பிறந்த மண்ணில் எப்போது ஜெயிக்கப்போகிறோம் ?
நம் ஊரில் உள்ளவர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் அடைய ஆசைஇருந்தும் முடியாமல் போனதற்க்கு கீழ்க்கண்ட விதிமுறைகளும் / வசனங்களும்தான் முட்டுக்கட்டை என்று எங்கு வந்து சத்தியம் செய்ய சொன்னாலும் நான் செய்வேன்.
- ஒருவன் உழைத்து 10 பேர் சாப்பிடுவது/ சில குடும்பங்களில் 10 க்கு அதிகமானோர்.
- நீதானே வாப்பா வீட்டுக்கு மூத்தவன்!!! நீதானே காப்பாத்தனும்!!! என்ற உயர்ந்த தத்துவத்தில் மயங்கி சொந்தஙகளில் உள்ள பல சோம்பேறிகளுக்கு படியளப்பது..
- வரதட்சணை என்ற கொடுமையும்/ கொசுறாக வலமை என்ற பாரம்பரியமும்.[ வலமை சாப்பாடு எல்லாம் ஊரில் உள்ள வெட்டிஆபிசர்கள் அரம்பித்தது என்பது தெரியாமலே கடைபிடிக்க ஆரம்பித்து அரை நூற்றான்டு ஆகிவிட்டது [உதாரணம்: மாப்பிள்ளைத்தோழன் சாப்பாடு]20 வயது மாப்பிள்ளைக்கு 60 வயதை தாண்டிய பெரியவர்களும் தோழன் மாதிரி வந்து சாப்பிட்டு விட்டு போகும் கணக்குதான் இன்று வரை எனக்கு "வெளங்கலெ'
- வெளிநாட்டில் மட்டும் தான் வாழ முடியும் / சம்பாதிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கை.
- நிறைய வருமானம் தரும் தொழில்கள்/ Financial Products [ Compliance with Islamic principles] பல இருந்தும் "தோப்பு / தொரவுகளில் வைத்து இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை.இதில் "தென்னயப்பெத்தா இளநீர் / பிள்ளயைப்பெத்தால் கண்ணீர்' என்ற தோப்பு விற்க்கும் ஏஜண்ட் கண்டுபிடித்த பழமொழி வேறு துணையாக
- நம் கண் முன்னால் பல வெளியூர்காரர்கள் ந்ம் ஊரிலேயே முன்னேறியும் நம் மீது நம்பிக்கையின்மை.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் நண்பர்கள் பெரும்பாலும் சொல்லும் வசனம் ' இந்த தடவையோட 'முடிச்சிட்டு' போயிடலாம்னு"[EXIT] இருக்கேன்.
இனிமேலாவது ஊருக்கு போனவுடன் வீட்டுப்பெண்களின் சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுதல்,பட்டுக்கோட்டைக்கும் / அதிராம்பட்டினத்துக்கும் பேயாக அலைதல். [ யாருடைய கார்/பைக் போனாலும் ' வா போயிட்டு 1 மனி நேரத்தில் வந்திடலாம் என்பதுதான் பெரும்பாலும் அந்த நாளின் முக்கிய நேரத்தை தின்றுவிடும்.
மற்றும் இன்னபிற தேவைகளில்[காது குத்து / சுன்னத் / கல்யாணம் போன்ற தேவைகளில் தனக்கு முக்கியத்துவம் தருவது ஏதோ தனக்கு ஆக்ஸ்போர்டில் பட்டம் கிடைத்துவிட்டதாக மயங்காமல், நீஙகள் அங்கு இல்லாவிட்டாலும் காது குத்தப்படும் என்ற உண்மை அறிக!
மற்றும் தோப்பு / கடற்க்கரை / ராஜாமடம் பாலம் / புளியமரம் /மெயின் ரோடு/ செக்கடிமேடு விசிட்டிங் , பள்ளிவாசலில் தொழுகை முடிந்தவுடன் 2 மணி நேரம் பேசியும் நேரம் போனது தெரியாமல் இருப்பது இவைகளை தவிற்க்கலாம்.
சரி இப்படி எழுதுவதால் ஒய்வாக இருக்கும் நேரம்தானே இதுவெல்லாம் தவறா? "பொழுதுபோக்குதானே" என நினைக்கலாம். " பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றுதான் சொல்கிறேன்."ஊரில் செட்டிலகானும்பா'என்றால் ஏதாவது அதற்க்காக செய்ய வேண்டும் இல்லையா?. அதற்க்கு சம்பந்தம் இல்லாத செயல்களை செய்தால் எப்படி வாழ்க்கையில் ஜெயிப்பது?
இப்போதைய இந்தியாவை நோக்கி நிறைய நாடுகள் தொழில் தொடங்கவும் முதலீடுகள் செய்யவும் ஆரம்பித்து விட்டன. விசுவின் அரட்டை அரங்கத்தில் சொல்லப்படும் இந்தியபெருமைகளில் மயங்கிவிடாமல் உங்களை சார்ந்தவர்களுக்கும் / உங்களுக்காகவும் முன்னேர இன்றே முடிவெடுத்துவிடுங்கள்.
இந்த பிரபஞ்சத்தை ஆளும் வல்ல இறைவன் உங்கள் நேர்மையான தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவான் [இன்ஷா அல்லாஹ்]
ZAKIR HUSSAIN
0 comments: on "பிறந்த மண்ணில் எப்போது ஜெயிக்கப்போகிறோம் ?"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?