என்ன அப்படி பார்க்கிறீங்க படத்தை, உங்களுக்கு கணிக்க முடிகிறதா என்ன சொல்ல வரபோகிறேனென்று , எப்பொழுதெல்லாம் மக்காவுக்கு செல்வேனோ அப்பொழுதெல்லாம் இந்த சுவரசியமான விஷயத்தை பற்றி எழுதினால் என்ன? என தோன்றும் ஆனால் இந்த வாரம் தான் அதற்கு சரியான நேரம் கிடைத்தது.
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த படம் 18 ஆம் தேதி, ஏப்ரல் 2010 அன்று எடுக்க பட்டது, இந்த படத்தில் மக்கா மற்றும் அதனுடைய சுற்று வட்டாரத்தில் உயரமான கட்டடங்களை பார்க்கலாம், ஆனால் இவைகள் இன்னும் கட்டி முடிக்க படவில்லை, இதில் என்ன சுவரசியமான விஷயமென கேட்கிறீர்களா?, இந்த உயரமான ஹோட்டல்கள் கட்ட துவங்க முன் இங்கு ஒரு பெரிய மலை ஒன்றிருந்தது ஆனால் இப்பொழுது அதற்கான சுவடே தெரியவில்லை, எங்கு பார்த்தாலும் கட்டடங்கள் அருமையான கட்டட கலையுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது, இவைகளை கட்டிமுடிக்க அவர்களால் எடுக்கப் பட்ட அவகாசம் தான் நீங்கள் மேலே பார்க்கும் எண்(266), இந்த எண் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும், இதைப் பற்றி விசாரித்த பொழுது எனக்கு சில தகவல் கிடைத்தது, இது பணியாளர்களை விரைவாக வேலை செய்ய சைக்காலிஜிக்கல் அப்ரோச்சாம்.(இப்படியும் வேலை வாங்கலாமா)
இதற்கு பக்கத்தில் ஒரு பெரிய மணிகூண்டு ஒன்றும் கட்டி கொண்டிருக்கிறர்கள், இது தான் உலகிலேயே பெரிய மணி கூண்டாம் , இதன் மொத்த உயரம் 380 அடியாம். இவைகளை பற்றி நான் சொல்லுவதை விட இங்கு சொடுக்கி பாருங்களேன்.
அடுத்து....
இறைவன் நாடினால் அடுத்த இடுக்கையிலிருந்து என்னுடைய பழைய தொடரை (தெரிஞ்சிக்கலாம), ஆரம்பிக்கலாமென உள்ளேன், வேலையின் நிமித்தமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.
5 comments: on "இதையும் தெரிஞ்சிக்குவோமே!"
நிஜமாவே கட்டுகிறார்களா? இது பலவருஷ புராஜக்ட் என்று நினைத்திருந்தேன்.. இன்னும் 210 நாட்கள் மீதியா?
பகிர்வுக்கு நன்றி
புது விஷயம். இவ்ளோ ஃபாஸ்டா வேலை நடக்குதா?
இந்தப் பதிவு அடுத்த இன்னிங்ஸின் துவக்கமாக அமைய வாழ்த்துக்கள்!!
பிரமிப்பாக இருக்கு, இவ்ளோ பெரிய கட்டிடங்களை இத்தனை நாளைக்குள் முடித்து விடுவார்களான்னு, இரவும் பகலும் தொடர்ந்து வேலை நடக்கிறது, எப்போ மக்காவிற்கு போனாலும் தட தட சத்தம் தான்.
அனைவருடைய வருகைக்கும் நன்றி, இந்த கட்டுரையில் சில வார்த்தை திருத்தம் :
//இவைகளை கட்டிமுடிக்க அவர்களால் எடுக்கப் பட்ட அவகாசம் தான் நீங்கள் மேலே பார்க்கும் எண்(266)//
மேலே சொல்லப்பட்ட வார்த்தையின் அர்த்தம், நான் சொல்ல வந்த விசயத்தை விட சற்று மாறு படுகிறது, ஆகையால்
இங்கு சொன்ன 266 மீதமுள்ள நாட்கள், இதற்கு முன் இந்த எண் அதிகமாக இருந்தது, தற்போது இது குறைந்து கொண்டே வருகிறது.
வாங்க அபு அஃப்ஸர், நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் ப்ராஜக்ட் இது அல்ல , அது வேறு. அனேகமாக நீங்கள் இந்த லின்கில் உள்ள பிராஜக்டைத்தான் சொல்லுகிறீர் போலும் http://www.youtube.com/watch?v=KmPFkTTNWC8
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?