COPY & PASTE
இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு கிடைத்த வரம் மற்றவர்கள் எழுதிய சில விசயங்கள். அப்படியே காப்பி & பேஸ்ட் செய்துவிட்டால் கடமை முடிந்தது என்று எழுதுபவர்கள் கொஞ்சம் அவதானிக்க.
இதை எல்லாம் இவர்களே படித்தார்களா என்பது சந்தேகம். இதுபோன்ற ஒரு சமூகம் இப்போது , தீஸிஸ்/ப்ராஜக்ட் என்று செய்து கொண்டிருக்கிறது. இப்படி செய்பவர்கள் நிஜத்தில் நொண்டியடிக்கிறார்கள் என்பது ஆய்வில் வெளியான உண்மை.இதனால் குப்பைகள் பெருகளாமே தவிர புதிய படைப்புகள் வர வாய்ப்பு இல்லை. ஏற்கனவே ஒருத்தன் எழுதியதை திருப்பி எழுதுவது - ஒரு அச்சரம் மாறாமல் காப்பி அடிப்பது ஒருவிதமான் ரீ-மிக்ஸ் பாடல்கள் மாதிரிதான். மற்றவர்கள் எழுதியதை புறக்கனியுங்கள் என்று சொல்லவில்லை. கொஞசம் தொட்டுக்கவேண்டிய விசயத்தை விலாவாரியாக காப்பிஅடிப்பது கேலிக்கூத்து.
இதில் ஹதீஸ்/மார்க்கசம்பந்தபட்டவிசய்ங்கள் விதிவிலக்கு. அதற்க்காக ஒரு புத்தகம் போடும் அளவு விசயத்தை வெப் தளாங்களில் எழுதி மொத்தபகுதியையும் அடைத்துகொள்வதை தவிற்க்களாம்.
சிலர் மாஞ்சி மாஞ்சி யாரிடமாவது 'சுட்ட' விசயத்தை FORWARD இ-மெயிலில் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். ரிட்டயர் ஆன பெரியவர்களுக்கு கூட நேரம் இருக்காது இவர்கள் அனுப்பும் அந்த கிலோமீட்டர் தூரம் உள்ள இ-மெயில்களை படிக்க.இதில் ஒருவர் பள்ளிவாசலில் தூங்கினார்/ கனவு வந்தது/ கனவில் வந்த பெரியவர் இதை செய்ய சொன்னார்/ இ-மெயிலை FORWARD செய்யாவிட்டால் நீ உருப்பட மாட்டாய்' என்ற ரேஞ்சில் மல்லுக்கு நிற்ப்பார்கள்.
நீங்கள் சொந்தமாக எழுத முயற்சி செய்யுங்கள். இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல, குறைந்த பட்சம் தபால் எழுத தெரிந்தாலே போதும். நிங்கள் கதை எழுத நினைக்கிறீர்களா...சிறுகதைகளின் கால ஓட்டம் சிறியது..அங்குபோய்.."காலம் உருண்டோடியது' என்று எழுதாதீர்கள்.
கதைக்கான களம் தெரிந்து எழுதுங்கள், பம்பாயில் [இப்போது மும்பை] ராமனாதன் தெருவில் என்று எழுதாதீர்கள். அங்கு "ராமனாதன் தெரு' இல்லை.
எழுதுவதை உங்கள் பாணியிலேயெ சொல்லுங்கள், நீங்கள் பேசிக்கொண்டிருப்பது போல் கூட இருக்களாம். வட்டாரத்தமிழ்
எழுதுவதை உங்கள் பாணியிலேயெ சொல்லுங்கள், நீங்கள் பேசிக்கொண்டிருப்பது போல் கூட இருக்களாம். வட்டாரத்தமிழ்
உண்மை விசயங்கள் எழுத நினைக்கிறீர்களா...நீளம் தவிர்க்கவும். நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது முதல் பத்தியில் தெரியாவிடில் படிப்பவர்கள் உடனே ஸ்க்ரோல் செய்து அடுத்த வெப்தளங்களுக்கு தாவலாம்.
சுவாரஸ்யமாக எழுத உலகில் நிறைய விசயங்கள் கொட்டிகிடக்கிறது.
ZAKIR HUSSAIN
0 comments: on "COPY PASTE"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?