Goal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ்வொரு வெற்றியும் நம் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்.

சாதனைப் பட்டியல் நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பதற்கான பகிரங்க அடையாளம்.
சுருங்கச் சொல்லின் இலக்கில்லா வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம்.
அது போக வேண்டிய
இடத்துக்குப் போய்ச் சேராது.
இத்தகைய இலக்கை
நிர்ணயிப்பது எப்படி? அதை
அடைவது எப்படி? –
பார்ப்போம்!
இலக்கு என்றால் என்ன?
“நமக்கு வேண்டியது என்ன என்பதை விஞ்ஞான ரீதியில் நிர்ணயித்து, அதை முறையாக திட்டமிட்டுக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதே ‘இலக்கு’ எனப்படும்.”
இலக்கின் வகைகள்
1. குறுகிய கால இலக்கு : 6 மாதம் – 1 வருடம்
2. மத்திய கால இலக்கு : 1 வருடம் – 3 வருடம்
3. நீண்ட கால இலக்கு : 3 வருடம் – 5 வருடம்
இலக்கை நிர்ணயித்தல் எப்படி? (How to Set your Goal) – Wiseman
Why this Goal – ஏன் இந்த இலக்கு?
ஏன் இந்தக் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கின்றோம் – மிகவும் முக்கியமா, விருப்பமா, தேவையா, அவசரமா நமது வளர்ச்சிக்குத் தேவையான மிகவும் முக்கிய அவசரமாக (குறுகிய கால இலக்கு) முடிக்க வேண்டிய இந்தக் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற Is it realistic / possible? சாத்தியமான இலக்குதானா?
நடைமுறைக்குச் சாத்தியமான, அடையக் கூடிய இலக்கை நிர்ணயித்தல் வேண்டும். “ஆறுமாதத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன்” – போன்ற கற்பனைகளைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்துக் காப்பி அடித்து வீம்புக்கு இலக்கை நிர்ணயித்தல் முறையாகாது.
Select your goal – இலக்கைத் தேர்ந்தெடுத்தல்
இலக்கை நிர்ணயிக்கும்போது அது யாரைச் சார்ந்து இருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட குறிக்கோள், குடும்பம் சார்ந்த குறிக்கோள், சமூகம் சம்பந்தப்பட்ட குறிக்கோள் – இவற்றில் தேர்ந்தெடுக்கும் இலக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூகம் சார்ந்த இலக்கினை நிர்ணயிக்கும்போது சற்று முன் யோசனையுடனும் கலந்து ஆலோசித்தும் எடுத்தல் நலம் தரும். குடும்பம் சார்ந்த இலக்கில், குடும்பத்தார் அனைவரும் இணைந்து பணியாற்றுதல் சிறப்பு.
Eleminating deficiencies – குறைகளை தவிர்த்தல்
இலக்கை நிர்ணயித்தபின், நமது முயற்சிகள் நீர்த்துப் போகாவண்ணம் இலக்கின் மீது விடாப்பிடியான பற்றுடன் இருத்தல் வேண்டும்.
இலக்கை நிர்ணயித்த பின் பாதி முயற்சியில் திடீரென்று வேறு இலக்கிற்கு தாவுதல் கூடாது.
இலக்கை நிர்ணயிப்பதில் முனைப்பின்றி (Lack of Seriousness) இருத்தல் வெற்றி தராது.எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது. நினைவில் இராது.
Matching the factors of Goal – இலக்கின் பாகுபாடுகளைப் பொருத்துதல்
Most important – A – மிகவும் முக்கியம்
Most urgent – B – மிகவும் அவரசம்
Most desired – C – மிகவும் விரும்புவது
Skill oriented – X – திறன் சார்ந்தது
Knowledge oriented – Y – அறிவு சார்ந்தது
Physical work oriented – Z – உடலுழைப்பு சார்ந்தது
உதாரணமாக நீங்கள் ஓர் ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்கானது “CZ” எனப் பாகுபடுத்தப்படும். ஓர் ‘IAS’ ஆக வேண்டும் என்றால் ‘AY’ என்ற பாகுபாட்டின் கீழ் வகைப்படுத்தலாம். இலக்கை விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பதற்கு இந்தப் பாகுபாடு உதவுகிறது.
Analysis Your Potential – உங்கள் தகுதிசார் திறனை ஆராய்ந்து பார்க்கவும்
Ambition – குறிக்கோள் (கனவு)
Strength – பலம்
Taste – விருப்பம் (ரசனை)
Money – பணம்
உங்கள் இலக்கானது மேற்குறிப்பிட்ட தகுதிசார் திறன்களை ஆராய்ந்து, அதன் அடைப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
Never Underestimate
உங்களையோ அல்லது உங்கள் இலக்கையோ ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். “என்னால் இது முடியுமா” என்ற எண்ணம் வேண்டாம். உங்களால் முடியும் என்ற உறுதிப்பாட்டில் உங்கள் இலக்கினை நிர்ணயுங்கள்.
Achieving the Goal – இலக்கை அடைதல்
விஞ்ஞான பூர்வமாய் நிர்ணயிக்கப்பட் இலக்கை உங்கள் முயற்சியினால் சுலபமாக அடைய முடியும். ஒருபோதும் மனந்தளர வேண்டாம். கடினமான இலக்கை சிறுசிறு பிரிவுகளாக மாற்றிச் செயல்படுத்தலாம். அதீத ஈடுபாடோ அல்லலது மெத்தனமோ வேண்டாம். இலக்கை அடைந்த விட்டதாக மனக்கண்ணில் காட்சிகளை ஓடவிட்டுக் காணுங்கள். (visualisation)
இவ்வாறு சிறிது முயற்சியும், சிறித நேரமும் சீரிய முறையில் செலவழிக்கப்பட்டு, சிக்கலின்றி இலக்கை நிர்ணயித்து சிறப்பாக அதை அடைந்தால், சரித்திரமும், சந்ததியும் உங்களை “சாதனையாளன்” என வாழ்த்தும்.
இது உறுதி!

Author: சுகுமார் ஏகலைவன்
- சுகுமார் ஏகலைவ்
 http://www.thannambikkai.net/2010/06/01/4148/
குறிப்பு : வேலையின் நிமித்தமாக  எழுத முடிவதே இல்லை,  ஆகையால் படித்ததை பகிர்ந்து கொண்டேன்


ஓட்டு போட்டாதானே எல்லாருக்கும் போய் சேரும் :)