என்ன சகோதர, சகோதரிகளே, தலைப்பு ஒரு மார்க்கமா இருக்கென்று பார்கிறீங்களா, இந்த தலைப்பில் கட்டுரை எழுத நான் கட்டாயமாக்கப் பட்டு விட்டேன். ஆம், இன்று(10/06/10) எனக்கு நடந்த சம்ப்வத்திலிருந்து நான் கற்று கொண்ட பாடமும், இதனால் நீங்கள் அடைந்து கொள்ள வேண்டிய உஷாரை பற்றி தான் இந்த சின்ன கட்டுரை. சரி விசயத்திற்கு வருவோம்.
ஆம், இன்று அலுவலகத்தை முடித்து கொண்டு பேருந்திற்காக காத்திருந்த பொழுது டாக்ஸி ஒன்று வந்து நின்று ரியலின் ! ரியலின்(2 ரியால்) கூறியவுடன் சரி டாக்ஸியில் போய்விடுவோம் என்று ஏறி விட்டேன், பொதுவாக தனியார் டாக்ஸியில் தான் ஆபத்து என்று கேள்வி பட்டதுண்டு, ஆனால் முறையாக ரிஜிஸ்தர் செய்து ஓடும் டாக்ஸியிலும் ஆபத்திருப்பதை அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து மொத்தம் அந்த டாக்ஸியில் மூன்று பேர், கொஞ்ச தூரம் போன பிறகு, எனக்கு பக்கத்திலிருந்தவன் திடீரென குனிந்து 500 ரியால் நோட்டு கட்டு ஒன்றை எடுத்து விட்டு யாரிடமும் சொல்லிவிடாதேன்னு சொன்னவுடன், எனக்கு தூக்கி வாரி போட்டது, ஆஹா வரக்கூடாத டாக்ஸில வந்துட்டோமான்னு, நினைத்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் உள்ளவன் இறங்குவதற்காக டாக்ஸியை நிறுத்தியவுடன், அப்பாட இங்கேயா நாமும் இறங்கிவிடலாம் என்று முயன்ற பொழுது முன் சீட்டிலிருந்து இறங்கி சென்றவன் திடீரென்று வந்து அழுது கொண்டு என்னுடைய பணத்தை பார்த்தாயா, அதில் நிறைய பணமிருந்தது என்று அழுது கேட்டவுடன், ஆஹா இவனை பார்த்தல் பாவமாக இருக்கிறதே சொல்லிடுவோம்னு, அதோ அவன்தான் எடுத்தான் என்று சொன்னேன், பணத்தை தொலைத்தவன் எனக்கு பக்கதிலிருந்தவனிடம் வேலட்டை செக் பண்ணுவதற்காக கேட்டவுடன் அவனும் கொடுத்துவிட்டான், பிறகு என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணினான். என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணும்போது பணத்தை எப்படித்தான் எடுத்தான் என்று தெரியவில்லை. நானும் கவனிக்க வில்லை டாக்ஸியிலேந்து இறங்கி விட்டு அவனை போலீசிடம் போய் ஒப்படை என்று சொல்லி அனுப்பி விட்டு, அப்பட என்று பெருமூச்சு விட்டுவிட்டு, சரி வேற நல்ல டாக்ஸியை பிடித்துகொண்டு போகாலாமென வேலட்டை பார்த்தாபோது தான் தெரிந்தது அவனும் திருட்டு கும்பலில் ஒருவன் என்று, அப்படியே பேய் அறைந்தவன் போல் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன், வேறென்ன செய்வது, போனது போனது தான், ஆகையால்
நான் உங்களுக்கு சொல்ல வருவது:
1. டாக்ஸியில் செல்ல முற்பட்டால், முடிந்தவரை தனியாக செல்லவும்.
2. முடிந்தவரை சொந்த நாட்டு ஒட்டுனரை தவிர்த்து விடுங்கள்,
3. முடிந்தவரை ஏறும்முன் வண்டி நம்பரை குறித்து விட்டு ஏறவும்,
4. டாக்ஸிகென ஆறெழுத்து இலக்க எண் இருக்கும், அவை 700 லோ அல்லது 900 லோ ஆரம்பித்தால் முடிந்தவரை தவிர்த்து விடுங்கள், ஏனெனில் அப்படி ஆரம்பிக்கும் எண்கள் சொந்த நாட்டு ஓட்டுனர் வைத்திருக்கும் டாக்ஸி ஆகும்.
5 இதுபோன்று எவரேனும் பணத்தை கீழிருந்து எடுத்தால் சற்றும் யோசிக்காமல் டாக்ஸியை நிறுத்த சொல்லி விட்டு இறங்கி விடுங்கள்
6. இந்த மாதிரி திருட்டு வேளையில் ஈடுபடுவது பெரும்பாலும், கருப்பு இனத்தவர்களாக தான் இருக்கிறார்கள், ஆகையால் மேல் சொன்ன விசயங்களை மனதிற்கொண்டு உஷாராக இருந்து கொள்ளுங்கள்
நான் கற்று கொண்ட பாடம்:
6. இந்த மாதிரி திருட்டு வேளையில் ஈடுபடுவது பெரும்பாலும், கருப்பு இனத்தவர்களாக தான் இருக்கிறார்கள், ஆகையால் மேல் சொன்ன விசயங்களை மனதிற்கொண்டு உஷாராக இருந்து கொள்ளுங்கள்
நான் கற்று கொண்ட பாடம்:
- ஏறுமுன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ஏறக்கூடாது.
