Tuesday, November 16, 2010

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்




ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்

நேற்றும் இன்றும் டெலிபோனில் நமது சொந்த பந்தங்களுடனும், நண்பர்களுடனும் ,மற்றும் நமது மாவட்டத்தில் ஆட்சியில் [ கலெக்டர் & அவரது அலுவலகம்] இருக்கும் சிலருடனும் , பேச வாய்ப்பு கிடைத்தது. இதில் நெத்தியடியாக சிலர் சொன்னது [ முக்கியமாக உங்கள் ஊரில் திறமையானவர்கள் ரொம்ப அதிகம் ..ஒற்றுமை இருந்தால் உங்கள் ஊர் ஒரு எடுத்துக்காட்டுக்குறிய ஊராக மாறி விடும்...'].நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பது கலெக்டர் அலுவளகம் , செக்ரடேரியட், இன்னும் கொஞ்சம் போனால் பாராளுமன்றம் வரை தெரிந்து இருக்கிறது..எப்படி ஊரில் உள்ள அடிப்படை வசதிகளில் மிக கடைசி நிலையில் இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை...பதில் மிக சுலபம் ....”ஓற்றுமை” நம்மிடம் இல்லை.

ஊர் சம்பந்தமாக ஒரு நிகழ்வு நடக்க உள்ளது. அதில் ஊரில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் நிச்சயம் நமது ஊரில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். முதலில் நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

18-11-2010 [ வியாழன்] காலை 10.00 மணிக்கு

சிஃபா மருத்துவமனை வளாகத்தில்

இதை நடத்துவது அதிராம் பட்டினம் நகர வளர்ச்சி கழகம்.Adirampattinam Rural development Association [ இலங்கை தமிழில் ' அதிராம்பட்டின நலனபிவிருத்தி சம்மேளனம்....மொழிபெயர்ப்பில் தவறு இருப்பின் இருக்கவே இருக்கிறார்கள் ' சகோதரர் அதிரை அஹ்மது , சகோதரர் கிரவுன்...உங்கள் தமிழறிவு பொறாமைப்பட வைக்கிறது]

சரி ஏன் அனைத்து தெருவாசிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்ங்கிறேன். நமது ஊரின் சுத்தம் மிகக்கேவல நிலைக்கு போய் விட்டது. ஆப்பிரிக்க நாடுகளை மிஞ்சும் கொசுக்கள். ஒரு மழை பெய்தாலே தஞ்சாவூரிலும் / பட்டுக்கோட்டையிலும் ஆஸ்பத்திரி டோக்கனுக்கு பிச்சை எடுக்காத குறையாக கெஞ்ச வேண்டிய நிலை. ஆயிரக்கணக்கில் மருந்து செலவு. இப்படி நமது வருமானத்தில் பெரும் பங்கை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் இந்த பிரச்சினைகள ஒழித்து கட்ட ஒற்றுமையுடன் சில செயல்களை சொன்னால் ஆயிரத்துஎட்டு பிரிவினை வாதங்கள்...


உங்களின் ECG யில் ஒரு சின்ன மாற்றம் , ரத்த கிரியேட்டினைனில் கொஞ்சம் அதிகம், எப்போதும் ஒழுங்கா தூங்கும் நீங்கள் இரவில் ஒரு 3 ணிநேரம் தாமதமாகத்தான் தூங்க முடிகிறது போன்ற குறைகள் ...நீங்கள் எந்த தெருவை சார்ந்திருந்தாலும், எந்த கரை வெட்டி உடுத்தி, எந்த இயக்கதை சார்ந்திருந்தாலும் உடன் தேவை உங்களுக்கு “மருத்துவ சேவை”...பல சமயங்களில் நம் ஊர் காரர்கள் நம்மிடம் ஆஸ்பத்திரி வசதிகள் இருந்தும் [ சில முன்னேறங்கள் செய்ய முடியாமல் இருப்பதால்] நம் ஊர் ஆட்களை ' ஆரம்ப கால அவசர சிகிச்சை' [Initial Emergency Treatment- செய்யாமல் [ இதய நோயாளிகளை ] பட்டுக்கோட்டைக்கும் / தஞ்சாவூருக்கும் காரில் கொண்டுபோய் 'எவ்வளவோ முயற்சி செய்தோம்...ப்ச்...ஒரு ஒரு மணிக்கு முன்னாலெ கொண்டு வந்திருந்தா,...போன்ற பழைய வசனங்களை கேட்டு விட்டு ..வழக்கம் போல் நம் ஊர் பள்ளிவாசல்களில் இதுவரை மைக்கை சரியாக “ஆன்’ பன்னதெரியாதவர்களை விட்டு "மரண அறிவிப்பு' சொல்ல பிசியாகிவிடுகிறோம்.

