Tuesday, February 16, 2010

தற்காப்பு

தலைப்பு கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் உள்ளடக்கம் எப்படின்னு நீங்க கருத்து சொன்னதான் தெரியும், தற்காப்பை பற்றி எழுதும்போது சிலருக்கு கராத்தே, குங்-பு மற்றும் இதர கலைகள் தான் நினைவுக்கு வரும், ஆனால் இங்கு எழுத போவது அதைப்பற்றி அல்ல,

வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க, இறைவனின் உதவியால் நீங்கள் வைத்திருக்கும் பொருள் மற்றும் உங்களை சுற்றி உள்ள பொருளை  வைத்தே, உங்களை நீங்கள் காப்பற்றி கொள்ளலாம்,
அது என்ன பொருள்,
  • பேனா
  • சாவி
  • பல்குத்தும் குச்சி
  • மண்
  • மிளகாய்த்தூள்
  • ஜவ்வரிசி 
இதைபோல் ஏராளமான பொருட்கள் இருந்தாலும் இங்கு சிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்,
சரி மேலே குறிப்பிட்டுள்ள பொருளை எப்படி கையாளுவது என கேள்வி எழுகிறதா, முதலில்

பேனா


பேனாவை படத்தில் சொல்லப்பட்டவாறு பிடித்து கொண்டு , உங்களை தாக்க வரும்போது , ஒருகையை உங்களுடைய சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு ,இன்னொரு கையால் எதிராளியை தாக்க வேண்டும்.

சாவி
சாவியை படத்தில் சொன்னவாறும் பிடிக்கலாம் அல்லது உங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் வைத்துகொண்டு கையாளலாம்.


பல்குத்தும் குச்சி

இவை பெரும்பாலனரிடம் (குறிப்பாக பெண்களிடம்)  இருக்கும் , இது ஒரு அருமையான ஆயுதமென்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் இதை வெளியில் கொண்டு செல்வது எளிது, இவையை ஒன்றாகவும் பயன்படுத்தலாம், நிறையவும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இது பெரும்பாலான  ஆண்களிடம் இருக்காது, தேவைபட்டால் எடுத்தும் செல்லலாம்
மண்

இதைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லித்தர தேவை இல்லை, இருந்தாலும் நான் எப்படி கையாண்டேன் என்பதை உங்களுக்கு சொல்லித்தருகிறேன், யாரேனும் உங்களை நோக்கி வரும்போது, மண்ணிருக்கும் இடத்தை நோக்கி அவன் யுகிப்பதற்குள் சென்று கையில் மண்ணை எடுத்து தூவலாம், காலால் மண்ணை கண்ணை நோக்கி எத்துவது நல்லது. இவை இரண்டில் நான் காலைத்தான் உபயோகித்தேன்.
மிளகாய்த்தூள்
இது முக்கியமாக பெண்களுக்கு உதவும், இதை படிக்கும்போது கொஞ்சம் (ச்சில்லி)த்தனமாதான் இருக்கும், ஆனால் இது உதவுவது போல் எதுவும் உதவாது,  சரி எப்படி உபயோகிக்கலாம்? இதை வெறும் தூளாக கொண்டு சென்று தூவ முடியாது, ஆதலால் உங்களுகெல்லாம் தெரியும் விளையாட்டு தண்ணி துப்பாக்கி(Toys Water Gun), அதில் மிளகாய்த்தூள் கரைத்த தண்ணீரை நிரப்பி ஹான்ட் பாக்கில் வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும்போது சும்மா கண்ணுன்னு  அடிக்கலாம்
ஜவ்வரிசி

பெயரைக்கேட்டாலே ஜவ்வுனு ஓட்டுற மாதிரி இல்லே, இதை பொது இடங்களில் உபயோகிக்க முடியாவிட்டாலும், இதன் பலன் தெரிந்தவர்கள், கண்டிப்பாக இதை நாடாமல் இருக்க மாட்டார்கள், இது உங்களுடைய வீட்டின் முன் யாரேனும் தொல்லை கொடுத்தால் பயன்படுத்தலாம், எப்படி அது?

ஜவ்வரிசியை அரை வேக்காடாக வேக வைத்து கொள்ள வேண்டும், எப்போதும் சூடு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டு , யாரேனும் வீட்டிற்கு முன்  ரொம்ப தொல்லை கொடுத்தால் அதை அகப்பையில் எடுத்து எறிந்தால் போதும் அவ்வளவுத்தான் ஜவ்வுனு ஒட்டிக்கொண்டு எடுக்கும்போது தோளோடுதான்  வரும்.

மேலே இவை அனைத்தையும் இக்கட்டுரையின் மூலம் சொன்னதின் நோக்கம், இப்படியும் தற்காத்து கொள்ளலாம்  என்பதற்காக  தான். இதை விட உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், அப்படியானால் எனக்கும் சொல்லித்தாங்களேன்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "தற்காப்பு"

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கே இது. ஜவ்வரிசியும் ஆயுதம்கிறது புதுசு. விளையாட்டுத் துப்பாக்கியில சில்லிப் பவுடர்கூட புதுசுதான்; நான்கூட கையில எடுத்து எறிஞ்சா நம்ம கை எரியுமேன்னு நினச்சுகிட்டிருந்தேன்!!

