Wednesday, February 18, 2009

படித்ததில் பிடித்தது

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,

செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது

தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.

அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று

விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய

தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு

சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை

சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.

திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்

பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம்

நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என

எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்

17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது

சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை

வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக

ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு

இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை

நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான்

முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்

ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,

இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய்

என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,

நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின்

தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும்

சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல்

இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Sent by
"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
read more...

Tuesday, February 17, 2009

நமக்கு புண்ணியம தேடித்தரும் இணைய தளம்

செலவே இல்லாமல் நமக்கு புண்ணியம் தேடித்தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவுகிறது. இந்த இணையதளத்திற்கு சென்று இலவச உணவு கொடுங்கள் என்ற மெனுவை கிளிக்கினால் போதும். நீங்கள் அன்றைய தினம் ஒருவருக்கு உணவு வழங்கிய புண்ணியவான் ஆகி விடுவீர்கள்.


இந்த இணைய தளத்தை நடத்துபவர்கள் பல நிறுவனங்களை ஸ்பான்சராக வைத்துள்ளனர். இணையதளத்தை பார்ப்பவர்களின் மூலம் ஸ்பான்சர் நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால், ஒரு நபர் பதிவுக்கு சமமாக ஒரு நபருக்கு உணவளிக்கும் செலவை ஸ்பான்சர் நிறுவனம் ஏற்கும். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் வருடத்திற்கு 25 லட்சம் பேர் பட்டினியால் இறக்கிறார்கள். இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேர் பட்டினியால் இறக்கின்றனர் என்பது போன்ற வறுமையின் கொடூரத்தை விளக்கும், புள்ளி விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கருணையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இணையதளம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுதான் அந்தத்தளம்...www.bhookh.com

read more...

View Word, Excel, PowerPoint Documents Without Microsoft Office

You received a Microsoft Office file(word/excel/powerpoint) as a mail attachment from your friend but there is no Microsoft Office on your computer to open the file.

You have two options to view the attached Microsoft Office file: purchase Microsoft Office Software or just download free Microsoft Office document viewers.

The free Microsoft Office viewer software allows you to view and print Microsoft documents created any version of Microsoft Office between Office 2000 to Office 2007. You can also copy data from Office documents to another programs.

* Download Word Viewer 2007
* Download Excel Viewer 2007
* Download PowerPoint Viewer 2007

However, you cannot edit an open file, save a file, or create a new file.
read more...

ஆபத்தான அஜினா மோடோ (AJINA MOTO)!

டாக்டர் கங்கா
சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ..
தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

அதென்ன அஜினமோட்டோ?
உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

மோனோ சோடியம் குளுட்டோமேட்
இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.
அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?
இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.
MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது
இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.
இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.
எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!
மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.
எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.
தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.
அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.
இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.
சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.
உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸ'ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.
ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)
கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.
சூப் பவுடர்கள்.

நன்றி: கூடல்.காம்
read more...

Monday, February 16, 2009

எலும்புகளை கறைதத்து விடும் தன்மை உடையது.

Assalamu Alaikkum.
கோக் என்பது ஒரு அற்புதமான பானம்(அதாவது கோக் என்ற மூலப்பொருள் உள்ள பானம்). இது உலகத்தில் உள்ள பலரையும் அதனுடைய சுவையால் கவர்ந்து இழுத்துள்ளது. நாடு, இனம், மதம் என்று எந்த விசயமும் இதை மாற்றவில்லை. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் இப்போதும் ஸண்டே மதிய சாப்பாடு கோக்குடன் தான்.

இப்போது அதனுடைய வேறு சில பயன்களையும் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
1. கோழி எலும்போ, ஆட்டு எலும்போ கோக்கினில் போட்டால் இரண்டு நாளில் கரைந்துவிடும்.

2. மூக்கை பொத்திக்கொள்ளுங்கள்.. ஒரு வாரமாக கழுவாத Toilet பேசினில் கோக்கை ஒரு சில மணி நேரம் ஊற வைத்து Flush செய்தால். பளிச் சுத்தம் நிச்சயம். ( Citric Acid நன்றாக சுத்தம் செய்யும்)

3. ஏதேனும் துரு கறைகள் கண்டால் ஒரு அலுமினியம் ராப்பரை கோக்கில் நனைத்து துரு இருக்கும் இடத்தில் தேய்த்தால் உடனே துரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


4. நட்டு போல்ட்டு துரு பிடித்து இருந்தால். கோக் நனைத்த துணியை கொண்டு அந்த போல்ட்டை ஊற வைக்கவும். பிறகு முயற்சி செய்யவும் வெற்றி நிச்சயம்.


