Sunday, July 4, 2010

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

கொஞ்சம் விலா வாரியாக எழுத இது ஒன்றும் அவ்வளவு சின்ன சப்ஜெக்ட் அல்ல. இதில் குறிப்புகள் யார் கொடுத்தார்கள் என்று எழுதினால் அவர் யார் ? அவரது பின்புலம் குறித்து 100 வார்த்தைக்கு மிகாமல் எழுத சொல்வீர்கள் அது சரி அது என்ன விலா வாரி...தெரிந்தவர்கள் 100 வார்த்தக்கு....

எப்போது நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க 'ஜல்புல்'வேலை செய்கிறொமொ அப்பவே நமக்கு உரிய "ஆப்பை' தீட்ட ஆரம்பித்து விடுகிறோம். சரி இங்கு ஈகொ எங்கு வந்தது....ஆம் நம்மை கவனிக்க நாம் பிரயத்தனம் செய்கிறோமே அதுதான் அந்த சனியன். இது சின்ன வயதில் "எம்புள்ளெ அந்த மாதிரியான புள்ளெ இல்லே' என்று மனித தவறுகள் மறைக்கபடுவதிலிருந்து மரணத்தின் தருவாயில் "எப்போ என் சொல்லு கேட்காமெ பொண்டாட்டி சொல்லு கேட்டானோ அவன் என் வீட்டு நெலப்படி [ இன்னும் நெலப்படி வைத்து கட்டுகிறார்களா?] மிதிக்க கூடாது " எனும் வைராக்கியம் வரை தொடர்கிறது.

இதற்க்கு காரணம் நமக்குரிய இமேஜ் ' நிரந்தரம்"எ எனும் தப்பான கணக்குதான். அப்படியெல்லாம் அது நிரந்தரம் இல்லை என்பதற்க்கு உதாரணம் இன்றைக்கு நம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டில் பெரும் மாறுதலை செய்த காமராஜரின் படத்தை காண்பித்து யார் என்று கேட்டால் 'தெலுங்கு சீரியலில் நடிக்கிரவரா? " என மாணவர்கள் கேட்கலாம் [ இமேஜ் நிரந்தரம்???]

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஈகோ நாளடைவில் இரத்த உறவுகளை முறித்துவிடும் உயிர்க்கொல்லி என்பது நிறைய பேருக்கு தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களும், உடன்பிறப்புகளையும் தேர்தெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நண்பனையும் , மனைவியையும் தேர்தெடுப்பதில் வேண்டுமானால் சாய்ஸ் உண்டு...அதனால்தான் இப்போது "சாய்ஸில்" செய்த தவறுக்கு நம் ஊரில் அதிகம் விவாகரத்துகள் மலிந்துவிட்டனவா?

நம் ஊரில் நான் அதிகம் பார்த்த ஈகோ:

வெளிநாட்டிலிருந்து வந்த என்னெ என் வீட்டில் வந்து விசாரிக்கலே

நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஹார்லிக்ஸ்/ பழம் வாங்கி வந்து பார்க்களெ

நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன் , எனக்கு சரியான மரியாதை கொடுக்கனும்.

நாங்க வசதியான குடும்பம் ...அவங்க அப்படி இல்லே.

எங்க வீட்டுக்கு பொம்பலெ கூப்பாடு இல்லெ.

பயணம் போகும்போது சொல்லிட்டு போகலெ


இதில் சில விசயங்கள் பாசம் சார்ந்து இருந்தாலும் பெரும்பாலும் இது ஈகோவின் அடிப்படையிலேயே இயங்குகிறது. என்று [ZEN ]ஜென் தத்துவம் சொல்கிறது..

"No matter What you do YOU ARE ALONE"

இதை சரியாக உணர்ந்தவர்கள் ஆப்பரேசனுக்கு நுழையுமுன் ஸ்ட்ரெச்சரில் வைத்துகொண்டு.."உங்களுக்கு இதற்குமுன் ஏதாவது ஆப்பரேஷன் நடந்து இருக்கிறதா?..பல் கட்டியதா? அலர்ஜி இருக்கிறதா என கேட்கும்போதும் . அனெஸ்தெசிஸ்ட் "ஒன்னு , ரெண்டு” எண்ணுங்க சொல்லும்போது லேசாக தெரியும் "நாம் தனியானவன் தான் " என்றுஆனால் வார்டில் இருந்து கொண்டே குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குதான் இன்னும் ஒரு சரியான "ஈகோ மீட்டர்' கண்டுபிடிக்க மருத்துவ துறை தவறிவிட்டது.

