Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org
read more...

Tuesday, May 5, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST
read more...

Saturday, March 28, 2009

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

பெரியார் பேசுகிறார்


இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது
- I

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)
Periyar

தோழர்களே!

எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.


இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.


ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.


இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.



அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.


சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.


சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!


எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!– தொடரும்.....
read more...