அதாங்க நமதூரில் மக்களுக்கிடையில் இருக்கும் தெருபாகுபடு பற்றி வெளியே சொன்னால் காரி உமிழாத அளவுக்கு பார்கிறார்கள், நான் ஒரு வெளியூரு நபரிடம் உரையாடிய போது
"என்னயா உங்க ஊரு மக்கள பத்தி இவ்ளோ பெருமையா பேசுற, ஆனால் நான் வேறு மாதிரி நான் கேள்விப்பட்டேன் என்றார்", அப்படி என்னத்தான் கேள்விப்பட்டிங்கன்னு கேட்டால், அவரு ஒரு பட்டியலே போடுறாருங்க, என்னால மறுக்கவே முடியலங்க
முதல் அடி : உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?
நான் : தெருவிட்டு கல்யானம் செய்கிறார்கள்,ஆனால் எல்லா தெருவிலும் சம்பந்தம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு என்னால் மொளனமாக இருப்பதை வீட வேறு வழியே தெரியவில்லை.
இரண்டாம் அடி : உங்களூரில் பெண்ணுக்கு கட்டாயமாக வீடு கொடுத்தே ஆக வேண்டுமாமே, அது போக மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்து தங்க வேண்டுமாமே? என்று அவரே கேட்டுவிட்டு உங்களூர் ஆண் மக்களுக்கு வெட்கமே இல்லையா, வரதட்சனை வாங்க வில்லை என்கிறீர்கள் ஆனால் ஏன் அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள் என்றார்?
நான் : நான் சில பதில்கள் சொன்னேன், ஆனாலும் சொன்ன பதில் அவருக்குதிருப்தி அளிக்க வில்லை, மக்களே உங்களுடைய பதில் என்ன? நான் அவருக்கு என்ன சொல்ல?
மூன்றாம் அடி : மாற்று மதத்தில் இருக்கும் ஜாதி வேற்றுமைப் போல், உங்களூரிலும் இருக்குதாமே என்றார்
நான் : அப்படியெல்லாம் இல்லையே என்றேன்,
அவர் : அதற்கு மறுபடியும் அவரே தொடர்ந்தார் வசதியின் அடிப்படையில் வேற்றுமை இருந்தால் பரவாயில்லை அது எல்லா ஊரிலும் உள்ளது தான் ஆனால் உங்களூரில் குடும்பத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கிறார்களாமே, எப்படி அது?, ( உயர்ந்த குடும்பத்தினர்கள் ) அவர்கள் என்ன வானத்திலிருந்த குதித்து விட்டார்கள், உலகம் உருன்டை தம்பி, இன்னிக்கி கீழ் இருப்பவர் நாளைக்கு மேலே போவார்கள், மேலிருப்பவர்கள் கீழே வருவார்கள், தம்பி இதுக்கு மேலயும் என்ன கேள்விக்கேட்க சொல்லுகிறாயா என்றார்
நான் : வேண்டாம், போதும்
அவர் : தம்பி உங்களூர் மக்களிடம் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கமுண்டு ஆகையால் எனக்கு உங்களூரைப் பற்றி தெரிந்ததால் தான் இவ்வளவு கேட்டுப்புட்டேன் , தப்பிருந்தா மண்ணிச்சுடுங்கன்னு சொன்னார், இது மாதிரி நிறைய கேள்வி இருக்கு கேட்கட்டுமான்னு வேற கேட்கிறாரு
மேலேயுள்ள உரையாடலை போடாமல் என் கட்டுரையை எழுதலாமென நினைத்தேன், அவரின் உரையாடல் என்னை அதிகமாக யோசிக்க வைத்ததால் பதிந்து விட்டேன்,
இப்பொழுது ஒவ்வொரு கேள்வியாக அலசுவோம்
முதல் கேள்வி : உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?
அவருடைய கேள்வி நியாயம் தானே?, என்னால் அவரை மறுத்து பேச முடியவில்லை, ஏன் நமதூரில் மட்டும் இப்படி இருக்கிறது?, சில சில தெருக்களில் ஏன் மக்கள் கல்யாணம் சம்பந்தம் செய்து கொள்வதில்லை?, ஏன் இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை? என் மனதில் எப்பொழுதுமே இந்த கேள்வி உதித்து கொண்டே இருக்கும்
இவ்வாறாக நினைக்கக்கூடிய மக்களுக்கு எது தடையாக இருக்கிறது,? (வசதியா)பணமா அல்லது மக்களின் தரமா?