- ஓட்டுனர் வெளிநாட்டவராக இருந்தால் மட்டும் ஏற வேண்டும்
- டாக்ஸியில் போக வேண்டுமென முடிவெடுத்தால், பணம், ID கார்டு இவற்றை வேலட்டிளிருந்து எடுத்து வேறு பாக்கெட்டில் வைத்தால் நல்லது .
- எது எப்படியானாலும் முடிந்தவரை பேருந்தில் செல்வது நல்லது
மேற் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியாதவை அல்ல, எனக்கு சில முன் எச்சரிக்கைகளை சொல்ல வேண்டுமென தோன்றியது.இதை விட எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென உங்களுக்கும் தெரியும், இதில் குறிப்பிடாத விசயங்களை நீங்கள் பின்னோடமிட்டால் நானும் தெரிந்து கொள்வேன்
18 comments: on "எச்சரிக்கை , எச்சரிக்கை, எச்சரிக்கை!"
எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா!
நம்ம யோசிப்பதற்குள் காணா பொயுடுராங்க நன்பரே, ரூம் போட்டு யோசிப்பானுங்களோ.
எல்லாத்துலேயும் நூதனம் இருக்கு.. வடிவேலா மாறிடக்கூடாது... கவனம் தேவை
வாங்க அபுஅஃப்ஸர், ஆமாம் , இங்கு ரொம்ப உஷாராத்தான் இருக்கனும், நம்ம கொஞ்சம் முரண்டு பிடித்தால் கத்தியை எடுத்து குத்திட்டு போய்டுவானுங்க, மொத்ததுல நம்ம நாட்டு டாக்ஸி ஒட்டுனரை தவிர வேறு யாரிடமும் ஏறக்கூடாது.
அடக் கொடுமையே, எச்சரிக்கையும், தாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தையும் பகிர்ந்ததிற்கு நன்றி, கவனமாக இருப்போம்.
வாங்க சகோ. ஷஃபி, இனி ஆஃபீஸிலிருந்து பேசாம நடந்து வந்திட வேண்டியது தான், பெரும்பாலும் இவர்கள் வியாழன் மதியம் தான் வருவதாகத்தான் கேள்விப் பட்டேன்.
//முடிந்தவரை ஏறும்முன் வண்டி நம்பரை குறித்து விட்டு ஏறவும்//
இது ரோம்ப முக்கியம், இதை பெரும்பாலனவர்கள் செய்வதில்லை.
நல்ல பயனுள்ள செய்தி.
இதைப் போல் இன்னும் அதிக செய்திகள் உங்கள் எக்ஸ்பிரஸில் வரும் என்று எதிர்பார்கிறேன்.
தங்களின் வருகைக்கு நன்றி சகோ. தாஜுதீன், நிச்சயமா கொடுத்திடலாம்.
என்னமா யோசிக்கிறானுங்க... இவனுவகிட்டேயிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கிறது பற்றி நாமும் ரூம் போட்டு யோசிச்சா நல்லது...
Anyway awareness article...
வாங்க இர்ஷாத், நாம என்ன் யோசிச்சாலும் அதுக்கு வழி வச்சிருக்கானுங்க, ரூமு என்னா வீடு வாங்கி யோசிச்சாலும் நடக்காது
அடப்பாவிகளா.... இந்த கொடும எப்போ நடந்துச்சு.... என்னவோ போங்க.... இகாமா பத்திரமா இருந்துச்சே.... அத சொல்லுங்க.... நல்லதொரு படிப்பினை பதிவு....
@அன்புத்தோழன், அத யான் கேட்குறிய, பணம் கானா போன உடனே, முதல்ல இக்காமாவத்தான் பார்த்தேன். இருந்தத பார்த்தவுடன் தான் மூச்சே வந்தது
உங்களுக்கு ஏற்ப்பட்டது போல் மற்றவர்கள் பட கூடாது என்று உடனே டிப்ஸுடன் இடுகை , நல்ல பகிர்வு,
வாங்க ஜலிலா அக்கா, நான் வீட்டுக்கு வந்து சாப்பிட கூட இல்லை, பதிவ ஆரம்பிச்சுட்டுத்தான் சாப்பிட போனேன். என்னமோ தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போச்சுன்னு சொல்லுவாங்கள்ள அதுப்போலத்தான் அங்கேயும் கொஞ்சம் அடம் புடுச்சிருந்தேன், அப்புறம் நான் பாயும் முன்னாடி கத்தித்தான் பாய்ந்திருக்கும்
ரூம் போட்டு யோசிப்பானுவோ போலிருக்கு.... இது போன்று சம்பவங்கள் துபையில் நடந்து இருக்கு.மற்றவர்களுக்கு எச்சரிக்கையூட்டுவதற்காக இங்கு பகிர்ந்து கொண்டதற்கு பாரட்டுகள்
வாங்க mkr,நன்றி, உஷாராத்தான் இருக்கனும்
சரியான நேரத்தில் சரியான பதிவு. சில பேர் நாம் ஏமாந்து விட்டோம் என்று யாரிடமாவது சொன்னால் கேவலம் என்ரு நினைத்து சொல்லாமல் விட்டுவிடுவார்கள். நீங்கள் சொன்னது உங்களின் சமூக சேவையை காட்டுகிறது (அவ்வ்வ்வ்வ்வ்வ் - பணம் தொலைஞ்சது எனக்கு தானே என்று தாங்கள் திட்டுவது எனக்கு கேட்கிறது).
பதிவுக்கு நன்றி
www.hajaashraf.blogspot.com
//ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) , மீண்டும் வருக
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?