Sunday, February 21, 2010

துபாயில் அவன்

துபாயில் அவன்  என்றவுடன் யாரும், ஏதோ எம்.ஜி.ஆர் படம் என்று என்னிட வேண்டாம், இது ஒரு உண்மையான(கசப்பான) சம்பவம், ஆமாங்க , மூன்று வருடத்திற்கு முன் ஒரு இளைஞன் துபாயுக்கு பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் சென்ற அவனுடைய பயணம் வெறும் கனவாகவே போனதைப்பற்றித்தான் இங்கு எழுதுகிறேன்.

ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று சென்னையை சென்றடைந்த அவன் ஒரே சோகமாக காணப்பட்டான், நாம் இந்நாட்டை விட்டு, வீட்டை விட்டு பிரியபோகிறோமே என்று நினைத்தானோ என்று தெரியவில்லை. அன்று மாலை ஏர்போர்ட்டை சென்றடைந்தவுடன் அவன் ஏதோ ஒன்றை பார்த்த படியே நின்றுக் கொண்டிருக்க நானும் அவனுடன் சேர்ந்து பார்த்த பொழுதுதான் என் மனமும் லேசாக கனத்தது, அது என்னவெனில் 21 வயது மதிக்கத்தக்க இன்னொரு பையன் அவனுடைய தாயை விட்டு முதல் தடவை பிரிகிரானோ என்னவோ தெரியவில்லை, தைரியம் சொல்லவேண்டிய தாய் ஏனோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை கண்ட அவனுக்கும் எனக்கும் சற்று மனது கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் சுதாரித்து கொண்ட நான் இதெல்லாம் ஏர்போர்டில் சகஜம்தாண்டா, அதை கவனிக்காமல் நீ தைரியமாக கிளம்பு என்று சொல்லிவிட்டேன், பிறகு அவனும் போய் துபாயில் இறங்கியவுடனே அங்கு அவனுக்கு ஒரே மகிழ்ச்சி அவனுடைய நண்பர்களை பார்த்தவுடன், ஆஹா நமக்கு தெரிந்தவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்களே இனி நமக்கு கவலையே இல்லையென அவன் நினைத்ததுதான் தப்பு.

துபாயுக்கு போகுமுன் இவனுக்கு தங்குமிடம் மற்றும் சுற்று வட்டாரத்தை பற்றி ஒரு சில கற்பனையுடன் சென்று அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது, தாங்கும் அறையைப்பார்த்த இவனுக்கு மனதில் ஒருவகையான நெருடல், ஏனெனில் ஒரு சிறிய அறைக்குள்(20 x 20 )அவனோடு சேர்த்து பத்து பேர், ஒவ்வொரு சைடுலையும் பெர்த் போடப்பட்டு ஒரு பக்கத்துக்கு இரண்டு பேர் விதம் மொத்தம் 8 + கீழே படுப்பவர்கள் இரண்டுபேர் ஆக மொத்தம் 10 பேர், அப்பொழுதான் அவனுக்கு புரிந்தது இதுதான் பேச்சுலர் ரூமோ என்று, சுற்று வட்டாரம் சென்னையில் மன்னடி போன்று இருந்ததாம், 23 வருடங்களாக மூட்டை பூச்சி என்று தெரியாத அவன் அன்றுதான் பார்த்தானாம், அந்த பூச்சி  இரவில் அவனையும் விட்டு வைக்க வில்லையாம் கடித்து கடித்து கலைத்து போய் "பாவம் இவன் எவ்ளோ கடிச்சாலும் வாங்கிடுறான் இவன் நல்லவேன்ன்னு இவன விட்டுட்டு போயுடுச்சாம்", ஒவ்வொரு தடவையும்  அந்த மூட்டையை  பார்க்கும் போது , அவர்கள் masking tape மூலம் ஒட்டி எடுக்கும்போதுதான் நினைத்தேன், இந்த டேப் ஒரு வேலை இதுக்காகத்தான்  தயாரித்து இருப்பார்களோ என்ற எண்ணம் வந்ததாம் .