வசதி வாரியாக பிரித்தெடுத்தால், அப்படியும் ஒத்து வரவில்லை, ஏனெனில் அப்படி வசதி குறைவான மக்களும் தயங்குகிறார்களே,
சரி குடும்பத்தின் தரத்தினால் தான் தயங்குகிறார்களா என்றால் எவ்வாறாக தரம் பிரிக்கிறார்கள்? இவர்களை விட அவர்கள் எந்த வகையில் தரத்தில் குறைந்து விட்டார்கள்? அதுவும் இல்லையென்றால் வேறு எது? மக்களே நீங்கள் தான் சொல்ல வேண்டும்
சரி குடும்பத்தின் தரத்தினால் தான் தயங்குகிறார்களா என்றால் எவ்வாறாக தரம் பிரிக்கிறார்கள்? இவர்களை விட அவர்கள் எந்த வகையில் தரத்தில் குறைந்து விட்டார்கள்? அதுவும் இல்லையென்றால் வேறு எது? மக்களே நீங்கள் தான் சொல்ல வேண்டும்
கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு கட்டுரையாக எழுதழாமென இருக்கிறேன்
குறிப்பு : இக்கட்டுரை யார் மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை, மாறாக நமதூரில் மாற்றத்தை கொண்டு வர இக்கட்டுரை ஏன் தூன்றுகோலாக இருக்க கூடாது என்ற ஒரு நல்லென்னத்தினால் தான் எழுதப்பட்டுள்ளது.
18 comments: on "ஏன் இந்த அவலம் ? Part -1"
முதலில் வசதி
பிறகு தரம் ஆனால் இது அந்தந்த மனிதரின் மனநிலை/குணநலன் பொறுத்து மாறுபடும்!
இக்கட்டுரை எழுதிய நபர் யார் என்ற விபரம் இல்லை, இருந்தாலும் இதோ பதில்கள்.
அதிரையில் மட்டுமில்லை தெரு வேறுபாடு பாகுபாடு, எல்லா ஊர்களிலும் தான் உள்ளது. நீங்கள் சொல்லும் நபர் எந்த ஊர் என்பதை சொல்லுங்கள் அந்த நபரின் ஊரில் உள்ள தெரு பாகுபாடுகள், வேறுபாடுகளை நாமும் சுட்டிக்காட்டுவோம். தக்வாவுடன் உள்ள மார்க்க அறிவு இல்லாததால் தான் பொதுவாக இது எல்லா பகுதிகளிலும் உள்ளது தான்.
ஒரு காலத்தில் இருந்த தெரு பாகுபாடு இன்று அதிரையில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை, மார்க்க தெளிவும், கல்வி அறிவும் இந்த பாகுபாட்டை கொஞ்சம் தகர்த்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது போன் பெண்ணுக்கு வீடு என்ற நிலையை இன்றைய இளைஞர்கள் தன் பெற்றோர்களிடம் போராடி வெற்றியும் பெற்று வருகிறார்கள் என்பதை நாம் காணமுடிகிறது.
இன்ஷா அல்லாஹ் வரும் காலத்தில் இது அறவே இல்லாமல் போகும்.
இன்று தெருவிட்டு திருமணம் அதிரையில் நடைப்பெற்று வருகிறது. இருந்தாலும் இது திருமணம் செய்யும் மணமக்கள், மற்றும் அவர்களின் பெற்றோர் விருப்பம். தெருவிட்டு தெரு திருமணம் செய்வதால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது நடைமுறையில் இல்லாத தகவல் என்பதை அந்த வெளியூர் சகோதரருக்கு அழுத்தமாக எடுத்துச்சொல்லுங்கள் சகோதரரே.
எத்தனையோ குடும்பங்கள் மற்ற தெருக்களிலும், வெளியூர்களிலும், வெளி மாநிலத்திலும் திருமணம் செய்திருக்கிறார்கள், மிக சந்தோசமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்த்து வருகிறார்கள்.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட மற்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு, அதிரை மட்டுமல்ல நம் முஸ்லீம் சமுதாயத்திற்கு தேவை தெளிவான மார்க்க அறிவு, இதற்கான விழிப்புணர்வு.
நவீண சைத்தான்களின் (டிவி சீரியல் போன்றவைகள்) ஆதிக்கமும் நம் சமூக மக்களை (அதிரை மட்டுமல்ல) நல்வழிப்படுத்துவதற்கு தடையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதில் என்ன வேதனை என்றால் அதிரையில் தற்போதைய நிலை தெருப்பிரிவு என்று ஒரு காலத்தில் எழுந்த கேள்வியை மிஞ்சிவிட்டது இயக்கங்களின் பிரிவினை. கவணிக்கவும் தமிழக அளவில் இது கொடிகட்டி பறக்கிறது. இது பற்றி அந்த வெளியூர் சகோதரர் என்ன சொல்லப்போகிறார்?
