பெட்டி(carton) என்ற உடனே வெளிநாட்டில் உள்ள நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது விடுமுறையில் ஊருக்கு போற நாளைத்தான், ஆக ஒருதடவை ஊர் போய் திரும்பியதும், சில பேர் அதை பத்திரமாக வைப்பதுமுண்டு, சிலபேர் அதை ரோட்டில் உள்ள குப்பைதொட்டிக்கு பக்கத்தில் வைத்ததுமுண்டு .
இந்த இரண்டுபேருல, ரெண்டாவது ஆளிருகிறாரே அவர், அவருக்கே தெரியாமே ஒரு பெரிய உதவியை செய்கிறார்,
ஆமாங்க , இதன் மூலம் துப்புறவு தொழிலாளி முதல் குப்பை பொறக்கும் ஆள் வரை பயனடைறாங்க,
"ஒருமுறை மாமாவோடு என் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தேன், உங்களுக்கெல்லாம் தெரியும் இங்கு குப்பை வண்டிக்கு பின்னால் இருவர் ஏதோ பஸ்ஸில் தொங்குவதுப்போல் தொங்கிக்கொண்டு போவார்கள், அவர்களுக்குதாங்க இந்த பெட்டி பெரிதும் பயன் தருகிறது (இங்கு நான் பெட்டியைமட்டும் மையமாக வைத்து எழுதுகிறேன்,மற்ற பொருளும் பயன்தரும்). நாங்கள் அவர்களுக்கு பின்னால் கிட்டத்தட்ட மூன்று குப்பை தொட்டியை கடந்திருப்போம் (ஏனென்றால் அந்த வண்டி ரோட்டை அடைத்து கொண்டு சென்றதால்) எடுத்த பெட்டியை அவர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அதை பாதுகாத்து எடுத்து சென்ற விதம் என்னை நிறைய யோசிக்க வைத்தது, அவருடைய இந்த செயலுக்கு பின்னால் அவருடைய வறுமையும், கல்வியின்மையும்தான் என் கண்ணுக்கு தெரிந்தது "
ஆகையால் ஏதேனும் பொருளை உங்களுக்கு தேவை இல்லாத பட்சத்தில் , அது மற்றவர்களுக்கு தேவைப்படுமென்று நினைத்தால், அதை அப்படியே குப்பைத்தொட்டியின் உள்ளே போட்டு விடாமல் வெளியே வைத்தால் , அவர்களுக்கு பயன் தரும் , இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் நீங்கள் நிறைய நன்மையை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் , அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தினமும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதிர்கொள்ளுங்கள்.
__________________________________________________________________
ஆகையால் ஏதேனும் பொருளை உங்களுக்கு தேவை இல்லாத பட்சத்தில் , அது மற்றவர்களுக்கு தேவைப்படுமென்று நினைத்தால், அதை அப்படியே குப்பைத்தொட்டியின் உள்ளே போட்டு விடாமல் வெளியே வைத்தால் , அவர்களுக்கு பயன் தரும் , இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் நீங்கள் நிறைய நன்மையை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் , அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தினமும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதிர்கொள்ளுங்கள்.
__________________________________________________________________
SUFFIX said... இன்னும் இந்தப் பெட்டிகளை எடுத்து ஏழை மக்கள் பலர் சந்தையில் விற்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தும் கொள்கிறார்கள், மீள்சுழற்சிக்கும் (Recycle) பங்களிக்கிறது.
12 comments: on "ஒரு பெட்டியின் கதை"
இன்னும் இந்தப் பெட்டிகளை எடுத்து ஏழை மக்கள் பலர் சந்தையில் விற்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தும் கொள்கிறார்கள், மீள்சுழற்சிக்கும் (Recycle) பங்களிக்கிறது. பதிவாள்ர் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிச்சிட்டிங்க மன்சூர். வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்திற்கும், தகவலுக்கும் நன்றி சகோதரர் ஷஃபி அவர்களே.
அட்வைஸ்.. அட்வைஸ்
நானும் பார்த்திருக்கிறேன் தேவையனவர்களுக்கு தேவையானநேரத்தில் பயன்படுவதை
நன்றி சகோதரர் அபுஅஃப்ஸர்
ஆமாங்க, இங்கயும் அந்த அட்டைப்பெட்டிகளைத் தேடி சேகரிப்பவர்கள் நிறையப் பார்க்கலாம். அதுபோல, பழைய நியூஸ்பேப்பர்கள், செருப்புகள் என்று பலவற்றை குப்பைத் தொட்டியினுள் போடாமல் வெளியே வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால் இருக்காது. யாருக்காவது பயன்பட்டிருக்கும்.
ரொம்ப நன்றி ஹுசைனம்மா உங்கள் தகவலுக்கு , இங்கு ஏழை மக்கள் கஷடப்பட்டு கிளறி கிளறி எடுக்கும்போதுதான் எனக்கு இத பத்தி பதிவு போடலாம்னுதோணிச்சு.
soooparappu.....
எல்லாம் உங்க பிளாக்கை படுச்சத்துக்கபுரம்தான் இப்படி எல்லாம்
பகிர்ந்தமைக்கு நன்றி...
முயல்கிறேன்...
உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி Mr.டக்கால்டி
Assalamu Alaikum..am new to this site..and am geting excited.
Nice to see this site as useful to all. Keep it up Mansoor brother.
Wa Alaikkumussalam Mr. Mohamed, i really happy to welcome you to this blog, Thanks for your visit,
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?