இந்த பகிர்வை எழுத தூண்டுகோலாக இருந்த சகோதரர் யாசிர் அவர்களுக்கு நன்றி.
சரி விசயத்துக்கு வருவோம்
இதன் ஆச்சர்யம் எது என்று ஆராய்ந்தால் வரதட்சணையை அறிமுகப்படுத்திய முதல் துரோகியும் ..அதை ஒரு வேதவாக்குமாதிரி காப்பாற்றி வரும் சில "பெருசுங்க'ளும்தான். இந்த நடைமுறையில் அழிந்தது சில இளைஞர்களும்தான் என்றால் அது மிகை இல்லை. வரதட்சணை வாங்கியதன் மூலம் படிக்காமலும் , சம்பாதிக்காமலும்ஊர் சுற்றும் சில வெறும்பயல்கள் தனக்கு ஏதோ ஓரு திறமை இருக்கிறது என்பது போல் ஊரில் நடமாடுவது பிறகு பிழைக்கபோகும் நாட்டில் உண்மை உச்சந்தலையில் அடித்த மாதிரி பாடம் நடத்தும்போது தடுமாறுவதும் உள்ளங்கை நெல்லிக்கனி [ என்னா உதாரணம் இது ...வேறு கனி வைத்தால் கண்ணுக்கு தெரியாதா?]
முதலில் ஒரு 20 வருட வரதட்சணையின் பரிணாமத்தை பார்ப்போம்.
நிச்சய தார்த்தம் என 10 பேரை கூப்பிட்டு கேசரி / கொஞ்சம் மணிக்காரபூந்தி +டீ என இருந்த விசயம் இப்போது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்ப்பதை விட மோசமாகி 100 பேரை கூப்பிடுகிறேன் 200 பேரை கூப்பிடுகிறேன் மோட்டோர் சைக்கிள் / லேப் டாப் கம்ப்யூட்டர் [VCD/DVD ஓடுமா காக்கா என அப்ரானியா கேட்கும் மாப்பிள்ளைகளுக்கும்] / பால்குடம் / 10, 15 சகன் அல்வா / செப்புக்குடம் , சில்வர்குடம் / அமுல்ஸ்ப்ரே , பூஸ்ட், சீனி/ வாசிங் மெசின், பவுன் நகை , மணைக்கட்டு....இப்போது சொல்லுங்கள் இது எல்லாம் வரதட்சணையின் புதிய பரிணாமம் எப்படி முஸ்லிம்களிடம் ஒரு வைரஸ் மாதிரி நுழைந்திருக்கிறது???.
நிச்சயதார்த்ததுக்கும் இவ்வளவு பில்டப்பா என கேட்டால் நம்மை ஏதோ தொண்டி,நம்புதாலையிலிருந்து பிழைக்க வந்தவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை. இதற்கு பெயர் வேண்டுமானால் வட்டார வழக்குபடி பெயர் வைத்துக்கொள்ளலாம்..மொத்தத்தில் இது ஒரு நவீன திருட்டு.சமிபத்திய இஸ்லாமிய புரிந்துணர்வில் முன்பு வரதட்சினை வாங்கியவர்கள அதை திருப்பி கொடுக்கும் அல்லது கொடுக்க நினைக்கும் நிலை கண்டு சந்தோசம்.
நம் ஊர்ப்பக்கம் ஏன் முஸ்லீம்கள் தொடர்ந்தாற்போல் வசதியாக இல்லை.?
பெண்களுக்கு வீடு என்ற சிஸ்டம் பெண்ணை பெற்றவர்களின் பொருளாதார விசயத்தில் ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது.
ஆனால் அந்த வீட்டை கட்ட ஒரு பொறுப்புள்ள தகப்பனின் பல கால உழைப்பும் வருமானமும் அதற்காகவே செலவாகிறது.வீடு என்பது வருமானம் தரும் சொத்தல்ல என்று தெரிந்தும் அதற்காக பெரும்பணம் / வங்கியில் நகைக்கடன் / உறவினர்களிடம் கைமாத்து [ ஆயிரக்கணக்கில்] செலவழிப்பது ஏன் என்பது தெரியவில்லை.வசதியாக வீடு கட்டி வாழ்வதில் தவறில்லை...ஆனால் வீட்டில் உசுப்பேத்தும் பெண்களின் ஆசைக்காக கடனாளியாகி பிறகு கடனை அடைக்க உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்..அதற்க்கு பதில் உங்கள் வருமானத்தை பெருக்கும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.
கல்யாணம் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனை 'ஸ்பெசல் மொட்டை" அடிக்க நிறைய சம்பிரதாயங்களை நம் ஊரில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.அதற்க்கக கல்யாணங்களை ஏதோ மகிழ்ச்சி இல்லாத விசயம் மாதிரி ஒரு விமரிசை இல்லாமல் நடத்தவும் என நான் பாடம் எடுக்கவில்லை. மாப்பிள்ளையை பெற்றவர்கள் கொஞ்சம் பெண்ணை பெற்றவர்களையும் நினைத்துப்பார்க்க சொல்கிறேன்
"எங்களுக்கா கேட்கிறோம் அவ்வ மவளுக்காதானே எல்லாம்" என்று தத்துவம் பேசும் ஞானிகளே ...எங்கே இருந்து வந்தது இந்த பெண்ணுக்கு வக்காலத்து..எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு வருசமாய்?
