Wednesday, December 29, 2010

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்

கல்வி விழிப்புணர்வு மாநாடு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.

இவண்,

இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.

நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ். 

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....

-- அதிரைநிருபர் குழு
 
read more...

Sunday, December 5, 2010

இன்று 06122010

இன்று 06122010

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில்[ நியு காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க...


'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந்த பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'

...இந்த போலீஸ்தான் ……..ஸ்காட்லாண்ட் யார்ட்????......




ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க ..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா/' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்'

ஒரு சின்ன கதை: ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால்

ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” எ ன துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர ..

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---.அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...'----துறவி

என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடுதுறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...---துறவி

மறுநால் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும் , போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , ல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுதரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

ZAKIR HUSSAIN

read more...

Tuesday, November 16, 2010

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்




ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்

நேற்றும் இன்றும் டெலிபோனில் நமது சொந்த பந்தங்களுடனும், நண்பர்களுடனும் ,மற்றும் நமது மாவட்டத்தில் ஆட்சியில் [ கலெக்டர் & அவரது அலுவலகம்] இருக்கும் சிலருடனும் , பேச வாய்ப்பு கிடைத்தது. இதில் நெத்தியடியாக சிலர் சொன்னது [ முக்கியமாக உங்கள் ஊரில் திறமையானவர்கள் ரொம்ப அதிகம் ..ஒற்றுமை இருந்தால் உங்கள் ஊர் ஒரு எடுத்துக்காட்டுக்குறிய ஊராக மாறி விடும்...'].நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பது கலெக்டர் அலுவளகம் , செக்ரடேரியட், இன்னும் கொஞ்சம் போனால் பாராளுமன்றம் வரை தெரிந்து இருக்கிறது..எப்படி ஊரில் உள்ள அடிப்படை வசதிகளில் மிக கடைசி நிலையில் இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை...பதில் மிக சுலபம் ....”ஓற்றுமை” நம்மிடம் இல்லை.

ஊர் சம்பந்தமாக ஒரு நிகழ்வு நடக்க உள்ளது. அதில் ஊரில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் நிச்சயம் நமது ஊரில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். முதலில் நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

18-11-2010 [ வியாழன்] காலை 10.00 மணிக்கு

சிஃபா மருத்துவமனை வளாகத்தில்

இதை நடத்துவது அதிராம் பட்டினம் நகர வளர்ச்சி கழகம்.Adirampattinam Rural development Association [ இலங்கை தமிழில் ' அதிராம்பட்டின நலனபிவிருத்தி சம்மேளனம்....மொழிபெயர்ப்பில் தவறு இருப்பின் இருக்கவே இருக்கிறார்கள் ' சகோதரர் அதிரை அஹ்மது , சகோதரர் கிரவுன்...உங்கள் தமிழறிவு பொறாமைப்பட வைக்கிறது]

சரி ஏன் அனைத்து தெருவாசிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்ங்கிறேன். நமது ஊரின் சுத்தம் மிகக்கேவல நிலைக்கு போய் விட்டது. ஆப்பிரிக்க நாடுகளை மிஞ்சும் கொசுக்கள். ஒரு மழை பெய்தாலே தஞ்சாவூரிலும் / பட்டுக்கோட்டையிலும் ஆஸ்பத்திரி டோக்கனுக்கு பிச்சை எடுக்காத குறையாக கெஞ்ச வேண்டிய நிலை. ஆயிரக்கணக்கில் மருந்து செலவு. இப்படி நமது வருமானத்தில் பெரும் பங்கை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் இந்த பிரச்சினைகள ஒழித்து கட்ட ஒற்றுமையுடன் சில செயல்களை சொன்னால் ஆயிரத்துஎட்டு பிரிவினை வாதங்கள்...