சரி வந்தது வந்தாச்சு இனிமேல் யோசித்து எந்த பயனுமில்லை என்று வேலை தேடும் படலத்தில் இறங்கிய இவனுக்கு முதல் 15 நாளாகியும் வேலையொன்றும் கிடைக்கவில்லையாம், அவன் போய் இருப்பதோ விசிட் விசா இன்னுமிருப்பதோ  கொஞ்ச நாள்தான் நாம் என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது, சரி கிடைத்ததில் முதலில் இருந்துக்கொண்டு வேறு நல்ல வேலையை தேடி கொள்ளலாமென்று நினைத்தான்  அப்பொழுதுதான்  அவனுக்கு இன்னொரு வேலையும் கிடைத்தது, அது கொஞ்சம் சம்பளம் அதிகம், வேலையும் அதிகம் அதோடு டார்ச்சரும்  அதிகம். வேறென்ன செய்வது இதுதான் நமக்கு விதியென்று அதிலேயே சிலகாலம் தொடர்ந்த அவனுக்கு நாளுக்கு நாள் டார்ச்சரும் அதிகமாகி கொண்டே போனது அப்படி அங்கு சகித்து கொண்டு இருந்திதுருந்தால் பெர்மனென்ட் விசா கிடைத்திருக்கும் ஆனால் டார்ச்சரோ அதிகம் , விசா முடியும் நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது, இனியும் தாங்க முடியாத அவன் அந்த கம்பெனியை விட்டு ஊருக்கு போக ஆறு நாட்களுக்கு முன் வெளியாகி விட்டு அவன் அடைந்த மன உளைச்சலும், துன்பங்களும் ஏராளம், பிறகென்ன விசாவுடைய நாட்களும் முடிந்தது   அவனுடைய கனவும் முடிந்தது.

இறுதியாக ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு 30 திர்ஹம் கொடுக்க வேண்டி இருந்தது ஊருக்கு போய் கொடுத்து கொள்கிறேனென்று சொல்லியும்  அவரும் அந்த பணத்தை வாங்காமல் விடவில்லையாம், விசிட்டில் துபாயிக்கு வேலை தேடிப்போகும் மக்களுக்கு இங்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லியாக வேண்டும், 

 வேலைத் தேடி செல்லுமுன்  நீங்கள் செய்ய வேண்டியவை
  •  நீங்கள் என்ன வேலைக்காக செல்லுகிறீர்கள் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். [ஏனென்றால் நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன், என்ன வேளை தேடி வந்திருக்கிறாய் என்று கேட்டால், ஏதாவது ஒரு வேலை என்பார்கள், அந்தளவுக்கு  அவர்களின் சுய முன்னேற்றத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.]
  • CV யை தெளிவாகவும் எம்ப்லாயருக்கு புரியும்படி தயார் செய்ய வேண்டும்
  • எப்படியெல்லாம் வேலை தேட வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் [உதாரணமாக : By paper , by website, by ஈமெயில்]
    உதாரணமாக ஈமெயில் மூலமோ, வெப்சைட் மூலமோ வேலை தேட விரும்பினால், நீங்கள் முதலில் அங்குள்ள recruitment agency வுடைய ஈமெயில் அனைத்தையும் சேகரிதுகொள்ள வேண்டும், பிறகு அங்குள்ள அணைத்து job searching வெப்சைட் அனைத்தையும் அங்கு போகும் முன்பே சேகரித்தால் நல்லது. இல்லையெனில் அங்கு ஒவ்வொருவருடைய கையையும் எதிர் பார்க்க வேண்டி வரும், குறிப்பாக அங்குள்ள மக்கள் ஊரில் பார்த்து என்ன மச்சான் என்று சொன்னவர்கள் அங்கு சென்றவுடன் எதோ தெரியாதவர்கள் போல் செல்வார்கள்.
    இதை ஏன் இங்கு சொல்லுகிறேனென்றால் அங்கு இறைவனுடைய உதவியும், அவனுடைய மாமுடைய உதவியும் இல்லையெனில், அவனுடைய நிலைமை வேறுமாதிரி போயிருக்கும்.
  • நாம் அங்கு சென்றால் யாரையும், எந்த ஒரு காரணத்திற்காகவும் எதிர் பார்க்ககூடாது என , செல்லுமுன் நீங்களே உங்களுக்குள் உறுதி எடுத்து கொள்ளுங்கள் .
கடைசியாக எந்த சோகத்தோடு சென்றானோ அதை விட அதிக சோகத்தோடு , 60   ஆயிரம் ரூபாயை இழந்தவனாக 2006 பிப்ரவரி மாதம் 17 ஆம்  தேதி காலை சென்னை வந்து சேர்ந்தான்  .
குறிப்பு : இன்னும் நிறைய எழுதலாம், அடக்கம் கருதி முடித்து விட்டேன், அப்புறம் இந்த கட்டுரையில் வரும் அந்த இருவரும்(அவன் , நான்) ஒருவரே, அவன்தாங்க  இந்த கட்டுரையை எழுதியது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "துபாயில் அவன்"

ஹுஸைனம்மா said...

