தலைப்பு இப்படி வைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை, ஏனெனில் தேர்தலை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இப்படி ஒரு தலைப்பு போட்டு எழுதினாலாவது நம் மக்கள் மனதில் படும் என்ற நோக்கத்தில் தான்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் நம் மக்கள் எவ்வகையான கோரிக்கைகளை கையில் எடுத்திருக்கிறார்கள் மறுபடியும் கேட்டு ஏமாறுவதற்கு.
இனியும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் இத்தேர்தலில் சரியான பாடம் புகட்டினால்தான், அதிராம்பட்டினம் என்ற ஒரு ஊர் இந்தியாவில் இருப்பதாக மேலிடம் கீழிடம் எல்லாவற்றிற்கும் தெரியும், இல்லையெனில் மறுபடியும் அனைவரும் காதில் சங்குதான். அது என்ன நம் சமுதாயத்தவர்களின் முகத்தில் இழித்தவாயர்கள் என ஏதேனும் ஒட்டி இருக்கிறதா?, போன தேர்தல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அப்படி நிறைவேற்ற வில்லையெனில் ஏன் நாம் மறுபடியும் அவர்களுக்கு ஓட்டு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்?, இந்த தேர்தலில் நம் அனைவரும் ஒட்டு மொத்தமாக இத்தேர்தலை புறக்கணித்தால் என்ன? மக்களே ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் நம்மால் முடியாதது எதுவும் இல்லை, இதற்கு நம் மக்களிடம் ஒற்றுமை வேண்டும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற சொல்லுக்கிணங்க , இத்தேர்தலிலாவது இயக்க வேறுபாட்டை களைந்து விட்டு அதிரை மக்கள் என்ற ஓர் அணியில் இருந்து வென்று காட்டலாமே?
ஞாபகம் இருக்கிறதா? Aj பள்ளி விஷயத்தில் ஒற்றுமையாக இருந்து செயல் பட்டோமே அதேபோல் இந்த தேர்தலிலும் வென்று காட்டுவோம், ஓட்டு என்பது ஒவ்வொருவரின் தனியுரிமை, சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்து விட்டதா என்று.
சரி நம்முடைய கோரிக்கைகள் என்னென்ன :
1 . அகல இரயில் பாதை அமைப்பது
௨ .அல் அமீன் பள்ளிவாசல் எந்த தடையுமில்லாமல் கட்டுவது
3 . சுற்று சூழல் பாதுகாப்பு
அகல இரயில் பாதை:
அகல இரயில் பாதை தொடர்பாக நம் சகோதர வலைபதிவில் பார்த்தேன், ஏற்கனவே இதற்காக ஒதுக்கீடு செய்த நிதியை முறையாகப் பயன்படுத்தாததற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும் அல்லது புதிதாக பட்டுகோட்டை வரை அமைக்க ஒப்புதல் அளித்த இரயில் அமைச்சகம் அங்கிருந்து 12 கிலோமீட்டரிலிருக்கும் நம்மூருக்கு ஏன் அமைக்க முன் வரவில்லை, இதற்கு யார் காரணம்? நம்முடைய கோரிக்கை அவர்களுடைய காதுகளுக்கு சென்றடைய வில்லையா அல்லது இது இடையில் உள்ள அரசியல் வாதிகளின் வேலையா, அப்படி அவர்களின் காதுகளுக்கு விழவில்லையானால் எப்படி விழ வைப்பது, தனி தனியாக முனகினாள் அவர்களுக்கு காதில் கொசு மொய்ப்பது போன்றுதான், ஒன்று படுவோம் வென்று காட்டுவோம், அப்படி அரசியல் வா(ந்)தியால் தான் கோரிக்கை அவர்களிடம் போய் சேரவில்லையெனில் அவர்களை நமதூர் பக்கமே அவர்களை அனுமதிக்காதிர்கள் தன்மானமுள்ளவர்களாக இருந்தால்.