உங்களின் ECG யில் ஒரு சின்ன மாற்றம் , ரத்த கிரியேட்டினைனில் கொஞ்சம் அதிகம், எப்போதும் ஒழுங்கா தூங்கும் நீங்கள் இரவில் ஒரு 3 ணிநேரம் தாமதமாகத்தான் தூங்க முடிகிறது போன்ற குறைகள் ...நீங்கள் எந்த தெருவை சார்ந்திருந்தாலும், எந்த கரை வெட்டி உடுத்தி, எந்த இயக்கதை சார்ந்திருந்தாலும் உடன் தேவை உங்களுக்கு “மருத்துவ சேவை”...பல சமயங்களில் நம் ஊர் காரர்கள் நம்மிடம் ஆஸ்பத்திரி வசதிகள் இருந்தும் [ சில முன்னேறங்கள் செய்ய முடியாமல் இருப்பதால்] நம் ஊர் ஆட்களை ' ஆரம்ப கால அவசர சிகிச்சை' [Initial Emergency Treatment- செய்யாமல் [ இதய நோயாளிகளை ] பட்டுக்கோட்டைக்கும் / தஞ்சாவூருக்கும் காரில் கொண்டுபோய் 'எவ்வளவோ முயற்சி செய்தோம்...ப்ச்...ஒரு ஒரு மணிக்கு முன்னாலெ கொண்டு வந்திருந்தா,...போன்ற பழைய வசனங்களை கேட்டு விட்டு ..வழக்கம் போல் நம் ஊர் பள்ளிவாசல்களில் இதுவரை மைக்கை சரியாக “ஆன்’ பன்னதெரியாதவர்களை விட்டு "மரண அறிவிப்பு' சொல்ல பிசியாகிவிடுகிறோம்.

ஊரின் இப்போதைய நிலை என்ன தெரியுமா....70% அதிராம்பட்டினத்து மக்கள் World Helath Organisation [ WHO] குறிப்பிடும் fasting blood sugar level , Hba1C அளவை தாண்டி விட்டார்கள்..இதன் தாக்கம் பற்றி நான் எழுதினால் சில சர்க்கரை நோயாளிகள் கடுப்பில் எனக்கு வஞ்சினை வைத்தாலும் ஆச்சர்யம் இல்லை . மற்றும்,இப்போது நமது நாட்டில் பரவி வரும் இந்த வைரஸ் NDM-1, New Delhi metallo-beta-lactamase-1 எந்த விதமான ஆன்டிபயோடிக்கும் 'பெப்பே' காட்டிவிடும்...விளையாட்டாக கருத வேண்டாம் சயனைட் மாதிரி மரணம் நிச்சயம்.,இந்த வைரஸில் பாதிக்கப்படுவதிலும் நம் உலகத்தை இறைவன் காப்பாற்ற வேண்டும். எல்லாவிதமான பயோ லேப்களிலும் இதற்கான ஆராய்ச்சி நடக்கிறது. இறைவன் அந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு உடன் மருந்தை கண்டுபிடிக்கும் இல்ஹாமை தர வேண்டும் என வேண்டிக்கொள்வோம். நம்மிடம் 'நான் அதிராம்படினத்தான்' என பெருமை பட்டுக்கொள்ள நிறைய விசயம் இருந்தாலும்

· சிஃபா மருத்துவமனை முன்னேற்றம் ,

· மார்க்க அறிவுடுன் கூடிய நல்ல கல்வி [ பள்ளிக்கூடம் / கல்லூரி] ,

· பைத்துல்மால்

· ' ஊரின் சுத்தம் பேணுதல் ,

· கடலைமிட்டாய் மாதிரி உள்ள அந்த காலத்து ரோடுகளை சீர்படுத்துதல்,

· தெரு விளக்குகள் இல்லாமை,

· ஊரையே மிரட்டும் குப்பை பிரச்சினை,

போன்ற விசயங்களில் முதல் முயற்சியை எடுத்து வைக்க வெகு காலமாக தவறி விட்டோம்.


