Sunday, December 5, 2010

இன்று 06122010

இன்று 06122010

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில்[ நியு காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க...


'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந்த பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'

...இந்த போலீஸ்தான் ……..ஸ்காட்லாண்ட் யார்ட்????......




ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க ..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா/' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்'

ஒரு சின்ன கதை: ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால்

ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” எ ன துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர ..

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---.அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...'----துறவி

என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடுதுறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...---துறவி

மறுநால் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும் , போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , ல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுதரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

ZAKIR HUSSAIN


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "இன்று 06122010"

ஜெய்லானி said...

அந்த துறவியின் கதையும் ,

ஹதிஸில் இருக்கே..!! பூமியில் ஒரு வழிப்போக்கன் போல இருங்க..மறுமை வீடே சிறந்ததுன்னு :-)

MANO நாஞ்சில் மனோ said...

//உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை//
எலே மக்கா ஜெய்லானி,
ஒரு மார்க்கமா எழுதுரீரே சூப்பராவும் இருக்கே!!!!
[[ம்ஹும் எல்லாம் நான் தந்த யானை பால்'தானே....:]]

ZAKIR HUSSAIN said...

நன்றி சகோதரர் ஜெய்லானிக்கும் , நாஞ்சில் மனோவுக்கும். இது நான்....நானே எழுதிய ஆர்டிக்கில் மனோ...மண்டபத்துலெ ஜெய்லானி எழுதிதந்தது அல்ல.

ZAKIR HUSSAIN

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?