தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் இந்த தருணத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நம் பட்டுக்கோட்டை தொகுதி முக்கிய வேட்பாளர்களை நேர்காணல் எடுத்து வெளியிட்டால் இணையத்தின் ஊடாக பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு யார் தகுதியானவர் என்பதை அறிவதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம். முதன் முதலில் பட்டுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை அதிரைநிருபர் சார்பாக அலைபேசி வாயிலாக நேற்று இரவு சில கேள்விகள் வைத்து பதிலைப் பெற்றோம். இதோ உங்களின் பார்வைக்கும் ஓட்டு அளிக்கும் உரிமை முடிவுக்கும் !
அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்திற்கு எப்படி நீங்கள் அறிமுகமானீர்கள் ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நான் ஏற்கனவே 2006ல் வேட்பாளராக இருந்திருக்கிறேன், வியாபர ரீதியாக பழக்கமிருக்கு, அரசியல் ரீதியாகச் சொல்லனும்னு சென்ற முறை தேர்தலில் நின்ற வேட்பாளர் என்றுதான் அறிமுகமானேன்.
அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்திற்கு எவ்வகையான நலத்திட்டங்கள் அல்லது நன்மைகள் செய்வதாக வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கிறீர்கள்? விரிவாகச் சொன்னால் நல்லதாக இருக்கும் !
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : ஊரிலிருப்பவர்களிடம் எங்களது அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகளிடமும் கேட்டிருக்கோம், பள்ளிவாசல் விபரம் எங்களது பொருப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள் அது சம்பந்தமாக வேலைகள் பார்த்துக் கொடுத்திருக்கிறார்கள். நலத்திட்டங்கள்னு லிஸ்ட்டு போட்டு கேட்கிறீங்களா ? இல்லை இல்லை இதுவரை நான் அவைகளுக்குப் போகவில்லை இன்னும் அதிராம்பட்டினத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகவில்லை, சிலதின்ங்களுக்கு முன்பு மேடம் (விஜயகாந்த் மனைவி) வந்தப்போ பஸ்டாண்டுப் பிரச்சாரத்திற்கு சென்றேன் அவர்களோடு அங்கே நிறைய மக்கள் வந்திருந்தாங்க. என்ன என்ன நலத்திட்டங்கள் வேண்டும் என்று லிஸ்ட்டு எங்களது நிர்வாகிகளிடம் அதிராம்பட்டினத்து மக்களின் தேவைகளை கேட்டு வாங்கச் சொல்லியிருக்கேன்.
ஒன்பாதம் தேதிதான் அதிரையில் ப்ரோகிராம் அங்கே, நாங்கள் அப்போதுதான் அது சம்பந்தமாக கலந்து பேசிகிட்டு பேசுவேன்.
அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து பெரும்பாலான மக்களின் அவசிய கோரிக்கைகள் உங்களுக்குத் தெரியுமா ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : மக்களின் கோறிக்கையை இனிதான் கேட்டிருக்கேன், அவர்களும் தாயார் செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
அதிரைநிருபர்: கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை அதிராம்பட்டினம் வந்திருக்கிறீர்கள் ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நான் அடிக்கடி வருவேன், பிஸினஸ் நிறைய இருக்கு இங்கே.
அதிரைநிருபர்: எங்களூர் பேருந்து நிலையம் ஏன் இதுவரை புதிதாக்கப்படவில்லை ? யாரும் உங்களிடம் இதைப்பற்றி கேட்கவில்லையா ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அது பற்றியும்தான் என்னிடம் பேசியிருக்காங்க பேருந்து நிலையம் கட்டுவது விஷயமாக, தாமதம் ஏன்னு இதுவரை தெரியாதுங்க ! பிரச்சாரத்திற்கு இன்னும் அந்தப் பக்கம் போகவில்லை அதன் விபரங்களை கேட்டிருக்கேன்.
அதிரைநிருபர்: நீங்கள் வெற்றி பெற்றால் அதிராம்பட்டினத்திற்கு அடுத்து எப்போது வருவீர்கள் ? எந்த காரணத்திற்காக ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : முதலில் நன்றி சொல்ல வரனும், வேற மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வளவு விரைவில் செய்து கொடுக்க முடியுமோ அதனைச் செய்து கொடுக்கவும் அடிக்கடி வரவேன்.
அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து மக்கள் யாரேனும் உங்களிடம் எங்கள் ஊருக்கு அகல இரயில் பாதை என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்களா?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நாங்களும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அதிரைநிருபர்: தற்போதிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கராஜன் (எம்.எல்.ஏ) அதிராம்பட்டினத்திற்கு என்ன என்ன செய்யவில்லைன்னு உங்களால் சொல்ல முடியுமா ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அதாவது என்கிட்டே மக்கள் கேட்டது அவர் செய்றாரோ செய்யவில்லையோ, ஒரு நல்லது கெட்டது சொன்னாக் கூட வந்து பார்த்துட்டு போகட்டும்னு கூட வர மாட்டேங்கிறார் !!! கல்யாணம் காட்சிகள் வைத்து விருந்துக்கு வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் சொன்னாக் கூட வரமாட்டேங்கிறார்னு சொன்னாங்க... !!! மக்களுக்கு செய்திருப்பாங்க அதுக்காக ஒன்னுமே செய்யவில்லைன்னு சொல்லிட முடியாது
அதிரைநிருபர்: உங்க் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படியிருக்கிறது?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : நல்ல பிரமாதமாக இருக்கிறது (கிளைக் கேள்வி : அதிராம்பட்டினத்திலிருக்கும் கூட்டனிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது ?) வெற்றி பெறுவதற்கு கூட்டனியில் செயல்படுறாங்க.
அதிரைநிருபர்: முக்கியமானதும் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பள்ளிவாசல் பிரச்சினைகள் பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : அது ஏதோ தி.மு.க. வினர்தான் பிரச்சினை செய்வதாக சொல்லிகிட்டு இருக்காங்க !! (கிளைக் கேள்வி : என்ன மாதிரியான பிரச்சினை அதனை எப்படித் தீர்ப்பீர்கள் என்று சொல்ல முடியுமா ?) தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதனால் பிரச்சினைகள் செய்திகிட்டு இருக்காங்க அதுக்கு நாங்கள் எப்படித் தீர்த்து வைக்கனுமோ அப்படி தீர்த்து வைப்போம், விபரங்கள் கேட்டிருக்கேன் ஒன்பதாம் தேதிக்குள் அதெல்லாம் கரெக்டாக சொல்லுகிறேன், முக்கியமாக பகுதி ரீதியான அறிக்கையில் அதனை சேர்த்துக் கொள்வோம், அதிராம்பட்டினத்திற்கு இது, பட்டுக்கோட்டைக்கு இது, மதுக்கூருக்கு இதுன்னு அதெல்லாம் சேர்த்துக்கொள்கிறோம். அவர்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்ந்து சேர்த்துச் செய்வோம் நாங்கள்.
அதிரைநிருபர்: பட்டுக்கோட்டைத் தொகுதியில் பொதுவாக எந்த விஷயத்தை முக்கியமாக முன் வைத்து ஓட்டுக் கேட்கிறீங்க ?
தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் : பட்டுக்கோட்டை தொகுதின்னு இங்கேயும் திரு. ரங்கராஜன் அவர்கள் இங்கேயும் தொகுதிப் பக்கம் வரவில்லை, நல்லத் திட்டங்கள் ஏதும் செயல்படுத்த மாட்டேங்கிறார். சரியாக அவர்கிட்டே நெருங்கி பேச முடியலை அவரைப் பார்ப்பது சாதாரன விஷமாக, ஓட்டுப் போடும்போது பார்த்தது அவரை அதற்கு பின்னர் பார்க்க முடியவில்லை.
அவரை நெருங்கிப் பார்த்தால்தானே மக்களின் நிறைகுறைகளை சொல்ல முடியும், அதனையும் தவிர்க்கிறார், வீட்டில் இருந்து கொண்டு பார்க்க மாட்டேங்கிறார். இதுமாதிரியெல்லாம் இல்லாம என்னைய எப்போதும் சாதாரனமாக வந்து என்னைப் பார்க்கலாம் பழகலாம். என்னை எந்நேரமும் கூப்பிடலாம். (கிளைக் கேள்வி : உங்களின் சார்பாக என்ன செய்வேன் என்று சொல்லி ஓட்டுக் கேட்பீங்க ?) தொகுதி சார்பாக அறிக்கை தயாரித்து வருகிறோம் அதனைக் கொண்டு செயல்படுவோம், நான் வெற்றி பெற்றால் செய்வேன் என்று சொல்லுவோம்.
இப்பேட்டியை எழுத்து வடிவில்தான் பதிவோம் என்றும் சொல்லிட்டோம். நம் தொகுதிக்கு நல்ல தகுதியானவரை தேர்தேடுத்தாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்துள்ளோம்.
அன்பார்ந்த அதிரை மக்களே இதோ உங்கள் பார்வைக்கு வைத்துவிட்டோம். மற்ற வேட்பாளர்களுடன் இந்த வேட்பாளருடன் தரம் பார்த்து இனி நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள் யாருக்கு ஒட்டளிப்பது என்று.
வேட்பாளருக்கும், ஓட்டுப்போடப்போகும் மக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
-- அதிரைநிருபர் குழு
0 comments: on "பட்டுக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார் பேட்டி"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?