அன்றொரு வியாழன் மதியம்,மக்காவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி ,என் மாமாவோடு பஸ் ஸ்டாப் சென்றடைந்தேன், போனவுடன் அங்கே ஒரே மரியாதை, (மக்கா, மக்கா,மக்கா என்று கூறி பிறகு என்னை ராஜ மரியாதையுடன் அழைத்து அவனுடைய காருக்கு சென்றதை நினைத்தால், இன்றும் புல்லரிக்குது).
பிறகு மக்காவிற்கு சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் , இது வரை காணாத காட்சிகளை என்னால் பார்க்க முடிந்தது, என்னங்க ஓவரா பில்டப் போடாமே விசயத்துக்கு வாங்கன்னு சொல்றிங்களா,
* முன்பெல்லாம் ஜித்தாவிலிருந்து சில மைலுக்கு அப்பால் நிறைய காய்ந்து போன மலைகளும் பாறைகளும் , யாருமில்ல சிறு பாலைவனமுமாக காட்சியளித்த எனக்கு, தற்பொழுது அங்கெல்லாம் மக்கள் கூட்டத்தையும் அந்த பச்சையான புள் முளைத்த பாறையை பார்க்கும்போது அளவில்லா மகிழ்ச்சியும், இவையெல்லாம் படைத்த இறைவனின் வல்லமையையும்தான் பறைசாற்றியது.
* அப்படியே போகும்போது அங்கேயும் மக்கள் கூட்டம், ஆனால் மலையுமில்லை மகிழ்ச்சியுமில்லை, ஒரு அதிர்ச்சி , அது என்னவெனில் ஒரு அழகான கார் கசக்கி போட்ட காகிதம்போல் இருந்ததை பார்த்ததும் , அவர்கள் மேல் பரிதாபமாகத்தான் இருந்தது, உலகிலேயே அதிகமாக வாகன விபத்து ஏற்படுவது சவுதியில் தானாம், அதிவேகம் ஆபத்தை தரும் எனபது அவர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது.
* என்னடா இது , மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், இவர்களுக்கு பொருமை யே இல்லையா என்று நினைத்து கொண்டிருக்கும்போது, ஒரு வழியாக மக்காவை சென்றடைந்தேன். மாஷா அல்லாஹ்! பாங்குடைய சத்தத்தை கேட்டவுடன் ,மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த அந்த கண்கொள்ளாத காட்சியை, வெறுமனே எழுத்தில் எனக்கு வருணிக்க தெரியவில்லை, நானும் என் நண்பனும் இஷா தொழுது விட்டு அந்த பிரமாண்டமான பள்ளியில் காபாவை நோக்கியவனாக அதனுடைய சரித்திரதைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் என் நண்பன் துவாவுடைய (இறைவனிடம் உங்களுடைய தேவையை எப்படி கேட்பது போன்ற) விஷயத்தை பற்றி மிக அழகாக சொன்னான், பிறகென்ன நாங்கள் இருவரும் எங்களுக்குத் தேவையானவற்றை கேட்டவுடன், எங்களின் உள்ளத்தில் கிடைத்த அமைதி யாருக்குதான் அப்பொழுது கிடைத்திருக்க முடியும்?, ஆகவே சகோதர, சகோதரிகளே, மனிதனின் சஞ்சலங்களை மனிதனிடம் சொல்லி அழுவதைவிட, நம்மை படைத்த அந்த இறைவனிடம் அழுது கேட்கும் போதுதான் உங்களின் உள்ளம் இன்னும் அமைதி பெறுகிறது.
குறிப்பு: இதுதான் எனது முதல் கட்டுரை, ஆகையால் ஏதேனும் பிழையோ , வேறேதும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கிழ் காணும் மின்னஞ்சலுக்கு (mansooramk @gmail .com )அனுப்பவும், அல்லது நன்றாக இருந்தால் இங்கயே பின்னுட்டம் மிடவும்.
12 comments: on "சுவாரசியமான பயணம்"
அல்ஹம்துலில்லாஹ் முதல் முயற்சி நலமே.
[[நம்மை படைத்த அந்த இறைவனிடம் அழுது கேட்கும் போதுதான் உங்களின் உள்ளம் இன்னும் அமைதி பெறுகிறது.]]
மிகவும் சரியானதை சொல்லியிருக்கீங்க - இன்ஷா அல்லாஹ்.
//உங்களுடைய வருகைக்கும்
பின்னுட்டத்திற்கும் நன்றி சகோதரர் ஜமால் அவர்களே//
நல்லா இருக்கு மன்சூர், இது போல சிறு சிறு ஆக்கங்களாக தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ். நல்லா எழுதியிருக்கீங்க மன்சூர். தொடர்ந்து எழுதுங்கள்.
///நம்மை படைத்த அந்த இறைவனிடம் அழுது கேட்கும் போதுதான் உங்களின் உள்ளம் இன்னும் அமைதி பெறுகிறது///
அப்போது மொத்தபாரமும் இறக்கிவைத்தது போன்று ஒரு மன நிம்மதி ஏற்படுமே. சுப்ஹானல்லாஹ். அந்த உணர்வு மிக அருமையானது.
உங்களுடைய பிளாகை பார்த்த பிறகுதான் எனக்கு நிறைய எழுத வேன்டுமென தோன்றியது உங்களுடைய வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி சகோதரர் ஷாபி அவர்களே
நன்றி நவாஸ் அண்ணா, உங்களுடைய கருத்துக்கும்
பின்னூட்டத்திற்கும், உங்களுடைய அந்த என்.ஆர்.ஐ
கட்டுரையை ஒவ்வொரு நாளும் நினைப்பதுன்டு.
புனித பயணம், புனித மெக்காவைப்பற்றி இன்னும் நிறைய எழுதிருக்கலாம்,
நிறைய எழுதுங்க..
ஆம் சகோதரர் அபுஅஃப்ஸர் அவர்களே, நிறைய
எழுத வேண்டுமேனதான் ஆசை, பள்ளிக்கூடத்திலேயே
கட்டுரை எழுதிய எனக்கு பிளாக்கில் கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது
என்று தெரியவில்லை
இனி வரும் காலங்களில்தான், நிறைய எழுதலாமென நினைத்துள்ளேன்
//பள்ளிக்கூடத்திலேயே
கட்டுரை எழுதிய எனக்கு பிளாக்கில் கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது
என்று தெரியவில்லை//
மாஷா அல்லாஹ் தொடருங்கள். அடுத்த பதிவுன்னு போட்டு கூட மக்காவைப் பற்றி எழுதலாம். முதல் தடவை எழுதும் போது ஒன்றூம் புரியாது, ஆனால் போக போக ஐடியாக்கள் கிடைக்கும்.
ரொம்ப சந்தோஷம் அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், மக்காவை பற்றி நிறைய எழுதலமென்றுத்தான் ஆசை, இன்ஷா அல்லா கூடிய விரைவில் எழுதுறேன் ,
Thanks for your visit, Fathima.
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?