சிம்பிள் சேவ் (Simple Save) என்ற பெயரில் எச்.பி. நிறுவனம் அண்மையில் பேக் அப் செய்வதற்கான ஹார்ட் டிஸ்க்குகளை வெளியிட்டுள்ளது. இது தானாக பேக் அப் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது. இதனை கம்ப்யூட்டருடன் இணைத்து விட்டால் போதும்; தானாக அனைத்து பைல்களையும் பேக் அப் செய்துவிடும். தொழில் நுட்பத் தினை மிகவும் எளிதாகவும் அதிகப் பயனுள்ள தாகவும் மக்களுக்குக் கொண்டு சென்றிடும் பணியை எச்.பி.என்றும் தந்து வருகிறது. அந்த வகையில் தொழில் நுட்பம் குறித்து படித்தால் தான் பயன்படுத்த முடியும் என்றில்லாத வகையில், குழப்பமான ஆப்ஷன்கள் இல்லாமல் எளிதாக இயக்கக் கூடிய டிரைவாக இது வடிவமைக்கப் பட்டுள்ளதாக எச்.பி. நிறுவனத்தின் அதிகாரி, இந்த டிஸ்க்குகளை அறிமுகப்ப டுத்துகையில் கூறியுள்ளார்.
சிம்பிள்சேவ் வரிசையில் தற்போது பல மாடல்கள் வந்துள்ளன. சிம்பிள் சேவ் போர்ட்டபிள் 320 ஜிபி மற்றும் 550 ஜிபி கொள்ளளவுத் திறனுடனும், சிம்பிள் சேவ் டெஸ்க்டாப் 1 மற்றும் 2 டெராபைட் திறனுடனும் வந்துள்ளன. இவை அனைத் திலும் பேக் அப் வேலைக்கான சாப்ட்வேர் பதியப்பட்டே தரப்படுகின்றன.
இந்த சாப்ட்வேர் பைல்களைத் தானாகத் தேடிப்பார்த்து பேக் அப் செய்து கொள்கின்றன. முதல் முறை பேக் அப் செய்த பின்னர் கம்ப்யூட்டர் ஒரு பைலை இயக்காதபோது செக் செய்து பேக் அப் செய்து கொள்கிறது. ஐந்து நிமிடங்கள் எந்த வேலையும் மேற்கொள்ளாமல் இருந்தால் உடனே இந்த பேக் அப் வேலை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரே ஹார்ட் டிஸ்க்கில் பல பெர்சனல் கம்ப்யூட்டர்களில் உள்ள டேட்டாவினை பேக் அப் செய்து கொள்ளும் வசதி இதில் உள்ளது. ஒவ்வொரு கம்ப்யூட்டரையும் தனித்தனி எழுத்துக்கள் மூலம் அடையாளம் கண்டு பேக் அப் செய்து கொள்கிறது.
இந்த ஹார்ட் டிஸ்க்குகளை அனைத்தும் வெப்பத்தை வெளியிடும் கேஸ்களில் அமைக்கப்பட்டு வருவதால், சிறிய மின்விசிறி எதுவும் இணைக்கப் படாமலேயே வெப்பம் இல்லாமல் இருக்கின்றன. இது இணைக் கப்படும் யு.எஸ்.பி. 2 போர்ட்டிலிருந்து இயங்குவதற்கான மின்சக்தியை எடுத்துக் கொள்கின்றன. இதனால் தனி பவர் கேபிள் தேவையில்லை. இது வைக்கப்பட்டிருக்கும் கேஸ் அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அன்றாடம் நாம் இந்த டிஸ்க்குகளுக்குக் கொடுக்கும் அதிர்ச்சி இதனைப் பாதிக்காத வகையில் உள்ளது. அனைத்து வகையான (நூற்றுக் கணக்கில்) பைல் வகைகள் இதில் சப்போர்ட் செய்யப் படுகின்றன. யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தவுடன் வேலை செய்திடத் தொடங்கி விடுகிறது.
பெரிய அளவிலான பைல்களையும் கையாள்கிறது. இதில் என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டம் இருப்பதால் பைல்களைக் கையாள்வதில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த டிஸ்க்குகளுக்கு இரண்டு ஆண்டு வாரண்டி தரப்படுகிறது. சிம்பிள் சேவ் போர்டபிள் டிஸ்க் 320 ஜிபி ரூ. 5,510; 500 ஜிபிக்கு ரூ. 7,450; சிம்பிள் சேவ் டெஸ்க்டாப் ஒரு டெராபைட் ரூ.7,500 மற்றும் 2 டெராபைட் ரூ. 15,700 என விலையிடப்பட்டு விற்பனையாகின்றன.
Thanks dinamalar.com
0 comments: on "எச்.பி.- எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?