மனசு மயங்கும்.....
தொடர்ந்து துரத்தும் வேலைகள், தினம் தினம் வெறுப்பேத்தும் ட்ராபிக் ஜாம். கஸ்டமரின் மெடிக்கல்ரிப்போர்ட், கார் ஓட்டிக்கொன்டிருக்கும்போதே அலைபேசியில் பாடம் நடத்த சொல்லும் ஜுனியர்கள், மொட்டை வெயிலில் பார்கிங் தேடும் கொடுமை, மாதக்கடைசிக்கு அடிமையாகிப்போன நடுத்தரவாழ்க்கை இதை எல்லாம் மூட்டை கட்டிவைக்க சொன்னது அந்த காலைச்சாரளில் கூவிய அந்தமுகம் தெரியாத குயில்... காலை நேரத்தில் சலவைக்கு போட்ட மாதிரி பளிச் வானம்,குறையற்ற ஆக்சிஜன் நிரம்பிய காற்றும் காலம் காலமாய் நம் இழந்த வசந்தங்களை மறுபடியும் நமக்கு அறிமுகம் செய்கிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நம் ஆத்மாவின் விருப்பத்துக்கு செலவளிக்கும் நேரம் குறைந்து பரந்து விசாலமான பூமியை நாம் சிறை மாதிரி பாவிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இயற்கையை ரசிப்பவன் பொருளுக்கு அழையும் பொருளற்ற வாழ்க்கை வாழ்பவனின் பார்வையில் பைத்தியக்காரன்.
சமயத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைத்து ஏங்குவது என் உள்மனம் மட்டுமல்ல... உங்களுக்கும் ஏக்கம் இருக்களாம்.. இயற்கையை விரும்பும் என் சாதியாக இருந்தால். ஒரு நாள் விடுமுறையானாலும் புலன்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள்.
எப்போதாவது ஒரு சிட்டு குருவி தாகம் தீர்த்துக்கொள்ளும் நேர்த்திகண்டிருக்கிறீர்களா?
இடி இடித்து ஓய்ந்த் மழையில் கடைசி சொட்டு மழைத்துளிவிழும் இலையின் பச்சை கண்டுவியந்திருக்கிறீர்களா?
ஓய்ந்த மழை விட்டுச்சென்ற தண்ணீரிலும் / வயல் வரப்புகளிலும் செருப்பு விலங்கு இல்லாமல் நடந்து கால் குளிர்ந்து இருக்கிறீர்களா?
எப்போதாவது ஒரு முறை கடும் பசியிலும் உங்கள் உணவுப் பொட்டலம் பிரிக்கப்படும்போது இன்னும் 5 மணித்தியாலத்துக்கு உணவுகிடைக்காது எனதெரிந்தும் உங்களிடம் கையேந்தும் ஏழையின் கையில் உங்கள் உணவை கொடுத்து அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?
தூரத்துரயில் சத்தத்தின் சங்கீதத்தில் தூங்கியிருக்கிறீர்களா?
இலங்கை வானொலியில் 'இரவின் மடியில் நிகழ்ச்சியை" மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் ட்ரான்சிஸ்டரில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறீர்களா?
வெட்டப்பட்ட வேப்பமரத்துக்காக துக்கமாகி மனம் புழுங்கியிருக்கிறீர்களா?
பாலமரக்காய்களில் வெள்ளைப்பருப்பின் பால்சுவையில் படிக்க வந்த பாடம் மறந்த்துஇருக்கிறீர்களா?
நீண்ட கடல் ஓரத்தில் காற்றாட நடந்து கால் ஓய்ந்து மெளனம் அடைந்த்து இருக்கிறீர்களா?
அறிமுகம் இல்லாத ஊரில் மார்கழி குளிரில் சாலை ஓரத்துடீக்கடையில் தேநீர் அருந்தி சொர்க்கம் கண்டிருக்கிறீர்களா?
நிலவின் வெள்ளை வெளிச்சத்தில் தனியாக நடந்த்து இருக்கிறீர்களா?
பச்சை வயல் வெளியில் பம்ப்செட்டின் சத்தத்தை தாண்டி பேசும் உழவுப் பெண்களின் வார்த்தைக்கு காது கொடுத்து இருக்கிறீர்களா?
இதையெல்லாம் ரசிக்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கைதானா என்று நினைத்தது உண்டா?
--ZAKIR HUSSAIN
14 comments: on "மனசு மயங்கும்....."
அருமை அருமை அருமை...
நிழலாடும் நிஜம்...
(கேள்விகளில் பெரும்பாலும் அனுபவ நிஜம்) தொடருங்கள்...
ரொம்ப ரசனையா இருக்கு! :-)
இதையெல்லாம் அனுபவிக்காதவர்கள் இதை படித்ததும் அதை எல்லாம் அனுபவித்த ஒரு சுகம் கிடைத்திருக்கும் ,
நன்றி சகோ அபு இபுறாகிம் / கிரி / சாகுல் ஹமீது
// இதையெல்லாம் அனுபவிக்காதவர்கள் இதை படித்ததும் அதை எல்லாம் அனுபவித்த ஒரு சுகம் கிடைத்திருக்கும் //
இதை எழுதிய நானே இந்த விமர்சனங்களில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..
ரொம்ப அருமையான இடுகை ஜாஹிர்..அசத்தல். நல்லாயிருக்கு..
கேள்விகளை படிக்கும் போதே சில அனுபவங்கள் நமது மனதில் நிழலாடுகின்றன.ஜாகிர் பாய் நல்ல பதிவு
Thanx MKR for your comments
அருமை, படிக்கும் போது அப்படியே சொல்லும் விஷயங்கள் கண்களில் நிழ்லாடுவது போல் இருக்கிறது. மிக நேர்த்தியான் எழுத்து தோரணை. வாழுத்துக்கள் ஜாகிர் பாய். தொடர்ந்து எழுதுங்கள் இன்ஷா அல்லாஹ்.
www.adiraitime.blogspot.com
Adirai Express is Real Express
www.adiraiairexpress.blogspot.com
நன்றி சகோதரர் ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்), உங்கள் ஊரிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஜாகீர் உங்களுக்கு ரொம்ப நேரம் இருப்பதுபோல் தெரிகிறது. இன்ஸூரன்ஸ் டல்லடிக்கிரதா.
Sembian Said//ஜாகீர் உங்களுக்கு ரொம்ப நேரம் இருப்பதுபோல் தெரிகிறது. இன்ஸூரன்ஸ் டல்லடிக்கிரதா.//
இல்லை
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?