Tuesday, October 19, 2010

Opening in cognizant

read more...

Sunday, October 3, 2010

வித்தியாசமானவர்கள்ஆனந்த
விகடனில் முன்பு வரும் கார்டூனிஸ்ட் மதனின் " முன் ஜாக்கிரதை முத்தண்ணா" வை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஆட்கள் இருப்பார்களா என யோசித்தது உண்டு. ஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கையில் சிலரை பார்க்கும்போது "எப்படியெல்லாம் யோசிக்கிரானுக" என நோஸ் மீது [F] பிங்கர் வைத்ததுண்டு.
பல வருடங்களுக்கு முன் என்னுடன் வேலை பார்த்துவந்த ஒருவர் பேட்டரி வாங்கி டேப்ரிக்கார்டருக்கு போடுமுன் அதில் அன்றைய தேதியை மார்க்கர் பேனாவில் குறித்துவிடுவார். இத்தனைக்கும் இந்த ஊரில் கரண்ட் போவது கிடையாது என சொல்லலாம். அப்படி அந்த பேட்டரி இவர்நினைத்த தவணைக்குமுன் 'பல்பிஸ்' ஆகிவிட்டால் யூனியன் கார்பாய்டு நிறுவனத்தின் மீது ஒரு கேஸ் போடலாம் [ எப்படியும் 30 வருடத்துக்குள் பதில் கிடைக்கும் ] , அவரின் மற்ற திருவிளையாடல்களில் ஒன்று கோல்கேட் பேஸ்ட் வாங்கினால் அதன் பேக்கிங்கை வீசி விடாமல் கடைசி 'பிதுக்கள்' வரை வைத்திருப்பார். [ உபயோகிக்க ஆரம்பித்த தேதி நிச்சயம் உண்டு ]
அவர் வாங்கிய அந்த டேப்ரிக்கார்டர் .சி ரூமில் இருந்தாலும் குரங்குக்கு சட்டை போட்டமாதிரி ஒரு துணியில் கவர் செய்து போட்டிருப்பார், கேட்டால் 'பொருள்களை என்னை மாதிரி பாதுகாக்க யாரும் கிடையாது' என சொந்த புராணம் வேறு.
ஒருவர் வெள்ளிக்கிழமையில் காசு [பிச்சை] கேட்டு வருவார், 10 காசுக்கு மேல் ஒரு காசு கொடுத்தாலும் நமது பூர்வீகம், மற்றும் மொகளாயர் காலத்தில் உள்ள நம் முன்னோர் முதற்கொண்டு ---------------போட்டு எழுதும் அளவுக்கு திட்டுவார்.
பிறிதொருவர் ஆபிஸில் உள்ள ரூலர்[ஸ்கேல்], பேனா எல்லாவற்றிலும் அவரது பெயரை மறவாமல் எழுதி வைத்து விடுவார். இந்த புத்தி மனோராவில் ஆரம்பித்து இருக்கலாம். சிலர் தன்னுடைய "ட்ரீம் கேர்ல்' பெயரை தன் பெயருடன் இனைத்து எழுதிவைப்பார்கள் [ என்னா ஒரு திருப்தி இவனுகளுக்கு] ...காலம் உருண்டு , தாண்டி, குதித்து ஒடி விட்டாலும் அந்த ட்ரீம் கேர்ல் எல்லாம் இப்போது "ட்ரம் கேர்ல்" மாதிரி பெருத்தது தெரியாமல் பழைய நினைவில் இவர்கள் க்ளோரா[F]பார்ம் கொடுத்த ஆடுமாதிரி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

இதில் வெளிநாடு பயணங்கள் ஆரம்பித்த காலம்பாஸ்போர்ட் பத்திரம்” என யாரோ காதில் ஊதியிருக்கவேண்டும் ஏர்போர்ட்டுக்கு போகும்போது அல்லது வெளிநாட்டிலிந்து வரும் போது பாஸ்போர்ட் இருந்த சின்ன பேக் ஜிப்பை திறந்து மூடியதில் கின்னஸ் சாதனை செய்துவிட்டார். பாஸ்போர்ட் சின்னதாக வெளியிட்டும் இவர்கள் இந்த பேக்கை விடுவதாக இல்லை. இவர்களிடம் வீட்டை அல்லது ரூமை பூட்டிவிட்டு வா என மறந்தும் சொல்ல கூடாது பூட்டிய பூட்டையே நம்பாததால் இவர்கள் பூட்டை பிடித்து தொங்கியே இவர்கள் பூட்டை ஒரு இன்ச் வளர்த்துவிடுவார்கள்.
முதன் முதலில் [பாலி ஐலேன்டில்-Indonesia] வாட்டர் ஹீட்டரில் டெம்பரேச்சரை எப்படி கையாள்வது என தெரியாமல் 'சூப்பில் போட்ட இறைச்சி' மாதிரி ஆன ஒருவரை எனக்கு வெகு நாட்களாக தெரியும். எங்கள் குரூப் டின்னரில் [ 5 ஸ்டார் ஹோட்டலில்] கை கழுவ வைத்திருந்த பாதி எழுமிச்சை போட்டிருந்த சுடு தண்ணியை குடித்து விட்டு "ஏன் அண்னே ஜூஸ் எல்லாம் இங்கே சூடா வச்சிருக்கானுங்க" என அவன் அப்ரானியாக கேட்டது இன்னும் சிரிப்புதான்.
சிலர் பொருள்களை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று கால்குலேட்டர், [F]பேன் இவைகளுடைய பாலிதீன் பேக்கிங்கை பிரிக்காமல் வைத்து இருப்பார்கள்.ஆனால் பாலிதீன் பேக்கை நீக்கினால் எழிதாக உபயோகப்படுத்த முடியும் என்பதை மறந்து விட்டு பல வருடங்கள் கஷ்டப்பட்டு பயன்படுத்துவார்கள். இதுவெல்லாம் குமுதத்தில் 38 ம் பக்க மூலை என்று ஒரு பகுதி வரும் இதைப்படித்தவர்களாக இருக்க வேண்டும். இது போன்ற சின்ன சின்ன கஞ்சத்தனமான ஐடியா உங்களை தொடர்ந்து ஏழையாக்கும் முயற்சி.
முன்பு ஊரில் செடியன்குளத்தில் குளிக்கும் காலம் , சட்டை துணி [ பாலிஸ்டர் ] மிஞ்சி விட்டது என அதை ஜட்டியாக தைத்து அதையும் வேலெ மெனக்கட்டு துவைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். [ எப்படிதான் பாலிஸ்டரில் ஜட்டி தைத்து உடுத்துகிறார்களோ]

நாம் மற்றவர்களை பார்த்து சிரித்தாலும் [சினிமாவில்] ஒரு ரயில்வே ஸ்டேசனில் காணாமல் போகும் பையன் 30 வருடம் கழித்து ஒரு பாட்டு பாடிதான் அவன் குடும்பத்துடன் சேர முடியும் எனும் மடத்தனமான க்லைமாக்சையும் கண்ணீர்விட்டு மூக்கு சிந்தி ரசித்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.

--ZAKIR HUSSAIN

read more...