5. சட்டையில் உள்ள கிரிஸ் கறையை சிறிது சோப்புடன் கோக்கை உபயோகித்து பாருங்கள்.

இதெல்லாம் சும்மா சொல்லங்க... பல நண்பர்களின் தீவிர ஆராய்ச்சியால் (??!!) கிடைத்த விவரங்கள்.


இப்படிபட்ட கோக்கை விட்டு விட்டு தண்ணீரை குடிக்க சொல்றது அநியாயமாத்தானே இருக்கு? தண்ணியில்லன்னா என்னா ஆகிடுமாம்?
தினமும் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்தால்


1. 2-3% உடல் வளர்ச்சிதைவு மாற்றத்தை குறைக்குமாம்.

2. பகல் நேர சோர்வு உருவாகுமாம்

3. Back pain, Joint Pain கூட குறைய வாய்ப்பு உள்ளதாம்

4. ஞாபக மறதி, கேன்சர் வர கூட வாய்ப்பு உள்ளதாம்.

உங்களுக்காக மேலும் பல விசயங்கள்

கோக்கில் உள்ள முக்கியமான கெமிக்கல் - Phosphoric Acid.

1995ல் ஒரு ரசயான ஆலையில் நான் வேலை செய்த போது அந்த PHOSPHORIC PLANTல் வேலை செய்கிறவர்களுக்கு மட்டும் அதிக அலவன்ஸ், Horlicks, இன்னும் சில பொருட்கள் மாதமாதம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்த கெமிக்கல் எலும்புகளை கறைத்து விடும் தன்மை உடையது.


மேலும் இந்த கோக் Concentrate டிரக்கில் கோக் உற்பத்தி செய்யும் ஆலைக்கு எடுத்து செல்லும் போது HIGHLY CORROSIVE MATERIAL போர்டு மாட்டி இருப்பார்கள்.

எனவே கோக் குடியுங்கள் ..... கொ(தி)ண்டாடுங்கள்......

டிஸ்கி : இப்போது கூட எனக்கு தெரிந்தவர்களின் மகன் USல் M.S படிக்க போனவர் அதிகமாக கோக் குடித்து ULCER வாங்கி கொண்டிருக்கிறார்.

Adirai -Abusumayya
Jeddah
read more...

Attn:Dubai,Qatar,Bahrain Users -TRY AGAIN AND AGAIN UNTIL YOU GET SUCCESS

Dear Brothers - Please passit on to Job Seeking Brothers for Free
Registration for any Job matching search - Avail this opportunity! !

Jazak Allah...

Qualifying for a job is easier than acquiring a job that matches the
caliber of a job seeker.

If he or she finds a job that best suits to the qualification and
experience they possess, then there is no other happiest occasion of
life for them. Hence, CaliberJobs. Com is the final destination for a
Job Seeker to reach his or her goal.

CalibreJobs. Com is poised to provide top-notch and the best talent
hunt and recruitment services to all categories of the companies. For
every job seeker CaliberJobs. Com would be an ultimate destination
with a lot of confidence to approach, at any stage. A Bio-data or CV
placed with CaliberJobs. Com would fetch every candidate a position
matching his qualifications and experience.

CaliberJobs. Com believes not in stagnation of anyone's experience.
One has to move on with different type of persons, offices and
businesses for his own progress and personal development. Here,
approach CaliberJobs. Com to get a service for you with a personal
touch to your candidature.

We do have Job search service at the personal level of a candidate by
forwarding the CVs to a lot of Companies, in India and Middle East.
As the days turn into weeks, months and years, our allied services
will be added in with leaps and bounds, such as on-line interviews
and selections, to ease the recruitment process.

CaliberJobs. Com will make available Employment Information to every
Suitable Candidate, helping them all the way to attain their goals
while making it easy for every willing
Employer/Organizati on/Firm/Company to find a Best Talent for the
continuous improvement of their Businesses.

Participate in our Jobs and Placement drive on line with full
confidence either to find a candidate of the best caliber you are
searching for or to associate yourself with a company that cares for
your caliber.

When your qualifications and experience get met with the Job's
requirements and responsibilities of a Company/Organizatio n, you
stand selected for that job. That is "The Job of Your Calibre"

CaliberJobs. com

A well established & reputed MNC requires the following suitable
personnels for their Gulf operations (UAE, Qatar, Oman, Kuwait &
Bahrain) - Urgent requirements.

Candidates fulfilling the below requirements may post their CV / bio-
data (free) with correct information at www. CaliberJobs. com.

