பசிக்காக சாப்பாடு
சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் 'இஞ்சிமரப்பா"விற்க்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.
40 வயதுக்குள் 70 வயது "சாப்பாடு கோட்டா" வை முடித்துவிடுபவர்கள் கவனத்திற்க்க;
முதலில் சாப்பாடு பசிக்காக , பிறகு ருசிக்காக என பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது ஏற்க்கனவே அதிகம் சாப்பிட்டு ரப்பர் பேண்ட் மாதிரி பெரிதாக்கி வைத்துஇருக்கும் குடலை சாப்பாடு கொண்டு நிரப்புவது என ஆகி விட்டது.
இப்போதெல்லாம் நம் ஊரில் விருந்துக்கு பஞ்சமில்லை. இப்போது உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் திருமண விருந்தில் வயிறுமுட்ட வெலுத்துக்கட்டுவது பிறகு செறிமானத்துக்கு என பெப்ஸி, கோக் என கார்பனேட்டெட் சமாச்சாரங்ளில் சந்தோசப்படுவது ஒரு விதமான் அறியாமைதான். ஏற்கனவெ உள்ளே போன ஹெவியான சாப்பாட்டுக்கு இன்சுலின் தயாரிக்க சிரமப்படும் பேன்க்ரியாசஸ் " விட்டுருங்க காக்கா" என கையெடுத்து கும்பிடும்போது நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.
ஏனெனில் ஒரு 35 வயது மனிதனுக்கு தேவை 1462 கலோரி ஒரு நாளைக்கு போதுமானது , ஆனால் விருந்தில் சாப்பிடும் ஆட்டிறைச்சி மட்டும் [ உதாரணமாக 200 கிராம்] 738 கலோரியை தருகிறது. இதெற்க்கெல்லாம் செத்துபோன ஆடு கலோரி மீட்டரை கழுத்தில் கட்டிக்கொண்டு வந்து உங்கள் கனவில் வந்து செய்தி சொல்லும் என எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு. இனிமேலும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டால் தேவைக்காரவீட்டு ஆட்களிடம் சொல்லி கலோரியை ஆட்டிறைச்சியில் ப்ரின்ட் செய்ய சொல்லவேண்டியதுதான்.
நம் ஊரில் ஆட்கள் சமீப காலமாக நடப்பதை [ ராஜாமடம் ரோடு] பார்க்கிறேன். பெரும்பாலான ஆட்கள் "கார்டியோ வாக்" செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையோ என தெரிகிறது. முதல் பத்து நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 20 வது நிமிடத்திலிருந்து 35 நிமிடம் வரை முடிந்த்த அளவு வேகம் அதிகறித்து 35 - 45 நிமிடம் வரை மெதுவாக நடந்து பிறகு அமைதியான் இடம் பார்த்து அமர்ந்து அமைதி அடைவது கார்டியோவாக். இதனால் இதயம் பலப்படும், நம் கண்ணுக்குதெரியாமல் அடைபடும் ஆர்ட்டரியில் தெளிவான ரத்த ஓட்டம் தரும்.
சுத்தமில்லாத தண்ணீர் , உணவு மூலம் பரவும் கிருமிகளின் "அதபு" நம் ஊர் போன்ற இடங்களில் அதிகம்.முன்பு எல்லோரும் 'ஒற்றுமையுடன்" கழுவிய குளங்களின் மூலம் அமீபியாசிஸ் பரவி நம் ஊர்க்காரர்களின் பீஸில் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகள் வளர்ச்சி அடைந்து விட்டது.
தொடர்ந்து செரிமானகோளாரு இருந்தால் ஒருமுறை ஸ்கோப் செய்து அத்துடன் பயோப்சி செய்து விடுவது நல்லது. இப்போது பெரும்பாலானவர்களின் வயிற்றுப்பிரச்சினைக்கு காரணமான வில்லன் H.Pylori எனும் கிருமிதான். [ இது ரத்த பரிசோதனையிலும் தெரியும்.] இது இருக்கும் இடம் தேடி கொல்வதற்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மருந்து ஒரு வாரம் சாப்பிட்டு ஒருமாதம் கழித்து Breath Test டெஸ்ட் எடுத்தால் வில்லன் உங்கள் வயிற்றில் இருக்கிறாரா இல்லையா என சொல்லி விடும் .அதனால் தான் முன்பெல்லாம் வேப்பெண்ணை / விளக்கெண்ணை தருவார்கள் என சொல்ல வரும் வாசகர்களுக்கு இது கொஞ்சம் திமிர் பிடித்த கிருமி அவ்வளவு ஈசியாக சிக்காது.
இப்போது காலத்துக்கு ஒவ்வாத உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. [நாமும் அதைத்தான் விரும்புகிறோம்]. இதனால் அதிகம் GERD எனப்படும் வியாதி நெஞ்சு எரிச்சல் அதிகமாகி விட்டது. இதனாலும் இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 'சுத்தம் சோறு போடும் ,ஆனம் ஊத்தும்' என நாம் பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல விசயங்களை நம் வீட்டுக்கு கொண்டுவர மறந்து விட்டோம்.
வெளியூர் போனால் நாம் அதிகம் விரும்பும் சைவ உணவை நாம் மத சாயம் பூசி தூர வைத்து விட்டோம்.
கீழ்காணும் தத்துவ ஞானிகளிடம் கவனமாக இருக்க கடவது.
'எனக்கு தெரிந்து ஒரு நண்பன் சைவம்தான் சாப்பிடுவார், அவருக்கு ஹார்ட்லெ அடைப்பாம் இதுக்கு என்ன சொல்றெ?'
"டாக்டர்னா அப்படித்தான் சொல்வான் அவன் சொல் கேட்டா பட்டினிதான் கெடக்கனும்''
மற்றும்
" ஆறிலும் சாவு நூறிலும் சாவு--இனிமேல் நூறுதான் மாப்லே " என சொல்லும்போது 'ஆறிலேயெ உன்னை தப்பிக்கவிட்டது யார்?" என கேட்க தோன்றும்.இவனுக கிட்டே நம்ம ஸ்டேசன் எடுக்காது என விலகி விடுவது நல்லது.
எடை அதிகரிப்பு , கட்டுப்பாடு இல்லாத உணவு இவைகளில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன உடற்பயிற்சி இவைகளை ஒதுக்கிவீட்டு "நேரம் எங்கே கிடைக்குது" என சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் சுகாதார வாழ்க்கைக்கு நீங்கள் ஆப்சென்ட் ஆகி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரசென்ட் ஆக வேண்டும்.
மற்றபடி 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை தூர அனுப்பிவிடலாம்" போன்ற பழமொழிகளை நம்பி இருந்து விடாதீர்கள், அதற்க்கும் சுகாதார வாழ்க்கைக்கும் 100 சதவீத தொடர்பு இல்லை அதுமாதிரி பழமொழி எல்லாம் ஆப்பிள் வியாபாரிகளின் ஆடித்தள்ளுபடி வியாபார யுக்தி.
ZAKIR HUSSAIN