உலகக்கல்விகளில் உயர்ந்தவற்றுள் நான் அதிகம் ஆச்சர்யப்படுவது "மற்றவர்களை அறியும் அறிவு" [Character Study] இது பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முஸ்லிம்கள் எனொக்ராம்[ENOGRAM] என்ற ஒரு சூப்பர் சமாச்சாரத்தை உலகுக்கு தந்து இருக்கிறார்கள்.
வழக்கம்போல் முஸ்லிகள் ஒற்றுமை இல்லாததால் இந்த உயர்கல்வியை மங்கோலியாவில் கோட்டைவிட்டு
[ அல்லது மற்றவர்களால் 'லவட்டப்பட்டு'] சமீபத்திய நூற்றாண்டில் க்ருட்ஜேவ் [GRUDJEVE] என்ற ரஷ்ய ஞானியால் அறிமுகம் ஆகியிருக்கிறது.
.
கயவனை அறியாமல் நடப்பதும் ஒருவித தூக்கநிலைதான்.
மனத்தின் செயல்பாடு அறிந்தவற்றிலிருந்து இயங்கும்.
சமயங்களில் நல்ல நண்பனாக பழககூடியவர்கள் கூட "ரூம் மேட்' ஆக முடியாது.
மாறிவரும் காலத்தை மனது ஏற்றுக்கொள்வதில்லை
இவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க / பேச முடிகிறதோ தெரியவில்லை. சிலரின் வேடிக்கையான நடத்தையை இங்குபார்க்கலாம்;
1. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் [மூன்றாமவர்] இடையில் பேச முற்படும்போது “Excuse Me” சொல்வதெல்லாம் ஏதோ தேசக்குற்றம் மாதிரி யாரும் செய்வதில்லை.
2. பெண்கள் இருக்கும் இடத்தில் சத்தமாக பேசுவது [ இவர் இருக்கிறார் என தெரியனுமாம் ] ஆனால் இப்போது உள்ள பெண்களால் இவன் ஒரு காமெடிபீஸா அல்லது வெவரமான பார்ட்டியா என இவன் போட்டிருக்கும் உடுப்பை வைத்தே சொல்லிவிடமுடியும் என்பது இது போன்ற பார்ட்டிகளுக்கு தெரியாது.
3. இவர்கள் நாம் பேசி முடிக்குமுன் தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்; செய்தியை முழுமையாக கேட்க்கும் சர்க்யுட் இவர்களிடம் "பூசனம்" பூத்திருக்களாம்.
இளைஞர்கள் யாராவது புதிதாக தொழில் ஆரம்பிக்க கீழ்க்கண்ட வசனம் பேசுபவர்கள் பக்கதில் கூட நிற்க்கவேண்டாம்:
1. "என்னதான் எண்ணையை தேச்சிகிட்டு பெரண்டாலும் ஒட்டுற மண்ணௌதான் ஒட்டும்"
2. "தொடர்ந்தாப்லெ ஒருத்தன் பணக்காரணாக இருக்க முடியாது"
3. "பணம் ஒரு பேய்"பணம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும்:
இதுபோன்ற பழமோழியை கண்டுபிடித்தவன் தான் கையிலே சிக்கமாட்டுக்கிறான்
மற்றும் சில கேரக்டர்கள்
1. யாரையும் முகத்துக்குமுன் புகழ்வது / அவன் போன பிறகு வைவது
2. நண்பர்களிடம் பேசும்பொது பில்கேட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மெயின்ரோடு/கடைதெருவில் செலவழிக்கும் போது அனியாயத்துக்கு பம்முவது.
3. தொடர்ந்தாப்லெ பல வருசம் "விசா வருது"னு வாய்கூசாமெ பொய்சொல்றது.
4. சொல்லிவைத்தமாதிரி 3, 4 பேருக்கு ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து எதையும் சரியான நேரத்தில் செய்யாமல் தன்னை தவிர எல்லாரையும்/எல்லாவிசயங்களையும் காரணமாக சொல்வது
5. சின்னபிள்ளைகளுக்கு கொடுக்காமல் [அல்லது பார்க்கவைத்து] தீனியை நாகரிகம் இல்லாமல் [ஒலப்பி] சாப்பிடுவது.
6. சமயங்களில் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மிடமே பணம் வாங்கியவர்கள் கொஞ்சம் நாள் பார்க்காவிட்டால் , திடீரென்று பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் போது போடும் டிராமா எல்லா சீரியலையும் வென்றுவிடும்.இதே வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் பெரும்பாலும் காந்திகணக்குதான்.
தெரிந்தவர்கள் இன்னும் எழுதவும் ....இதுவும் ஒரு “மற்றவர்களை அறியும் அறிவு” தானே!!
ZAKIR HUSSAIN
2 comments: on "மற்றவர்களை அறியும் அறிவு"
சகோதரர் ஜாஹிர்,
சிறப்பான கட்டுரை, உங்கள் ஸ்டைலில் வழக்கப்போல் கலக்க்கீட்டீங்க.
சில கேரக்டரில் பல கேரக்டர்களை நினைவுக்கு கொண்டு வந்திட்டீங்க.
உங்கள் எழுத்தை என்றும் எதிர்ப்பார்த்தவானாய் காத்திருக்கிறேன்.
நன்றி சகோதரர் தாஜுதீன், உங்களின் அன்பான விமர்சனங்கள் வழக்கம் போல் என்னை உற்சாகப்படுத்துகிறது. உங்களின் விமர்சன எழுத்துக்களில் உங்களை நேரில் பார்த்த திருப்தி இருந்தது.
ZAKIR HUSSAIN
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?