என்னங்க! அப்படி ஒரு பார்வை கட்டுரையின் தலைப்பை பார்த்து, ஆம் முதல் கட்டுரையை எழுதிய பிறகு அடுத்த தலைப்பை தேர்ந்தெடுபதற்குள் போதும் போதும்னு போச்சு, சரி விஷயத்துக்கு வருவோம், (இச்சிறு தந்தைக்கு)இச்சிரியோனுக்கு தெரிந்த,கற்ற சில விஷயங்களையும் உங்கள் முன் பரிமாறி கொள்ளலாமென ஆசை, நான் கல்லாத பல விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமென ஆசை.
ஒரு சிறந்த பெற்றோர் என்று சொல்லுவதற்கு, அவரை எப்படியெல்லாம் உதாரணம் காட்டலாம் :
ஒரு சிறந்த பெற்றோர் என்று சொல்லுவதற்கு, அவரை எப்படியெல்லாம் உதாரணம் காட்டலாம் :
- மகத்தான கடமைகளை அறிவார்
- விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்
- தாராளமாகச் செலவிடுவார்
- ஆண், பெண்ணிடையே வேறுபாடு காட்டமாட்டார்
- சமத்துவம் பேணுவார்
- உயர்பண்புகளை வளர்ப்பார்
குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.
மேற்சொன்ன அனத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நல்ல சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.
உபகாரம் , போதுமென்ற மனம், மகிழ்ச்சி ஆகிய குணங்கள் மூலம்தான் ஒரு குழந்தையை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்ல முடியும். நம் பிள்ளைகளின் உள்ளத்தில் இடம் பிடித்து , பிறகு அவர்களுக்கு நற்பண்புகளை புகுத்த வேண்டும், பிள்ளைகளின் மனதில் எப்படி இடம் பிடிப்பது, இதோ சில வழிகள்:
- அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்
- அவர்களை முகமலற்சியுடம் அணைத்து அன்புகாட்ட வேண்டும்
- மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து உற்சாக படுத்த வேண்டும்
- முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நாசுக்ககவும்(நளினமாகவும்) , முரட்டுதனமின்றி (கொடூரத்தனமின்றி) சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.
- கடைசியாக நீங்கள் உங்கள் பிள்ளைங்களுக்கு ரோல் மாடலாக(முன்மாதிரியாக) ஆகி காட்ட வேண்டும்.
முற்றும்...
7 comments: on "பெற்றோரும் பிள்ளைகளும்"
குழந்தை வளர்ப்பு பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்... மாசா அல்லாஹ்.. தொடர்ந்து எழுதங்கள்...
வாழ்த்துக்கள்..
சிறு வயது தந்தையானாலும் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அருமை, இது போன்ற சிறு குறிப்புகளை படிக்கும்போது மனதில் இருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். மற்ற பதிவர்களின் ஆக்கங்களையும் படித்து, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே?
// நன்றி சகோதரர் ஷபி அவர்களே, உங்களுடைய ஊக்க்ம்
தான் என்னை இப்படி எழுத வைத்தது. நான் அனைவருடைய
தளத்திற்கு சென்று இதுவரை படித்ததோடு நிறுத்தி விட்டென்
இனிமேல் இடுக்கை இடுகிறேன்.//
// நன்றி சகோதரர் அபூ, என்ன ஆளயே கானோம்,
நலமாக இருக்கிறீர்களா?//
சின்ன வயசுலேயே பெரிய விஷய்ங்கள் சொல்றீங்க. சந்தோஷம். தொடர்ந்து எழுதுங்க.
இம்மாதிரி விஷ்யங்கள் எப்பவும் நம் நினைவில் இருத்திக் கொள்ளவேண்டியவை; நன்றி.
வாங்க அம்மா(ஏனெனில் என் மாமனார் பெயரும் ஹுசைன் தான்), உங்கள் தளத்தில் எல்லா ஆக்கங்களையும் படித்து ரசித்திருக்கிறேன்,அனைத்தும் அருமை,உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி , மீண்டும்வாருங்கள்.
மாஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால் உங்கள் குழந்தை(களு)க்கு நல்ல தந்தை கிடைத்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் - நாங்களும் இதை கவணத்தில் கொள்கிறோம்.
நன்றி சகோதரர் ஜமால் அவர்களே, இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது, உங்களின் ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?