Engineering - Chemical & Petrochemical - 30 nos.
Engineering - Civil & Construction - 50 nos.
Engineering - Electronics & Telecom - 45 nos.
Engineering - Mechanical - 50 nos.
Engineering - Petroleum, Mining & Marine - 55 nos.
Engineering - Power & Heavy Electrical - 55 nos.
Engineering - Elevator & Escalator - 50 nos.
IT - Hardware & Network Administration - 40 nos.
IT - Software & Web Development - 30 nos.
IT - Programmer - 30 nos.
HR Executives - 20 nos.
Recruitment Executives - 10 nos.
HR Assistants - 25 nos.
Purchase Assistants - 20 nos.
Admin Assistants - 25 nos.
Sales / Marketing Executives - 45 nos.
Accounts Assistants - 30 nos.

When your qualifications and experience get met with the Job's
requirements and responsibilities of a Company, you stand selected
for that job. That is "The Job of Your Calibre"

- CaliberJobs. com
read more...

வாழ்க்கை..

இதன் அர்த்தம்தான்
என்ன?

ஜனனம்,
மரணத்தை நோக்கி
மெல்ல நகர்கிறதே..
அதுதான் வாழ்க்கையா?

உறக்கத்தில் கூட
சுவாசிக்கிறானே மனிதன்..!
சுவாசிப்பதுதான் வாழ்க்கையா?

பசியை போக்க
பத்தும் செய்கிறானே..
எனின்..
புசிப்பதுதான் வாழ்க்கையா?

"கடலைக் கடப்பேன்..
நெருப்பில் நடப்பேன்..
நினைவில் மட்டும்
நீயிருந்தால்..
ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்.."
பொய்யாய் புலம்புகிறானே
காதலன்..
காதல்தான் வாழ்க்கையா??

தீமை செய்யாதே..
இறந்தால் நரகம்!
நன்மை செய்..
செத்தால் சொர்கம்!

ஆயின்..
வாழ்க்கை
மரணத்தில் மட்டுமே
விளங்குமா...?!!

எது வாழ்க்கை..?
விவாதிப்பதில்
விருப்பமில்லை எனக்கு!

வெற்றிடத்தை
காற்று நிரப்பும்!
இது விதி..

வாழ்க்கையை,
அன்பு நிரப்பும்..
ஒழுக்கம் நிரப்பும்..
பண்பு நிரப்பும்..
பாசம் நிரப்பும்..
கடமை நிரப்பும்..
காதலும் நிரப்பும்..
அமைதி நிரப்பும்..
ஆசையும் நிரப்பும்..!

இயற்கையோடு
நாம் செய்துகொண்ட
இடைக்கால ஒப்பந்தமே
வாழ்க்கை..

இதில்
ஆசைகளை கடந்துவிட்டால்..
பின் எதற்கு வாழ்க்கை?!

காதல் இல்லா
வாழ்க்கை..
கருத்தில்லாத கவிதை
போன்றது..

கடமை இல்லா
வாழ்க்கை..
கணக்கு இல்லாத
கல்வி போன்றது!

அன்பில்லாத
வாழ்க்கை..
'ழ'கரம் இல்லா
தமிழ் போன்றது...

அர்த்தம் இல்லாத
வாழ்க்கை..
ஆண்டவனே இல்லாத
மதம் போன்றது..!!

ஆசைகளை
அர்த்தப்படுத்துங்கள்..
வாழ்க்கையை
சுத்தப்படுத்துங்கள்...!!!

-அன்புடன் கிருஷ்ணமூர்த்தி, Malaysia.
read more...

தமிழக சுற்றுலா தலங்கள் - குற்றாலம்

குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.


2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.

7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம்: பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்கள் : குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற குற்றால நாதர் கோவில், இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், மற்றும் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

Thanks, Chennai Library
read more...

Sunday, February 15, 2009

பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை-Feed back

நான் எழுதிய பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை பற்றிய articleக்கு எனக்கு நிறைய இ-மெயில் வந்தது ,அதில் சகோதரர் SARFUDIN எழுதியது எல்லோரும் படிக்க உகந்தது.[ colour Font ல் பின்னிட்டாப்லெ]

Zakir Hussain


From SARFUDIN.......


முஸ்லீம்களாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற வேண்டும் என்று உண்மையிலேயே நமக்கு நம்பிக்கையும், மறுமையில் அல்லாஹ் இதைப்பற்றி விசாரித்து நமக்கு தண்டனை அளிப்பானே என்ற இறையச்சமும் உண்மையிலேயே இருக்குமானால், இதை மிகச்சுல‌பமாக உட‌னேயே ஒழித்துவிடலாம்.


1. மாமனார் வீட்டுக்கு (ஜெயில் அல்ல) வெளியூர் வாசிகள் போய்வருவது போல் மட்டுமே இருக்கவேண்டும்.


