DOWNSYNDROME
தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் நமது ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள்.நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.
இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். 9 வருடத்துக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு இது போன்ற பெண் குழந்தை பிறந்தது இப்போது அந்த பெண் குழந்தை இறைவன் உதவியாலும், முறையான பயிற்ச்சிகளாலும் எல்லோரைப்போல் தனது வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.
அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்ச்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின்
செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்
செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்
இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி / யோகா / வர்மம் ] இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை.இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்
இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மையில் மன நலம் குறைந்தவர்கள்?. நமது ஊரில் இந்த குழந்தைகளுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன். இறைவன் உதவியால் முயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
ZAKIR HUSSAIN
0 comments: on "DOWNSYNDROME"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?