வரதட்சணை வாங்குவது தவறு எனும் விழிப்புணர்வு வர முக்கியம் நாம் செய்ய வேண்டியது வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் ஜும்மா பிரசங்கத்தின் போது ஒரு சிறு அறிவிப்பாக செய்யலாம். ஆடித்தள்ளுபடியையும் , நகைக்கடை/ புடவைக்கடை விளம்பரங்களையும் காது கொடுத்து கேட்கும் நம் ஊர்சனம் நிச்சயம் இதையும் கேட்கும்.
பெண்ணுக்கு வீடு என்பதால் நம் ஊரில் நிறைய புது வீடு இருக்கிறது, ஆனால் அதன் அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது.
வரதட்சணை கேட்பதற்க்கு எதிர்காலத்தின் பொருளாதார சவால்களின் மீதான பயம் தான் காரணமா?..
நீங்கள் இந்த உலகத்தின் காற்றை சுவாசிக்குமுன் உங்களுக்கான தாய்ப்பாலை உருவாக்கி வைத்து இருக்கும் இறைவன் எப்படி உங்களை ஏமாற்றுவான்????
ZAKIR HUSSAIN
16 comments: on "முடங்கிப்போன "முஸ்லீம்களின் பொருளாதாரம்""
நெத்தியடி கேள்விகள்..இதில் ஒரு கேள்வியையும் சேருங்கள் . அப்படி வரதட்சணை வாங்க மாட்டேன் என்றால் அல்லது வேண்டாமென்றால் உனக்கு ஏதாவது குறை இருக்கும் என்று சொல்லும் மனித அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள்...
மிக நல்ல பதிவு..தொடருங்கள்..!!
சகோதரர் ஜாஹிர் தங்களின் வழக்கமான பாணியில் தூள் கிளப்பி இருக்கீங்க.
//ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை.//
சரியாக சொன்னீர்கள், இன்று அதீத மாற்றங்களை பார்க்கும் போது சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் பெண்ணுக்கு வீடு என்ற சம்பிரதாயத்தை பார்க்கும்போது வேதனை, இந்த வகை நவீன திருட்டையும் ஒழிக்க ஒரு புரட்சி நம்மூரில் நடைப்பெற வேண்டும். இன்னும் இது ஒட்டிக்கொண்டிருக்கிறது.
சூப்ப்ப்ப்பர் கட்டுரை... வாழ்த்துக்கள்.
//வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?///
வரனுக்கு(தான்) தட்சனையாக வாங்கப்பட்டது இதுவும் வரன் பார்த்துக் கொடுக்கும் தரகர் அல்லது நபருக்குத்தான் கொடுக்கப் பட்டதாக அந்தக்கால வரலாறுன்னு படித்திருக்கிறோம், வெட்கக் கேடு இதுவே தரகரை / வரன் காட்டிய் நபரை புறந்தள்ளிட்டு அதனையும் பறித்துக் கொண்டு, நம் நபிவழிக்கு எதிர்மறையாக உலாவரும் இந்த வேடந்தாரிகளை / கொள்ளையர்கள் திருந்துவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
இதைத் தவிர்க்க வேண்டியது இன்றைய இளைஞர்களின் பொறுப்புதான்!! ஆனால், அவர்களோ, “பெண் வெள்ளையாக இருக்காளா?” என்பதில் மட்டும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விட்டு, ‘மற்றதெல்லாம் பெரியவர்கள் விருப்பம்’ என்று சொல்லி, தாய்ச்சொல் தட்டாத மகனாக சீன் காட்டி அமைதியாக இருந்துவிடுவார்கள்!!
Thanx Bro jailani for your comments, i used to read your writings. Your writings in your blogs also very nice.
Thanx to Bro Taj & Abu Ibrahim [ refer my comments in adirai Nirubar]
To sister Husainamma...I agree with your comments. And the real culprits in asking dowry is mostly both Men & Women . but as you said mostly the "ACTORS" are தாய்ச்சொல் தட்டாத மகனாக சீன் காட்டி அமைதியாக இருந்துவிடுபவர்கள்
அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அன்புச்சகோதரர் ஜாகிருக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
ஏதேச்சையாக அதிரை எக்ஸ்பிரஸை பார்க்க நேர்ந்தது. தங்களின் ஆக்கங்கள் :
1) தன்னிலை சுகாதாரம்
2) மற்றவர்களை அறியும் அறிவு
3) ஈகோ எனும் சொந்த 'ஆப்பு'
4) பசிக்காக சாப்பாடு
5) முடங்கிப்போன 'முஸ்லீம்களின் பொருளாதாரம்
இவைகள் அனைத்தையும் படித்தேன். நகைச்சுவையோடு கூடிய நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். எழுத்து நடையும் - நல்ல தமிழும் நன்றாக இருக்கிறது. கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க கூடியதே. ஜாகிர் வாழ்த்துக்கள் பல! தொடர்ந்து நல்ல விழிப்புணர்வோடு கூடிய நல்ல ஆக்கங்களை தந்து கொண்டு இருப்பதற்கும், எழுத்துச் சேவை சிறக்கவும், வல்ல அல்லாஹ் தங்களுக்கு அருள் புரியட்டும்.