தேதிகளைக் கூட மறக்காம எழுதிருக்கதிலிருந்து, நாலு வருஷம் முன்னாடி நடந்த இந்த துயரச் சம்பவம், உங்களை எந்தளவு பாதிச்சிருக்குன்னு தெரியுது!! ;-)))

அன்புத்தோழன் said...

So sad.. But i guess those hard times had shaped you really well now..

Some nice tips for the upcoming expts need to be appreciated..

Let all our future be the brightest af all times insha Allah....

Abu Khadijah said...

வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா, ஆமாம் மனதை பாதித்திருந்தாலும் அங்கு கிடைத்த அனுபவம் தான் இன்றைக்கு இறைவனின் உதவியால் என்னை உயர்த்திருக்கிறது. (அல்ஹம்துலில்லாஹ்)எல்லா புகழும் இறைவனுக்கே

Abu Khadijah said...

Thanks அன்புத்தோழன் for your visit,
Yes, with the help of God, that experience and other had shaped me well,Alhamdulillah.

SUFFIX said...

கூடுதல் தகவல் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும், மற்றவர்களை முழுவதுமாக நம்புவது எவ்வளவு தவறு என்பதையும் உணர்த்தியது தங்களுடைய இந்த இடுகை. பாடம் புகட்டும் அறிவுரை மன்சூர்.

அப்துல்மாலிக் said...

தெளிவான கட்டுரை

நல்ல வேலைகிடைக்காமல் போனது வருத்தமே, இருந்தாலும் இன்னொரு விசிட் முயற்சி செய்திருக்கலாம். இங்கு வருபவர்களுக்கு மூன்று முக்கியம்
1. லக்
2. எக்ஸ்பீரியன்ஸ்
3. நேரம்/காலம்

இன்னும் நிறைய எழுதிருக்கலாம்

Abu Khadijah said...

நன்றி சகோதரரே, நான் போய் சேகரிப்பதற்கு மட்டுமே 15-20 நாட்கள் எடுத்து கொண்டு தேடுவதற்குள் போதும் போதும்னு போச்சு.


//மற்றவர்களை முழுவதுமாக நம்புவது எவ்வளவு தவறு என்பதையும் உணர்த்தியது//
இதற்கு ஒரு பெரிய கதையே இருக்கு, எது எப்படி இருந்தாலும், அனைத்தும் அனுபவம்தானே

Abu Khadijah said...

உங்களின் கேள்வி சரித்தான் அபுஅஃப்ஸர் ஆனாலும் 60 ஆயிரம் இழந்த எனக்கு இனிமேலும் போகனுமா என்றுத்தான் தோன்றியது, அப்புறம் இந்தியாவுக்கு வந்து துபாயைவிட சற்று அதிகமான வருமாணம் ஈட்ட முடிந்தது வேறு விஷயம். நீங்கள் சொன்ன மூன்றில் 2 வது மட்டும்தான் என்னிடம் இருந்தது

நட்புடன் ஜமால் said...

அங்கு கிடைத்திருந்தால் இருப்பதை விட

நல்ல நிலையே கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனாலும் நல்லா சொல்லியிருக்கீங்க அனுபவத்திலிருந்து ....

Jaleela Kamal said...

சரியான தகவல், நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே
ஆமாம் இங்கு நேராக வந்ததும் வேலைய ரெடியா வைத்து இருப்பது போல, வந்து கிடைக்காமல், வாத்தியார் வேலை பார்த்தவர், கார்ட்டன் தூக்கும் வேலைக்கும், எம் பி ஏ படித்தவர் டாயிலட் கழுவவும், சம்பந்தமே இல்லாமல் அரபி வீட்டில் சோறாக்கியவர்கள் சேல்ஸ்மேன் வேலையில் இருக்கிறார்கள்.
நல்ல படித்தவர்கள் கூட ஏதாவது ஒரு வேலை துபாயில் கிடைத்தா போதும் என்று தான் வருகீறார்கள்

Abu Khadijah said...

வாங்க ஜமால் காக்கா, ரொம்ப நாளாக ஆளயே காணோம், தற்போது ஜித்தாவிலே வசிக்கிறேன், அல்ஹம்துலில்லாஹ், இறைவனின் உதவியால், இப்பொழுது நான் நல்ல நிலையில்தான் இருக்கிறேன்.