2.அல் அமீன் பள்ளிவாசல் எந்த தடையுமில்லாமல் கட்டுவது
இதைப்பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை, இந்த விசயத்தை எப்படி கையாளுவதென்று?. இவ்விஷயத்தில் இப்படியே மவ்னம் காத்தால் அதுவும் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
3 .சுற்று சூழல் பாதுகாப்பு:
இந்த விஷயத்தில் நம்முடைய ஒத்துழைப்பும் தேவை அதே நேரத்தில் நமதூர் பஞ்சாயத்து போர்டின் பொடுபோக்கு தனத்தை பார்த்து கொண்டு சும்மாவும் இருக்க முடியாது. ஓட்டு கேட்டு வருபவர்களிடம் இது விஷயமாக கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது இவைகளை தனியார் மயப்படுத்துவதற்கு உண்டான சாத்தியக்கூர்கள் இருந்தால் இதையும் கோரிக்கையாக வைக்கலாம், தனியார் என்பது சாத்தியப்படுமா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் முயற்சி செய்து தான் பார்க்கலாமே.
எது எப்படியோ மூன்றாவதாக சொல்லப்பட்ட விஷயம் நமதூர் பஞ்சாயத்து போர்டை சார்ந்து இருப்பதால் நமதூரில் சரியான தலைமைத்துவம் அமைந்தால் அது சாத்தியப்படும் என்பது என் கருத்து, அதே போன்று மேலே சொல்லப்பட்ட 1 ,2 விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்.
11 comments: on "தன்மானமுள்ள அதிரை வாசிகளுக்கு மட்டும்"
மிக அருமைமையான தொடக்கம் அதிரைவாசிகளின் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் தொட்டுவைத்துள்ளீர்கள், இனி வரும் நாட்களில் தேர்தல் சூடுபிடிக்கும் நேரத்தில் நம் மக்கள் ரோசத்துடன் இருந்தார்களேயானால் எதுவும் சாத்தியமே.
ஒற்றுமை என்று வேறும் பேச்சிலும் எழுத்திலும் அடுக்கடுக்காக சொல்லிவிட்டு,பின்னால் அதற்கு வேட்டுவைக்கும் விதமாக மக்களை குழப்பி தானும் குழம்பி செயல்படும் (சமூக நலவிரும்பிகள் என்று சொல்லிதிரியும்) நம்மர்வர்களின் போக்கு என்று ஒழியுமோ, அன்று தான் ஒற்றுமையை எட்ட முடியும்.
ஆளுக்கொரு வீர வசனங்களை வலைப்பூக்களில் எழுதிதள்ளுவதைவிட கூட்டாக இருந்து கலந்தாலோசனை செய்து அரசியல் தொடர்பானவைகளில் ஊர் நலன் கருதி செய்திகள் வெளியிடலாம். அதன் செய்திகளை உரியவர்களின் கவனத்துக்கு கூட்டாக முறையாக எடுத்துச் செல்லலாம். இதற்கு ஒரே வழி இவ்வேலைகள் செய்பவர்கள் யார் என்பதை தெரிவித்தால் தான் சாத்தியம், செய்தியும் பலம் பெரும்.
நாம் மறைந்து நின்று வெளியிடும் செய்தி, கோரிக்கைகள் பத்தோடு பதினொன்னு என்றே போகும் முக்கியத்துவம் இல்லாமல்.
எல்லாவற்றையும் விட சுய வெறுப்பிள்ளாதவர்கள் அதிரையில் இருந்து சமூக நோக்குடன் உள்ள தகவல்களையும், கோரிக்கைகளையும், ஊழல் செய்திகளை, அநீதிக்கேதிரான செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொண்டிருக்கும் வேலைகளை செய்ய முற்படவேண்டும். அதனால் ஏற்படும் சவால்களை எதிர்நொக்குபவர்களாக இருக்க வேண்டும். இதற்கான களம் காண்பதே புத்திசாலித்தனம்.
ஒற்றுமை அவசியம், சுயநலமற்ற சமுதாய நலன் மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் போக்கு என்று நம்மவர்களுக்கு வரப்போகுதோ?
//வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி? //
இதை பிட் நோட்டீசா அடிச்சி ஜும்மா அன்னைக்கி குடுங்க ..இன்ஷா அல்லாஹ் நினைதது நடக்கும் . அவர்கள் காதில் விழுந்தால் சில நேரம் தேர்தலுக்கு முன்னமே நடக்கலாம் :-)
muarchi saithal mudiathathu illai
Narukunu Naalu kelvi Ketrukeenga..... Ewlo nalaiku dhan arasiyal saakadainu saaku sollikite samalikradhu..... Ellarum vettiya madichu kattitu erangunga boss..... Sutham pannirlam.....
Nam Unarvugalukkum, urimaigalukkum madhipu kuduthaal andri Oruthanukum Otu kedaiyadhu..... Vaalga Jananaayagam...... :)Naan Rosham ullavanyaa......
http://adiraiexpress.blogspot.com/2011/03/blog-post.html
தேர்தல் நெருங்கி வருகிறது,நம்ம தொகுதி எம்.எல்.ஏ.ரங்கராஜனும், எம்.பி.பழனிமாணிக்கமும் ஜும்மா வாசலில் (தலையில் தொப்பி கூட போட்டிருக்கலாம்) சில உள்ளூர் புல்லுருவிகளுடன் தோளோடு தோள் சேர்த்து கும்பிடும் போட்டு ஓட்டுக் கேட்பார்கள்.செக்கடிமேட்டிலும் நின்று வாக்குறுதிகளை அள்ளிவீசத்தான் போகிறார்கள்,சில பணம் வாங்கிகளும், ஊனாமானாக்களும் கோஷம் போட்டு கலைஞரும், ரங்கராஜனும்,பழனிமாணிக்கமும் முஸ்லீம் சமுதாயத்தின் முழு பாதுகாவலர்கள் என்று முழங்கத்தான் போகிறார்கள்...இதையும் கேட்ட நம்மவர்கள் சில வெற்று வாக்குறுதிகளை நம்பி தி.மு.க வுக்கே எங்கள் ஓட்டு என்று கையை தூக்கிக் காட்டுவார்கள். இதுதான் இந்த வருஷமும் நடக்கப் போகிறது.
இனியும் பொருப்பதற்கில்லை என்ற நிலை வந்த பின், வரும் சட்டமன்ற தேர்தல்தான் நம் கையில் உள்ள பலமான ஆயுதம்! இப்பொழுதே கட்சிக்காரர்களின் கண்ணில் படும் வண்ணம் நாம் எப்படி தேர்தலை நிராகரிக்கப் போகிறோம் என்பதை தெருக்களின் சுவரில் போஸ்டாகவோ, எழுத்தாகவோ பதிவது நல்லது.காலில் கூட விழுவார்கள்.
நல்லதொரு கட்டுரை
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
நம்முடைய முயச்சியும் வேண்டும்.
ஒற்றுமையோடு
சேர்ந்து செயல்பட்டல்
நிச்சயம் நன்மைகளாக நடக்கும்..
நடக்கனும்னுதான் எனக்கும் ஆவல்....@
pllan panni pannunga
ஃபர்லான தொழுகையையும் விட்டு விட்டு கொடி பிடிக்கிறார்கள் இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை
எது எப்படியோ, ஒரிறைவனை ஏற்ற முஸ்லிம்கள், ஒரே குர்ஆனை ஏற்ற முஸ்லிம்கள், ஒரே கிப்லாவை முன்னோக்கும் முஸ்லிம்கள் சுய விருப்பு வெருப்புக்காக தம்மை தாமே ஏசி பேசிக்கொண்டு, கேவலப்படுத்திக்கொண்டு சின்னா பின்னமாக சிதறிக்கிடக்கிறோம்.உங்களை வாழவைப்பதும், உங்கள் தேவையை பூர்த்தி செய்வதும் ஆட்சியும் ஆட்சியாளர்களும் என்று கோஷம் போடும் அப்பாவி முஸ்லிம்களே…! யாரை திருப்திபடுத்த யாரிடம் மோதுகிறீர்கள்.தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு சிறிது யோசி உன் நிலை சரியா..? நீ போகும் பாதை சரியா என்று உனக்கு சோறு போடும் அல்லாஹ் விளங்க வைப்பான்….இன்ஷாஅல்லாஹ். (குறைந்தபட்சம் சுபுஹாவது)
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?