சைத்தானினால் தூண்டப்பட்டுவரும் தீய எண்ணங்கள், செயல்களை தூக்கி எறிய இன்றைய நம் சமுதாயத்துக்கு தேவை தக்வாவை நிலைநிறுத்தும் மார்க்க விழிப்புணர்வும், மார்க்க அறிவுமே.
மேலும் பேசலாம், இது பற்றி....
//உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?//
அதிரையில் எந்த சங்கமாவது தீர்மானம் போட்டுள்ளதா?
அதிரையில் உள்ள எந்த இயக்கங்களாவது தீர்மானம் போட்டுள்ளதா?
அதிரையில் உள்ள எந்த குடும்பத்திலாவது தீர்மானம் போட்டுள்ளார்களா?
ஓர் உதாரணம் காட்ட முடியுமா?
//இக்கட்டுரை எழுதிய நபர் யார் என்ற விபரம் இல்லை//
இக்கட்டுரை எழுதிய நபர் அ.எ தளத்தின் நடத்துனர்
//நீங்கள் சொல்லும் நபர் எந்த ஊர் என்பதை சொல்லுங்கள் அந்த நபரின் ஊரில் உள்ள தெரு பாகுபாடுகள், வேறுபாடுகளை நாமும் சுட்டிக்காட்டுவோம்//
நாகர்கோவில் என்ற ஊரைச் சார்ந்தவர்...
//தக்வாவுடன் உள்ள மார்க்க அறிவு இல்லாததால் தான் பொதுவாக இது எல்லா பகுதிகளிலும் உள்ளது தான்.//
சரியா சொன்னீர்கள், அதே வேலையில் நமதூரில் மார்க்க அறிவுப்பெற்றவர்களிடமும் இது இருக்கிறது என்பது தான் நிதர்ச்சனமான உன்மை, எல்லாப் பகுதிகளிலும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், கீழக்கரையில் தான் இது அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன், மற்ற ஊர்களிலும் இருந்தால் நீங்கள் விளக்குங்களேன்
//இன்ஷா அல்லாஹ் வரும் காலத்தில் இது அறவே இல்லாமல் போகும்//
இன்ஷா அல்லாஹ் மாறிப்போனால் மகிழ்ச்சித்தானே.
//எத்தனையோ குடும்பங்கள் மற்ற தெருக்களிலும், வெளியூர்களிலும், வெளி மாநிலத்திலும் திருமணம் செய்திருக்கிறார்கள், மிக சந்தோசமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்த்து வருகிறார்கள்.//
இதில் வெளியூரையோ, வெளி மாநிலத்தையோ சொல்ல வில்லை சகோதரரே, மற்ற தெருக்களைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறேன்,
வெளியூரில் கல்யாணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை நானும் அறிவேன், அதே வேலையில் நமதூர் பெண்களின் கூற்றுப்படி வெளியூரில் வேண்டுமானால் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம், உள்ளூரில் சம்பந்தம் வேண்டாம், என்ன கொடுமை இது.
நான் சொல்லுவது விசித்திரமாக இருந்தால், கொஞ்சம் தங்கள் வீட்டு மக்களிடம் விசாரித்துத்தான் பாருங்களேன்
//அதே வேலையில் நமதூர் பெண்களின் கூற்றுப்படி வெளியூரில் வேண்டுமானால் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம், உள்ளூரில் சம்பந்தம் வேண்டாம், என்ன கொடுமை இது//
கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் தம்பி... மீண்டும் சொல்கிறேன், முந்தைய காலம்போல் அல்லாமல் அதிகம் இன்றைய காலகட்டத்தில் முதலில் மணமக்களின் விருப்பமும், பெற்றோரின் விருப்பமும் தான் திருமணங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறேன்.
-----
மற்றும் கீழ் உள்ளவைகளுக்கு பதில் தந்தால் நல்லது.
//உங்க ஊருல தெருவிட்டு கல்யாணம் செய்ய மாட்டீர்களாமே, அப்படி யாராவது சம்பந்தம் செய்தால் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்களாமே?//
அதிரையில் எந்த சங்கமாவது தீர்மானம் போட்டுள்ளதா?
அதிரையில் உள்ள எந்த இயக்கங்களாவது தீர்மானம் போட்டுள்ளதா?
அதிரையில் உள்ள எந்த குடும்பத்திலாவது தீர்மானம் போட்டுள்ளார்களா?
ஓர் உதாரணம் காட்ட முடியுமா?
