பலவிதமான் கருத்துக்களைத் தருகிறார்கள்.. இது எங்கே இருந்து ஆரம்பித்தது?யார் எப்போது கருத்து தெரிவித்தார்?
இதனைப் பார்க்க புதிதாக வருகிறது Playback வசதி.
பிக்காசா...
நாம் நமது நண்பர்களுக்கு படங்களைக் காண்பிக்க, பிக்காசா தளத்தின் linkயை அனுப்புவோம். இதுவே உங்கள் நண்பருடன் சாட் செய்யும் போதே விவாதிக்கும் இடத்திலேயே படங்களை இணைத்தால்?
அவரும் உடனே நமது படங்களுக்கு கருத்து தெரிவிக்கலாம்....
பிளாக்கையும் விட்டு வைக்கலை!!:
நீங்கள் உங்கள் பதிவை Blogspotல் வெளியிடுகிறீர்கள்.
சில நண்பர்கள் அதற்கு பின்னூட்டம் இடுகிறார்கள். அதற்கு நீங்கள் வேவில் இருந்த படியே கருத்து தெரிவிக்கலாம். இந்த பின்னூட்டங்களை ஒரு விவாதமாக வேறு நண்பர்களுக்கும் அனுப்பலாம்.. அவர்கள் கருத்தும் உடனே Blogspotலும் வந்து விடுமாம்.
SpellChecker வசதி:
நாம் சாட் செய்யும் போதோ அல்லது மெயில் தயார் செய்யும் போதோ நேரம் செலவாவது தப்பில்லாமல் வார்த்தைகளை டைப் செய்வதற்குத்தான்!! இனி இந்த கவலை வேண்டாம்..
நாம் டைப் செய்யும் போதே "என்ன வரியை எழுதுகிறோம் என்று வேவின் Spellchecker வசதியே சரி செய்கிறது".
"Icland is icland" என்று டைப் செய்தால் "Iceland is island" என்று மாறுகிறது.
வரைபடமும் (Maps) உண்டு:
நமது விவாதத்தின் போது "நான் கோவை அருகே உள்ள சூலூரிற்கு செல்கிறேன்" என்று டைப் செய்யும் போது, சூலூரின் வரைபடத்தையும் இணைக்க முடியுமாம்!!
விளையாட்டுகளும் உண்டு:
செஸ், சுடோகு போன்ற விளையாட்டுகளை நமது நண்பர்களுடன் விளையாடலாம். இது ஏற்கனவே சில தளங்களில் வந்து விட்டது.
செஸ் விளையாடி முடித்த பிறகு நமது ஆட்ட நகர்த்தல்களை "Playback" வசதி மூலம் ஆரம்பம் முதல் பார்க்க முடியும்.
சுடோகு விளையாட்டை இரண்டு, மூன்று பேர் சேர்ந்தும் விளையாட முடியும் :)
கூகுளும் உள்ளேயே:
இத்தனை வசதியை கொடுக்கும் போது இதை மட்டும் எப்படி விடுவார்கள்?
நமது உரையாடலின் போதே "கூகுளில்" தேடவும், தேடலின் முடிவையும் இணைக்கவும் முடியுமாம்...
செல்போனில் வேவ், டிவிட்டருடன் இனைப்பு, வீடியோவை இணைக்கும் வசதி என்று பல சேவைகள் உள்ளதாம் இந்த கூகுள் வேவில்..
இதைப் பார்க்கும் போது அவர்கள் சரியான பெயரை வைத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது!!
இதை அனைத்தையும் நான் பார்த்தது "கூகுள் வேவ்"ன் ஒன்றரை மணி நேரம் ஓடும் அறிமுகம் பற்றிய
http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ இந்த வீடியோவில் தான். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!! ஒரு நல்ல முன்னோட்டம் பார்த்த திருப்தி கிடைக்கும்...
இந்த வருட இறுதிக்குள் கூகுள் வேவ் செயல்பாட்டிற்கு வருமாம். இப்பவே முக்காவாசி நேரம் நெட்ல தான் இருக்கேன்.. இதுவும் வந்துட்டா சொல்லவே வேணாம்.. நீங்க புலம்பறது கேக்குது thanks - senthil
*********************************************************************