ஒரு தடவை நானும் என் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம்(அரட்டை) என்னுடைய நண்பர்களில் ஒருவனை மட்டும் பார்த்து அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்துக்கொண்டிருந்தார்கள், அவனுடைய ஒரு நல்ல குணத்தை நான் இங்கு சொல்லியாக வேண்டும்,(நண்பர்களில்) யார் அவனை கிண்டல் செய்தாலும், அடுத்த வினாடியே அனைத்தையும் மறந்து விட்டு, கூலாக என்ன மச்சான், இன்னிக்கி எங்கையாவது வெளியே போலாமா என்று சொன்ன உடனே அனைவரும் வெக்கிப்போய் தலை குனிந்து விடுவார்கள். அனைவரும் போனப்பிறகு அவன் என்னிடம் அன்று நடந்த நிகழ்வையும் அவன் மனம் பட்ட கஷ்டத்தையும் சொல்லி காண்பிக்கும் பொழுது , கிண்டல் செய்தவர்கள் மீது ஆத்திரம் மேலோங்கி இவர்களெல்லாம் உண்மையான நண்பர்கள் தான என்ற எண்ணம் வரும், ஏனெனில் ஒரு உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டுமெனில் "அவனைப்பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்" அவனுடைய கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து கொள்ள வேண்டும், அனைத்தையும் விட அவர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்ப்போல் பேச வேண்டும்.
இந்த பதிவை படிக்கும் என் நண்பர்களுக்கு நான் யாரைப்பற்றி எழுதி இருக்கிறேனென்று புரியும்.
:- இச்சிறியோனின் எழுத்தில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும்
0 comments: on "கல்லூரி நினைவுகள் - I"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?