இன்றைய இளைய சமுதாயம், இந்த தெரு பாகுபாடுகளை விரும்பவில்லை என்பதை அன்றாடம் நாம் பழகிவரும் நண்பர்களிடம் பார்க்கமுடிகிறது. இதுவே ஒரு அடித்தளம். இளைய சமுதாயத்திடமிருந்து இது தொடர்வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
//தாஜுதீன் சொன்னது..... தக்வாவுடன் உள்ள மார்க்க அறிவு இல்லாததால் தான் பொதுவாக இது எல்லா பகுதிகளிலும் உள்ளது தான்.//
//அதிரை express சொன்னது... அதே வேலையில் நமதூரில் மார்க்க அறிவுப்பெற்றவர்களிடமும் இது இருக்கிறது என்பது தான் நிதர்ச்சனமான உண்மை, எல்லாப் பகுதிகளிலும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், கீழக்கரையில் தான் இது அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன், மற்ற ஊர்களிலும் இருந்தால் நீங்கள் விளக்குங்களேன்//
மார்க்க அறிவு பெற்றவர்கள் என்று சொல்பவர்களிடம் தக்வா (அல்லாஹ்வின் பயம்) இருந்தால் நிச்சயம் மார்க்கத்துக்கு புறம்பானவைகளை செய்ய மாட்டார்கள்.
தம்பி.. போதுவாக சொல்லப்பட்டது.. இது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும், இதில் கிழக்கரை, அதிரைப்பட்டினம்,காயல்பட்டினம், கூத்தானல்லூர், மதுக்கூர், அத்திகடை போன்ற ஊர்கள் என்று பட்டியல் போட வேண்டியதில்லை.
நண்பர்களாக இருந்த பல தெருவாசிகள் சம்பந்திகளாக மாறியிருக்கிறார்கள். இது அதிகம் நடைப்பெறாவில்லை.
அல்லாஹ் நாடினால் இன்று நண்பர்களாக இருக்கும் பல தெருவாசிகள் நாளை சம்பந்திகளாக மாறலாம். அல்லாஹ் போதுமானவன்.
//அதிரையில் எந்த சங்கமாவது தீர்மானம் போட்டுள்ளதா?//
இல்லை
//அதிரையில் உள்ள எந்த இயக்கங்களாவது தீர்மானம் போட்டுள்ளதா?//
இல்லை, சில இயக்கங்கள் இந்த வேற்றுமையை அகற்றுவதற்கு பாடுபட்டிருக்கிறார்கள்
//அதிரையில் உள்ள எந்த குடும்பத்திலாவது தீர்மானம் போட்டுள்ளார்களா?//
எந்த கும்பத்தில் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை, ஆனால் இது ஒரு எழுதப்படாத தீர்மானம்.
//ஓர் உதாரணம் காட்ட முடியுமா?//
உதாரணம் காட்டுவதில் எந்த சிரமமும் இல்லை, அப்படி காட்டிணால் அது தனி மனித / குடும்பத் தாக்குதலாகவே கருதுகிறேன்
//இன்றைய இளைய சமுதாயம், இந்த தெரு பாகுபாடுகளை விரும்பவில்லை என்பதை அன்றாடம் நாம் பழகிவரும் நண்பர்களிடம் பார்க்கமுடிகிறது. இதுவே ஒரு அடித்தளம். இளைய சமுதாயத்திடமிருந்து இது தொடர்வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.//
நிச்சயமாக இந்த வேறுபாடு இன்றைய நம்மூரின் இளைஞர்களிடம் இல்லை என்பது என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியும்,ஆனால் நான் இன்றைய பெற்றோர்களிடம் இதை எப்படி ஒழிக்கலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த கட்டுரையை எழுதினேன்.
//கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் தம்பி... மீண்டும் சொல்கிறேன்//
நிறைய கூறலாம் காக்க, அதை இந்த கருத்துரையிலோ அல்லது ஒரு கட்டுரையாக போட்டால் நன்றாகாது, தாங்களுக்கு தேவைப்பட்டால் ஈ.மெயிலில் விளக்குகிறேன்
தம்பி (அதிரைஎக்பிரஸ்) உங்களின் ஆதங்கம் ஆய்வுக்குள் ஆழ்த்தியிருக்கிறது, இன்று நேற்றா இதைப் பற்றி பேசுகிறோம் இந்தச் சம்வத்தை ஓர் கட்டுரையிலோ அல்லது என்னற்ற பின்னூட்டங்கள் போட்டாலும் இவைகள் நமக்குள்ளேதான் சுற்றி வரும் எட்ட வேண்டிய இடத்திற்கு எந்த அளவுக்கு எட்டுமென்று சொல்ல முடியாது.