வஸ்ஸலாம்.
அலாவுதீன் எஸ்,அபுதாபி, யு.ஏ.இ.
//வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?///
கருத்து சொன்னமட்டும் பத்தாது வாழ்க்கைலும் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்
Thank you Alaudeen...Keep in touch
ZAKIR HUSSAIN
இதில் என்ன கொடுமை என்னவென்றால் கல்யாணத்தின் போது பெண் வீட்டார் தரும் பணம்,நகை மற்ற அனைத்தையும்(அதிலும் சீர் ஊர் வழக்கம் என்று சொல்வார்கள்) ஊர் ஜமாத் தங்களது புத்தக்கத்தில் எழுதுவ்
To
Bro.MKR
வங்கியில் துணிகர திருட்டு...
இளைஞர்கள் கைவரிசை என்று
தினத்தந்தியில் வரும் செய்திமாதிரிதான் இதுவும்.
ZAKIR HUSSAIN
良言一句三冬暖,惡語傷人六月寒。
யாருப்பா அது குச்சிலே வீடு கட்டி எழுதுறது. புரியும் படி எழுதுங்கப்பா!!!
முடங்கி போன முஸ்லீம்களின் பொருளாதாரம் கட்டுரை மிக அருமை.
அதிரை அஷ்ரப்
shahulhameed said...
良言一句三冬暖,惡語傷人六月寒。
யாருப்பா அது குச்சிலே வீடு கட்டி எழுதுறது. புரியும் படி எழுதுங்கப்பா!!!///
இண்டு இடுக்குல இருக்கிற வண்டு பூச்சிகளையெல்லாம் திங்கிற கூட்டம்ங்க அது.அப்படித்தான் இருக்கும்...
நல்ல பதிவு ஜாஹிர்..
Thanx Bro.Irshad & Bro. Ashraf for your comments.
ZAKIR HUSSAIN
Zakir,
நம் சமூகத்தின் பொருளாதார முடக்கத்திற்கான
முக்கியமான காரணங்களில் தலையாயது
திருமணமும் திருமணம் சார்ந்த சடங்குகளின்
செலவினங்களும் என்பதை நன்றாக சுட்டிக்காட்டியிருக்கிறாய்.
இம்முறை, தேன் குழைத்து தராமல் தேன் குறைத்து
தந்திருப்பது செய்தியின் தீவிரம் கருதி என்றே கொள்கிறேன்.
நண்பா,
உன் உற்று நோக்கலும், சமூகக் கவலையும்
கவன ஈர்ப்பு முயற்சிகளும் ஒவ்வொரு ஆக்கத்திலும்
உள்ள்ங்கை கொய்யாக் கனியாக (நெல்லிக்கனியைத்தான் நீ
கேலி செய்கிறாயே) தெரிகிறது.
கவித்துவமான இந்த கருத்துக்களும் எழுத்தும் என்னை மிகக் கவர்ந்தன:
//உண்மை உச்சந்தலையில் அடித்த மாதிரி பாடம் நடத்தும்போது//
//ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை//
//அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது.//
//தூண்டுகோலாக இருந்த சகோதரர் யாசிர் அவர்களுக்கு நன்றி//.
எத்தனை வேலை பலுவிலும் இன்முகம் கொள்வது,
"காக்கா" என்ற விளிப்பிலேயே அன்பு தொக்கி வித்தியாசப் படுவது,
பந்தா சற்றேனும் இல்லாமல் மலேயப் பரோட்டா சுட்டுத் (சூடு பண்ணி) தருவது,
பனிவு காட்டியே ஆளை ஓய்த்து விடுவது போன்ற
இன்னும் எண்ணற்ற நற்பண்புகளுக்கும் தூண்டுகோல் யாசிர்.
-சபீர்
நம்பர் 6, விவேகாநந்தர் தெரு,
விவேகாநந்தர் குறுக்கு சந்து ,
துபாய் மெயின் ரோடு-
துபாய்.
தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கொடுமைக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது. எனச்சொல்லியே
காலங்கள் கடக்கிறது
கடனையுடைனை வாங்கி
கல்யாணமும் நடக்கிறது.
வட்டிக்கு வாங்கியாவது
வாழ்க்கையை தொடக்கும்
வரன்களாகிறது
வேலை வெட்டியில்லா விட்டாலென்ன
வரதட்சணையென்ற வருமானம் வருக்கிறது.
சிந்திக்கவேண்டியது பெற்றோர்களோடு பிள்ளைகளும்.அப்போதுதான்
சீர்திருத்தம் ஏற்படும்.
இந்த லிங்கில்
நான் எழுதிய ”மனதார மனங்கொடு” http://niroodai.blogspot.com/2010/02/blog-post_25.html.
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?