Showing posts with label Short Stories. Show all posts
Showing posts with label Short Stories. Show all posts

Tuesday, December 9, 2008

கெட்ட நேரத்தை யோசித்தால் இப்படி தான்

ஒரு தடவை இங்கிலாந்து நாட்டின் எட்டாம் எட்வர்ட் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான்.

அதைப் பார்த்த எட்வர்ட் மன்னர். இதோ பார் சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. ராஜகுடும்பத்துக்கு அது அநாகரீகமான விஷயம்னு சொன்னார்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். அந்த பேரனைப் பார்த்து எட்வர்ட், அப்பொழுது என்னமோ சொல்ல வந்தாயே, என்ன அது? சொல் ன்னாரு.

பேரன் அதைச் சொல்லி இனி பிரயோஜனம் இல்லைன்னான்.

மன்னர் பரவாயில்லை சொல்லுன்னாரு.

பேரன் சிரிச்சுகிட்டே, நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்துக் கிடந்துச்சு அதைத் தான் சொல்ல வந்தேன். நீங்க என்னையும் அடக்கிட்டு, பூச்சியையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்கன்னான்.
read more...

மான அவமானத்துக்கு பயப்படாதவர்கள் யாரேனும் உண்டா?

"ப்ராய்டு'ங்கற பிரபல உயிரியல் விஞ்ஞானி சொன்னது.

""பொதுவாக உடல் ஊனமுற்றவர்களிடம் தாழ்வு மனப்பான்மை இருப்பது சகஜம். அதிலும், செக்ஸ் குறையுள்ளவன், அதை இல்லையென்று காட்டிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வான். ஒருவன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டான். ஒவ்வொரு பெண்ணும் அவன் ஆண்மை அற்றவன் என்று அவனை விவாகரத்து செய்துவிட்டார்கள். அவன் திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விட்டான். மூன்று வருடம் கழித்து திரும்பி வந்தான்.

அவனிடம் அவனுடைய நண்பன், "இத்தனை வருடம் எங்கே போயிருந்தாய்' என்று கேட்டான்.

"நான் கற்பழித்துவிட்டேன் என்று ஒரு பெண் என்மேல் குற்றம் சாட்டினாள். நானும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். நீதிபதி எனக்கு மூன்று வருடம் ஜெயில் தண்டனை தந்துவிட்டார்' என்று சந்தோஷமாகச் சொன்னானாம்
read more...

குழந்தைகள் கூட சில நேரங்களில் குயுக்தியாக பேசுமாமே?

ஆமாங்க... சின்னப் பசங்க பேசிக்கிறதும், சில நேரம் சிந்திக்க வச்சிடும்.

ரெண்டு சிறுவர்கள் பேசிக்கிட்ட விஷயம் இதுதான். ஏண்டா... கண்ணுல அடிபட்டாலோ, எரிச்சலா இருந்தாலோ தாய்ப்பால் ஊத்துறாங்களே. எதுக்குடான்னு ஒருத்தன் கேட்க,

க்கும்... இது தெரியாதா உனக்கு? கண்ணுக்குள்ள பாப்பா இருக்குல்ல அதுக்குத்தான்னு அடுத்த பையன் "நச்சு'ன்னு பதில் சொன்னான்.
read more...

Monday, December 8, 2008

போலீஸ் மூளைக்கும், மாமூல் மனுஷ மூளைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு பத்திரிகை செய்தி.

ஒரு ஏரியாவுல திடீர்னு பவர் கட்டாகி, இருள்ல மூழ்கிருச்சு. அதை யூஸ் பண்ணி, நிறைய பணப் புழக்கமுள்ள ஒரு நகைக் கடையிலயோ, பெட்ரோல் பங்குலயோ, சீட்டுக் கம்பினியிலயோ ஏகப்பட்ட பணம் கொள்ளை அடிச்சுட்டதா செய்தி வருது.

மாமூல் மனுஷங்க, அடப்பாவிகளா, பவர் கட் ஆன அந்த கேப்புல எப்படி மூளைய யூஸ் பண்ணிட்டாங்க பாருன்னு நினைப்பாங்க.

அதே போலீஸ் மூளை, அந்த ஏரியாவுல, அந்த நேரத்துல பவர்கட் ஆனதுக்கு காரணம் என்ன? ஒருவேளை... அந்த ஏரியா எலக்ட்ரிசிட்டி போர்டுல யாரையாவது கைக்குள்ள போட்டுட்டு, ஏதாவது ஒரு கும்பல் ப்ளான் பண்ணி அடிச்சிருப்பாங்களா?ன்னு டக்குன்னுஅங்கிருந்து விசாரணையை ஸ்டார்ட் பண்ணுவாங்க
read more...

பிரச்சினைகள் நெருங்கும்போது, மனம் தளராமல் இருக்க வழி?

நெருக்கடி பிரச்சினைகள் நிச்சயம் வேற ஒரு புதிய விடியலைக் கொடுக்கணும்னு நம்பிக்கை வைக்கணும். எப்படின்னா...

ஜெர்மனி நாட்டுல பிறந்த ஜான் கூட்ன்பர்க்ங்க ஓவியரோட ஓவியங்களைப் பல பேர் விரும்பினாங்க. விலைக்கும் கேட்டாங்க. ஒரே நேரத்துல ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க கேட்டதால, அத்தனை பேருக்கும் எப்படித் தர்றதுன்னு யோசிச்சாரு.

ஓவியத்தை மரத்திலேயே செதுக்கினாரு. அதன் மீது மையத் தடவி, அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி எடுப்பது என்கிற முறை உருவானது. இந்த முறையால, நுõற்றுக்கணக்கான பேர்களுக்கு அவர் ஓவியங்கøக் கொடுத்து வந்தாரு.

இதே முறையில எழுத்துக்களைச் செதுக்கி அதை அச்சிட்டு செய்திகளை வெளியிட்டாரு. இந்த முயற்சி வெற்றியடைஞ்ச உடனே, அச்சுக் கூட்டத்தையும் விரிவுபடுத்தினாரு
read more...