குறைகளை பார்க்கவேண்டாம் ..பெரிய பெரிய கம்பெனிகளில் C.E.Oக்கு ஏன் அவ்வளவு உயர்ந்த சம்பளம்..அவன் கம்பெனியின் குறைகளை நிவர்த்தி செய்பவன். குறை சொல்லிக்கொண்டிருப்பவன் அல்ல.

பெரும்பாலும் குறை சொல்வதை குலத்தொழிலாக செய்யும் சிலரை பார்த்திருக்கிறேன்...இவர்களின் குறை 'கூட்டத்துக்கு போனேன் கேசரிக்கு நெய் பத்தாது , டீ சூடா இல்லை , என்னை V.I.P சீட்டில் உட்கார வைக்கவில்லை என்று 'வேக்காட்டு' தனமாக குறை சொல்வார்கள்.

சரி இதைப்படிப்பவர்கள் என்ன செய்யலாம்..சிஃபா மருத்துவமனையில் நடக்கபோகும் நிகழ்வு நம் ஊருக்கு நல்லது செய்யும் விசயம்..ஊருக்கு பெரு நாள் வாழ்த்து சொல்ல அழைப்பவர்கள் அப்படியெ வீட்டில் இருக்கும் ஆண்களை இதில் கலந்து கொள்ள சொல்லளாம், அதிராம் பட்டினத்தில் இருப்பவர்கள் நிச்சயம் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளை எடுத்து சொல்லளாம். [ இது எல்லா தெருவுக்கும் / முஹல்லாவுக்கும் பொருந்தும்]

இந்தியாவின் சுதந்திர போராட்ட விதை தென் ஆப்பிரிக்க ரயில்வேஸ்டேசனில் விதைக்கப்பட்டது. நம் ஊர் சிறக்க ஏதாவது விதைப்போமே...இப்போதே...

ZAKIR HUSSAIN

Note; இதைப்படிப்பவர்களின் கமென்ட்ஸ்யையும் நான் நிகழ்வுக்கு முன் ஊருக்கு அனுப்பிவிடுகிறேன் [ இன்ஷா அல்லாஹ்]

read more...

Thursday, November 11, 2010

ஏன் இந்த அவலம் ? Part -1

என்னை இதுவரைக்கும் அதிகமாக யோசிக்க வைக்கிற  விஷயம் நம்மூரில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரமும், மக்களின் அனுகுமுறையும்

அதாங்க நமதூரில் மக்களுக்கிடையில் இருக்கும் தெருபாகுபடு பற்றி வெளியே சொன்னால் காரி உமிழாத அளவுக்கு பார்கிறார்கள்,  நான் ஒரு வெளியூரு நபரிடம் உரையாடிய போது
 "என்னயா உங்க ஊரு மக்கள பத்தி இவ்ளோ பெருமையா பேசுற, ஆனால் நான் வேறு மாதிரி நான் கேள்விப்பட்டேன் என்றார்", அப்படி என்னத்தான் கேள்விப்பட்டிங்கன்னு கேட்டால், அவரு ஒரு பட்டியலே போடுறாருங்க, என்னால மறுக்கவே முடியலங்க

முதல் அடி : உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?

நான்       : தெருவிட்டு கல்யானம் செய்கிறார்கள்,ஆனால் எல்லா தெருவிலும் சம்பந்தம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு என்னால் மொளனமாக இருப்பதை வீட வேறு வழியே தெரியவில்லை.

இரண்டாம் அடி : உங்களூரில் பெண்ணுக்கு கட்டாயமாக வீடு கொடுத்தே ஆக வேண்டுமாமே, அது போக மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்து தங்க வேண்டுமாமே? என்று அவரே கேட்டுவிட்டு உங்களூர் ஆண் மக்களுக்கு வெட்கமே இல்லையா, வரதட்சனை வாங்க வில்லை என்கிறீர்கள் ஆனால் ஏன் அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள் என்றார்?

நான்            : நான் சில பதில்கள் சொன்னேன், ஆனாலும் சொன்ன பதில் அவருக்குதிருப்தி அளிக்க வில்லை, மக்களே உங்களுடைய பதில் என்ன? நான் அவருக்கு என்ன சொல்ல?