2. மனைவி வீட்டிலிறுந்து ப‌ணமாக, நகையாகவோ, வீடாகவோ (அதிரையினர்), வேறு எந்த வ‌கையிலும் எதனையும் பெறமாட்டேன் என்று உறுதியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அப்படி வாங்குவதை மிகக்கேவலமான செயல் என்ற எண்ணம் முதலில் நமக்கு இருக்க வேண்டும். (வீடு வேண்டாம் மனைக்கட்டு மட்டும் நல்ல இடத்தில், உங்கள் மகளுக்கு வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்ற புதிய அயோக்கியத்தனம் இப்போது சில‌வீட்டில் மட்டும் அறங்கேறுவதாக கேள்வி) உறுதி செய்து கொள்ளுங்கள்.


3. மாமனார் தருவதை நாம் பெறாவிட்டால் மறியாதைகுறைவாக‌
ஆகிவிடுமே என்று வெளியில் ந‌ல்லவர்போல் நடிக்க முயர்ச்சி செய்யாமல், இந்த காரியம் ஹராமானது, இதை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.



4. இறைத்தூதர் காட்டித்தந்த வ‌ழிக்கு மாற்றமாக, கேடுகெட்ட செயல்களை செய்பவர்களின் நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளாமல் (உறவின‌ர், நண்பர்களாக இருந்தாலும்) புறக்கனிக்க வேண்டும்.

பேச்சிலும், எழுத்திலும் இல்லாமல் இன்ஷாஅல்லாஹ் முதலில் குறைந்தபட்ச்சம் இதையாவது நடைமுறைப்படுத்த முயற்ச்சி செய்வோமே.

இந்த தீய செயளால் நமதூர் பொருளாதாரமும் ஆண்களின் உழைப்பும் எப்படியெல்லாம் வீனடிக்கப்படுகிறது என்பதை இன்ஷாஅல்லாஹ் விரைவில் அலசுவோம்.

SARFUDIN
read more...

தமிழக சுற்றுலா தலங்கள் - வேடந்தாங்கல்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் என்ற ஊரில் பறவைகள் நீர் சரணாலயம் அமைந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து சுமார் 70 தென்மேற்கே உள்ளது. செங்கற்பட்டிலிருந்து 28 கிலோமீட்டர் தென்மேற்கே இது உள்ளது. இந்தச் சரணாலயத்தின் பரப்பு சுமார் 0.3 சதுர கிலோமீட்டர். இதன் பருவ காலம் நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஆகும்.
1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்.

மதுராந்தகம் ஏரிக்கு மேற்கே மேல்மருவத்தூருக்கு வடக்கே வந்தவாசிக்குக் கிழக்கே இது உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்புள்ள ஏரியில் அடம்பு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் உயர்ந்து வளரக்கூடியவை அல்ல. படர்ந்து வளரக்கூடியவை. இதனால் இந்த மரங்கள் அந்த ஏரியில் படர்ந்து ஏரி நீருக்கு மேல் ஒரு மேடை அமைந்தது போல் உள்ளன. மழைக்காலத்தில் இந்த ஏரி நீர் நிரம்பி அடிமரங்கள் நீரில் மூழ்கிய நிலையிலிருக்கும். மேல் உள்ள கிளைகள் நீர்மட்டத்துக்கு மேல் மேடை போல் சிறிது உயர்ந்திருக்கும். இதனால் கிளைப்பகுதி குளுகுளுவென்று இருக்கும். நீர்ல் வாழும் மீன்களைச் சாப்பிட்டு வாழும் நீர்ப்பறவைகள் இந்த இடத்தை விரும்பு வருவதற்கு இது முக்கிய காரணமாகும். செப்டம்பர் - அக்டோபரில் பெய்யும் வடகிழக்குப் பருவக்காற்று மழை காரணமாக வேடந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அவற்றில் மீன்கள் தாராளமாக கிடைக்கும்.

ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருகின்றன. கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

இங்கு வரும் பறவைகளில் நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வேடந்தாங்கல் வரும் சுற்றுலா பயணிகள் இப்பறவைகளை கண்டுகளிக்க 'ஆப்சர்வேடரி டவர்ஸ்' (Observatory Towers) என்ற கோபுரங்கள் இந்த ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி அமர்ந்தபடி பறவைகளைக் கண்டு மகிழலாம். ஏரியின் கரைவழியாக உலாவச் செல்லுவதன் மூலமும் கண்டுகளிக்கலாம்.

இங்கு தங்குவதற்கு பாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. பொதுப்பணித்துறை தங்கும் விடுதி கருங்குழி என்ற இடத்தில் உள்ளது.

மேலும் தகவலுக்கு:
வனவிலங்கு பாதுகாவலர்,
டி.எம்.எஸ். வளாகம்,
எண், 256, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 006.
Thanks : Indian tourismJustify Full
read more...