அப்புறம் தண்ணியும், மிளகாய்ப்பொடியும் என்ன அளவுல சேர்க்கணும்? மிளகாப்பொடி எது போடணும், சாதாவா இல்ல காஷ்மீரியா? :-))))

அது “புள்ளும் ஆயுதம்னு” இல்லை, “புல்லும் ஆயுதம்”. மாத்திருங்க.

SUFFIX said...

நல்ல தகவல்கள்ப்பா, அடுப்படி ஐட்டங்களையும் ஆயுதமா மாத்திப்புட்டியிளாக்கும்.

SUFFIX said...

//அப்புறம் தண்ணியும், மிளகாய்ப்பொடியும் என்ன அளவுல சேர்க்கணும்? மிளகாப்பொடி எது போடணும், சாதாவா இல்ல காஷ்மீரியா? :-))))//

ஜவ்வரசி வேகவைக்கும்போது எத்தனை ஸ்பூன் சக்கரை போடணும்னு கேட்கலையா?

Abu Khadijah said...

/அப்புறம் தண்ணியும், மிளகாய்ப்பொடியும் என்ன அளவுல சேர்க்கணும்? மிளகாப்பொடி எது போடணும், சாதாவா இல்ல காஷ்மீரியா? :-))))//

வருகைக்கு நன்றியம்ம, விளையாட்டு துப்பாக்கியில் அடைக்காதவாறு கலந்தால் நல்லது.

//மிளகாப்பொடி எது போடணும், சாதாவா இல்ல காஷ்மீரியா? :-))))//
என்னது சாதாவா இல்ல காஷ்மீரியா? உங்க ஊரிலே அரைத்த பொடியே ரொம்ப நல்லா இருக்கும்

//SUFFIX said...

//அப்புறம் தண்ணியும், மிளகாய்ப்பொடியும் என்ன அளவுல சேர்க்கணும்? மிளகாப்பொடி எது போடணும், சாதாவா இல்ல காஷ்மீரியா? :-))))//

ஜவ்வரசி வேகவைக்கும்போது எத்தனை ஸ்பூன் சக்கரை போடணும்னு கேட்கலையா?//

கேட்டாலும் கேட்டுடப்போறாங்க :)

Abu Khadijah said...

//நல்ல தகவல்கள்ப்பா, அடுப்படி ஐட்டங்களையும் ஆயுதமா மாத்திப்புட்டியிளாக்கும்.//
வருகைக்கு நன்றி சகோதரர் ஷஃபி அவர்களே.
ஆமா, இந்த யோசனை நான் தலை வெட்டும் பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பூங்காவினுல் இருக்கும்போது வந்தது.

malar said...

நல்ல தகவல்...

Abu Khadijah said...

நன்றி மலர், தங்களின் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள்

enrenrum16 said...

நல்ல உபயோகமான தகவல்கள்.

/ இவை இரண்டில் நான் காலைத்தான் உபயோகித்தேன்/. அந்த நிகழ்வையும் ஒரு பதிவில் போடுங்கள்.(ஏதோ நம்மாலானது.;))

Enrenrum16

Abu Khadijah said...

நன்றி enrum16 உங்கள் முதல் வருகைக்கு, அந்த நிகழ்வை ஏன் கேட்குறிங்க அது ஒரு ஒரு பெரிய கதை.

காலால் எத்துவது ஏன் நல்லதென்றால், நீங்கள் மண்ணை எடுக்க கீழே குனிவதற்குள், எதிராளி உங்களை தாக்க வாய்ப்புள்ளது. எது எப்படியோ சூழ் நிலையை பொறுத்து நடந்துக் கொண்டால் நலம்.

அன்புடன் மலிக்கா said...

ஆகா தகவல் சூப்பர். அப்போ தாக்கிட தயாரகிவிட வேண்டியதுதான்
அதிரையல்லவா? அதான் தகவல் சூப்பர்

Abu Khadijah said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புடன் மல்லிகா, ஆஹா உங்களுக்கும் அதிரையைப்பற்றி தெரியுமா?

//தாக்கிட தயாரகிவிட வேண்டியதுதான்//

சொல்லுறதப்பார்த்தா இப்பொவே தயாராகிட்ட மாதிரி தெரியுது.

அன்புடன் அருணா said...

அட! ஜவ்வரிசி புதுசு!

Abu Khadijah said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புடன் அருணா, ஆமாங்க இத சமயம் பார்த்து உபயோகித்து பாருங்களேன், அதன் பலன் தெரியும், பாக்கி இருந்தால் கொஞ்சம் சர்க்கரைப் போட்டு நீங்களே சாப்பிட்டுடுங்க.

அன்புடன் மலிக்கா said...

//ஆஹா உங்களுக்கும் அதிரையைப்பற்றி தெரியுமா?//

நாங்களே அதிரை தானுங்களே!

எங்க பக்கமும் வந்துபோங்க..

Abu Khadijah said...

உங்கள் தளத்திற்கு பலதடவை வந்தும் தாங்களும் அதிரையைச் சார்ந்தவர்கள் என்று தெரியாது. நன்றி சகோதரி

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?