Abu Khadijah said...

வாங்க, ஜலீலா அக்கா, நீங்கள் சொல்லுவது ரொம்ப சரி, இது போன்ற நிறைய நபர்களை நானும் பார்த்ததுண்டு, இனிவரும் இளைஞர் சமுதாயம் சுதாரித்து கொண்டால் சரி.

அதிரை அபூபக்கர் said...

நாம் அங்கு சென்றால் யாரையும், எந்த ஒரு காரணத்திற்காகவும் எதிர் பார்க்ககூடாது என , செல்லுமுன் நீங்களே உங்களுக்குள் உறுதி எடுத்து கொள்ளுங்கள் .//

உண்மையான விசயம்.. துபாயில் வேலை தேட வருபவர்களுக்கு பயனுள்ள உங்கள் அனுபவம்..

Abu Khadijah said...

நன்றி அபூ தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்களுக்கும் இது போன்று அனுபவம் இருக்கும்மென நினைக்கிறேன்

mkr said...

வேலை தேடி வருவதற்கு முன்பு நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று தங்கள் கூறுவது முற்றிலும் சரியே.ஆனால் சி(ப)லருக்கு நல்ல நண்பர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.அதனால் எல்லாருக்கும் உதவி செய்ய ஆள் இல்லாத நிலை இங்கு இல்லை.சவூதியில் நிங்கள் வேலை பார்க்க வேண்டிதான் இறைவன் நாட்டப்படி உங்களுக்கு வேலை கிடைக்க வில்லை போலிருக்கு (just fun)

Abu Khadijah said...

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி mkr அவர்களே. நன்பர்களைப் பற்றி உங்களின் கூற்று சரியே, அவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை, ஏனெனில் அங்குள்ள சூழ்நிலை அப்படித்தான் என்று அனைவரும் அறிந்ததே, பதிவின் நோக்கம் என்னவெனில் துபாய்க்கு சென்றால் முடிந்தவரை யாரையும் சாராமல் இருக்க சொல்வது தான்.

//சவூதியில் நிங்கள் வேலை பார்க்க வேண்டிதான் இறைவன் நாட்டப்படி உங்களுக்கு வேலை கிடைக்க வில்லை போலிருக்கு (just fun)//

ஒரு வேளை அப்படி கூட இருக்கலாமோ

ஜீவன்பென்னி said...

40பது வயதில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு ஊருக்குச்சென்று மீண்டும் வந்து மூன்று மாதம் முடிந்து வேலை கிடைக்காமல் என் உறவினர் ஒருவர் இன்று மறுபடியும் ஊருக்குச்செல்கின்றார்.

லக் மற்றும் சிபாரிசு இல்லாமல் துபையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. இங்க நிறைய பேருக்கு இந்த அனுபவம் உண்டு, கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் வேலைக்கிடைக்காமல் விசிட் விசாவிலேயே(துபைக்கும் ஈரானுக்கு விசிட் அடிச்சுக்கிட்டே) இங்கே இருந்தவர்களை நான் பார்த்திருக்கின்றேன்.உங்கள் அனுபவம் இனி வருபவர்களுக்கு உதவியாக இருக்கட்டும்.

Abu Khadijah said...

//லக் மற்றும் சிபாரிசு இல்லாமல் துபையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை.//
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உன்மை சகோ, நானும் அதுப்போன்று ஈரானுக்கு விசிட் அடிக்கலாமென்றுத்தான் பார்தேன், பிறகு செலவு, சிரமம்,பட்ட மன உலைச்சல் இவையெல்லாம் யோசித்து விட்டு அங்கிருந்து கிளம்பியாச்சு...

mkr said...

ஆரம்ப கால கட்டங்களில் வேலை கிடைப்பதற்கு சிபாரிசு தேவைப்படலாம்.ஆனால் போதுமான அனுபவம் கிடைத்த பிறகும் சிலருக்கு(என்னை சேர்த்து தான்) நல்ல வேலை கிடைப்பதில்லை.அனுபவம் கிடைக்கும் பொழுதே வேலைக்கு ஏற்ற கூடுதல் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்

Abu Khadijah said...

வருகைக்கு நன்றி சகோதரா,

//அனுபவம் கிடைக்கும் பொழுதே வேலைக்கு ஏற்ற கூடுதல் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்//
சரியா சொன்னீங்க, எப்பொழுது கற்பதை நிறுத்தி விட்டமோ, அப்பொழுதே நாம் கீழ் நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம்.

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?