ஆதங்கள் நியாயமானதே, ஒவ்வொரு அதிரைப்பட்டினத்து தனிமனிதனுக்கும் மார்க்க சிந்தனையோடு வாழ்வோடு ஒன்றிருக்க வேண்டும் அல்லாஹ் நம் எண்ணங்களை நிறைவேற்றுவான்.
//இன்று நேற்றா இதைப் பற்றி பேசுகிறோம் இந்தச் சம்வத்தை ஓர் கட்டுரையிலோ அல்லது என்னற்ற பின்னூட்டங்கள் போட்டாலும் இவைகள் நமக்குள்ளேதான் சுற்றி வரும் எட்ட வேண்டிய இடத்திற்கு எந்த அளவுக்கு எட்டுமென்று சொல்ல முடியாது.//
வாங்க காக்க அபூஇப்றாகிம், இந்த மண நோயைப் போக்க வேறேது வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்,
இந்த விசயத்தில்...
முக்கியமாக பெற்றோர்கள் உறுதி எடுக்க வேண்டும்.
அடுத்தது ஆண்மக்கள்...
பெண் வீட்டாரிடம் இனி வரதட்சனை வேண்டாம்.
வீடும் வேண்டாம். என்று,..
எனக்கு மூன்று மகன்கள் உண்டு, இன்ஷா அல்லாஹ் எதுவும் வாங்கப் போவதில்லை என்று உறுதி
எடுத்து விட்டேண். இங்கே பார்ப்போம்...
நேசிப்போம், முதல்ல தெரு விட்டு தெரு சென்று எங்கே வேறுபாடுகள் கானுகிறார்களோ அந்தப் பள்ளிக்குள் சென்று நாம் தொழுவோம், அவர்களுக்கு ஓர் இழப்பு என்றால் முன்னின்று உதவிடுவோம், அங்கே ஒன்று சேருவோம் நேசம் காட்டுவோம், அட நம்மளோடவே இருக்கானேன்னு யோசிக்க வைப்போம், பக்கத்தில் வருவார்கள் நல்லாத்தானே இருக்கான் நாமதான் தப்பா எடுத்துக்கிறோமோன்னு கொஞ்சம் வெடகப் பட்டால் அங்கேதான் நாம் ஒன்றாக கலக்கிறோம் அவர்களோடு. அடுத்து என்ன சொல்லியாத் தெரியனும்... இன்ஷா அல்லாஹ் நாம் ஒவ்வொருவரும் மனம் வைத்தால் மனம் வெல்வோம் !
இவைகள் எழுத்துக் கோர்வைக்காக எழுதவில்லை, சிலதை (அனுபவத்தில்) பட்டால்தான் தெரியும் ஏன் விரிசல் ஏன் ஒட்டவில்லை என்று !
சகோதரர் தாஜுடேன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசிகிறார்.இறை அருளால் அதிரையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் மிகவும் குறைந்துள்லது என்பதை மகிழ்வுடன் எற்றுக்கொள்ள வேண்டும் தவிர மறக்க கூடாது.எல்லா ஊரிலும் இது போன்று இல்லை.ஆனால் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
கட்டுரையாளர் அதிரை சேர்ந்தவராக இருப்பதால் தனது உஊரில் நிலவும் சூழ்நிலையை பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் கிழக்கரை போன்று சில ஊர்களை தவிர வேறு எங்கும் இல்லை.
தெருக்களுகிடையில் சம்பந்தம் வைத்து கொள்வது மக்களால் எற்படுத்தி கொண்டது தவிர ஜமாத் அல்லது சங்களின் சட்டம் இல்லை என்பதை நாமும் பார்க்க வேண்டும்
வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்
வேண்டாம் வரதட்சணை said...
//வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்//
வாருங்கள் கை கோர்ப்போம்
அதிரையில் இருகும் கெவலெமான கலட்சராம் பென் விடிர்கு ஆன் மஹன் செல்வது இதும் வரதசனை தான் ( வரதசனை யென்ட்ரால் பெத தாயை விபசரம் செஇவதை விட அரிவிர்ரு க தகெமான பவம் அஹும்) அனல் இவர்கலுகு வரதசனை யென்ட்ரெ தெரியத அலவுகு அஹிவிட்டது நான் விடு வஙமாடென் இன்ஷா அல்லாஹ் யெனொட வயது 19 இதை பொல் யெனுடய நன்பர்கலுகும் நான் இதை பட்ரி அரிவிது அவர்கலௌம் நெர் வலியில் கொன்டு செல்வென் இதுவெ வலியஹும் இன்ஷா அல்லஹ்
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?