ஊரின் இப்போதைய நிலை என்ன தெரியுமா....70% அதிராம்பட்டினத்து மக்கள் World Helath Organisation [ WHO] குறிப்பிடும் fasting blood sugar level , Hba1C அளவை தாண்டி விட்டார்கள்..இதன் தாக்கம் பற்றி நான் எழுதினால் சில சர்க்கரை நோயாளிகள் கடுப்பில் எனக்கு வஞ்சினை வைத்தாலும் ஆச்சர்யம் இல்லை . மற்றும்,இப்போது நமது நாட்டில் பரவி வரும் இந்த வைரஸ் NDM-1, New Delhi metallo-beta-lactamase-1 எந்த விதமான ஆன்டிபயோடிக்கும் 'பெப்பே' காட்டிவிடும்...விளையாட்டாக கருத வேண்டாம் சயனைட் மாதிரி மரணம் நிச்சயம்.,இந்த வைரஸில் பாதிக்கப்படுவதிலும் நம் உலகத்தை இறைவன் காப்பாற்ற வேண்டும். எல்லாவிதமான பயோ லேப்களிலும் இதற்கான ஆராய்ச்சி நடக்கிறது. இறைவன் அந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு உடன் மருந்தை கண்டுபிடிக்கும் இல்ஹாமை தர வேண்டும் என வேண்டிக்கொள்வோம். நம்மிடம் 'நான் அதிராம்படினத்தான்' என பெருமை பட்டுக்கொள்ள நிறைய விசயம் இருந்தாலும்

· சிஃபா மருத்துவமனை முன்னேற்றம் ,

· மார்க்க அறிவுடுன் கூடிய நல்ல கல்வி [ பள்ளிக்கூடம் / கல்லூரி] ,

· பைத்துல்மால்

· ' ஊரின் சுத்தம் பேணுதல் ,

· கடலைமிட்டாய் மாதிரி உள்ள அந்த காலத்து ரோடுகளை சீர்படுத்துதல்,

· தெரு விளக்குகள் இல்லாமை,

· ஊரையே மிரட்டும் குப்பை பிரச்சினை,

போன்ற விசயங்களில் முதல் முயற்சியை எடுத்து வைக்க வெகு காலமாக தவறி விட்டோம்.


குறைகளை பார்க்கவேண்டாம் ..பெரிய பெரிய கம்பெனிகளில் C.E.Oக்கு ஏன் அவ்வளவு உயர்ந்த சம்பளம்..அவன் கம்பெனியின் குறைகளை நிவர்த்தி செய்பவன். குறை சொல்லிக்கொண்டிருப்பவன் அல்ல.

பெரும்பாலும் குறை சொல்வதை குலத்தொழிலாக செய்யும் சிலரை பார்த்திருக்கிறேன்...இவர்களின் குறை 'கூட்டத்துக்கு போனேன் கேசரிக்கு நெய் பத்தாது , டீ சூடா இல்லை , என்னை V.I.P சீட்டில் உட்கார வைக்கவில்லை என்று 'வேக்காட்டு' தனமாக குறை சொல்வார்கள்.

சரி இதைப்படிப்பவர்கள் என்ன செய்யலாம்..சிஃபா மருத்துவமனையில் நடக்கபோகும் நிகழ்வு நம் ஊருக்கு நல்லது செய்யும் விசயம்..ஊருக்கு பெரு நாள் வாழ்த்து சொல்ல அழைப்பவர்கள் அப்படியெ வீட்டில் இருக்கும் ஆண்களை இதில் கலந்து கொள்ள சொல்லளாம், அதிராம் பட்டினத்தில் இருப்பவர்கள் நிச்சயம் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளை எடுத்து சொல்லளாம். [ இது எல்லா தெருவுக்கும் / முஹல்லாவுக்கும் பொருந்தும்]

இந்தியாவின் சுதந்திர போராட்ட விதை தென் ஆப்பிரிக்க ரயில்வேஸ்டேசனில் விதைக்கப்பட்டது. நம் ஊர் சிறக்க ஏதாவது விதைப்போமே...இப்போதே...

ZAKIR HUSSAIN

Note; இதைப்படிப்பவர்களின் கமென்ட்ஸ்யையும் நான் நிகழ்வுக்கு முன் ஊருக்கு அனுப்பிவிடுகிறேன் [ இன்ஷா அல்லாஹ்]


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்"

Unknown said...

Thanks for the commendation...! However, the article is very nice...! Thought provoking...! Thank you brother Zakir for bringing out this timely message...! May Allah reward you for your efforts. Insha Allah, I'll be attending the said meeting and will give my feed backs and outcome of the meeting.
-Adirai Ahmad
adiraiahmad@gmail.com

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்.

என்ற இந்த கட்டுரை ஊருக்கும், நமக்கும். நமக்கு பின் வரும் நமது வாரிசுக்களுக்கும் நல்ல விஷயம்.

mohamed said...

http://babrimasjidnews.blogspot.com/

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?