ஈகோ இப்படியெல்லாம் வளர்ந்து இப்போது சினிமாவின் ஆதிக்கத்தாலும் "நான் இந்த மாவட்டம் , நீ அந்த மாவட்டம் என்று வியாபித்து [ இந்த தமிழ் பயன்படுத்தி நாளாகிவிட்டது] இப்போது நம் ஊர்போன்ற இஸ்லாமிய மதரஸாக்கள் / பள்ளிவாசல் / நிறைந்த இடங்களில் "தெரு" 'இயக்கம்' "குடும்பம்' 'இனிசியல்" என்று புற்றுப்பிடித்திருக்கிறது.

வறுமையும் , நோயும் ஈகோவை அழிக்கும் ஆயுதம்..இதில் கடுமை இருக்கிறது..நாமாக உணர்ந்து மாற்றிக்கொண்டால் எல்லோருக்கும் ஒறே மாதிரி நீதி வழங்கும் இறைவனின் கருணை இருக்கிறது.


மற்றவர்களை மன்னித்து பாருங்கள் ...அதில் உள்ள சந்தோசமே தனி.

ZAKIR HUSSAIN
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "ஈகோ எனும் "சொந்த ஆப்பு""

Yasir said...

வழக்கம் போல எங்கள் நானா ஜாஹிரின் அசத்தல் ஆக்கம்...வாழைப்பழத்தில்(வடிவழகி டீச்சர் ஸ்டையிலில் உச்சரிக்கவும்) ஊசி ஏற்றுவது போன்ற அ(டி)றிவுரை

Shameed said...

நல்ல ஒரு ஆக்கம் இந்த அப்பு (ஜாகிர்) சொன்ன ஆப்பு விசயத்தில் நிறைய பேர் ஆப்பு அசைத்த குரங்க தான் இருக்கங்க

mkr said...

edging god out என்று கூட படித்து இருக்கேன்.ஈகோ இல்லாத மனிதன் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் அதை வெளிப்படுத்துவதில் தான் பிரச்சனை ஆரம்ப்பமாகிறது.விசயங்களை பெரிது படுத்தமால் இருந்தால் சந்தோசம் இருபக்கமும்.நல்ல அலசல்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாகவும், முன்னேற்றத்திற்கு உதவியாகவும் இருப்பது ஈகோ.

வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பது அவசியம் என்றாலும், நம்முடைய ஈகோ அடுத்தவனை பாதிக்காமல் இருக்கும் பட்சத்தில் நமக்குள் ஈகோ இருப்பதில் தவறில்லை.

மேலான்மைத்துறை படிப்பில் வியாபரம் விசையங்களில் நல்ல ஈகோ இருப்பது அவசியம் என்கிறார்கள், வியாபார போட்டிக்காக நம்முடைய வியாபார வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி தொழிலில் மட்டும் ஈகோ இருப்பது அவசியம்.

இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, அதற்கு மேல் உள்ள ஈகோக்கள் நம்மிடம் இருந்து நமக்கு ஆப்பு வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள் சகோதரர் ஜாஹிர் ஹுசைன்.

Zakir Hussain said...

Thank you Bro yasir for your comments> You also a student of Vadivazhagi teacher?.. I am also a student of the same teacher. [ std 6 & 7]

Thanx for shahul ...may be we can talk through phone during night time [ night time for Malaysia]

For bro Thajudeen welcome back to Dubai. i do agree that we should have some ego to excel in life. due to 'space concious, i did not mention in my article. May be i will write in future that how i should handle those ego.

For MKR...it looks you are a person of reading lot of books. I suggest you to write in blogs. We also can benefit. Thanx for your comment


ZAKIR HUSSAIN

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?