பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து
பண்பெனும் பாலூட்டினார் அன்னை..
ஊரில் உன்னை அனைவரும் மதிக்க
அறிவெனும் சோறூட்டினார் தந்தை..
நாரில் பூவாய் என்றும்நீ மணக்க
நாதாக்கள் ஆற்றிய நற்பணியை
நேரில் காணும் நெஞ்சம் துடிக்க
நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..!
பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு
பனிசெய்து கிடந்திடு என்றும்நீ
பொதிஇவன் என்றுஉன் தந்தையை
பழித்து விடாதே ஒருபோதும்
கொதித்து எழுவாள் உனதன்னை- உருக்
குலைந்து விடுவாய் உடனேநீ..!
சிரித்து அவர்களை உபசரித்தால்
செழித்திடும் உனது எதிர்காலம்..
கண்ணீர்க் கடலை கடந்தவர்கள்
கவலையறி யாதுனை வளர்த்தவர்கள்..
தண்ணிர் அற்ற நடுக் காட்டினிலே
தவிக்க விடாதே அவர்களைநீ..
முன்னூறு நாளுனை சுமந்ததற்கு
மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு
முன்னேறும் வேளையில் பெற்றோரை
மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!
-K.கிருஷ்ணமூர்த்தி
0 comments: on "பெற்றோரைப் பேண்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?