மூன்றாம் அடி : மாற்று மதத்தில் இருக்கும் ஜாதி வேற்றுமைப் போல், உங்களூரிலும் இருக்குதாமே என்றார்

நான் : அப்படியெல்லாம் இல்லையே என்றேன்,
   
அவர்    :  அதற்கு மறுபடியும் அவரே தொடர்ந்தார் வசதியின் அடிப்படையில் வேற்றுமை இருந்தால் பரவாயில்லை அது எல்லா ஊரிலும் உள்ளது தான் ஆனால் உங்களூரில் குடும்பத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கிறார்களாமே, எப்படி அது?, ( உயர்ந்த குடும்பத்தினர்கள் ) அவர்கள் என்ன வானத்திலிருந்த குதித்து விட்டார்கள், உலகம் உருன்டை தம்பி, இன்னிக்கி கீழ் இருப்பவர் நாளைக்கு மேலே போவார்கள், மேலிருப்பவர்கள் கீழே வருவார்கள், தம்பி இதுக்கு மேலயும் என்ன கேள்விக்கேட்க சொல்லுகிறாயா என்றார்

நான்     : வேண்டாம், போதும்

அவர்   : தம்பி உங்களூர் மக்களிடம் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கமுண்டு ஆகையால் எனக்கு உங்களூரைப் பற்றி தெரிந்ததால் தான் இவ்வளவு கேட்டுப்புட்டேன் , தப்பிருந்தா மண்ணிச்சுடுங்கன்னு சொன்னார், இது மாதிரி நிறைய கேள்வி இருக்கு கேட்கட்டுமான்னு வேற கேட்கிறாரு


மேலேயுள்ள உரையாடலை போடாமல் என் கட்டுரையை எழுதலாமென நினைத்தேன், அவரின் உரையாடல் என்னை அதிகமாக யோசிக்க வைத்ததால் பதிந்து விட்டேன்,

இப்பொழுது ஒவ்வொரு கேள்வியாக அலசுவோம்

முதல் கேள்வி :
உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?

அவருடைய கேள்வி நியாயம் தானே?, என்னால் அவரை மறுத்து பேச முடியவில்லை, ஏன் நமதூரில் மட்டும் இப்படி இருக்கிறது?,  சில சில தெருக்களில் ஏன் மக்கள் கல்யாணம் சம்பந்தம் செய்து கொள்வதில்லை?,   ஏன் இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை? என் மனதில்  எப்பொழுதுமே இந்த கேள்வி உதித்து கொண்டே இருக்கும்

இவ்வாறாக நினைக்கக்கூடிய மக்களுக்கு எது தடையாக இருக்கிறது,? (வசதியா)பணமா அல்லது மக்களின் தரமா?

வசதி வாரியாக பிரித்தெடுத்தால், அப்படியும் ஒத்து வரவில்லை, ஏனெனில் அப்படி வசதி குறைவான மக்களும் தயங்குகிறார்களே,

சரி குடும்பத்தின் தரத்தினால் தான் தயங்குகிறார்களா என்றால் எவ்வாறாக தரம் பிரிக்கிறார்கள்? இவர்களை விட அவர்கள் எந்த வகையில் தரத்தில் குறைந்து விட்டார்கள்? அதுவும் இல்லையென்றால் வேறு எது? மக்களே நீங்கள் தான் சொல்ல வேண்டும்


கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு கட்டுரையாக எழுதழாமென இருக்கிறேன்

குறிப்பு : இக்கட்டுரை யார் மனதையும் புண் படுத்தும்  நோக்கத்தில் எழுதப்படவில்லை, மாறாக நமதூரில் மாற்றத்தை கொண்டு வர இக்கட்டுரை ஏன் தூன்றுகோலாக இருக்க கூடாது என்ற ஒரு நல்லென்னத்தினால் தான் எழுதப்பட்டுள்ளது.
read more...