Showing posts with label Interesting Articles in Tamil. Show all posts
Showing posts with label Interesting Articles in Tamil. Show all posts

Saturday, March 20, 2010

படித்தேன் பகிர்ந்தேன்

தவறாகப்புரிந்து கொள்ளுதல் ஒரு விளக்கம்
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"
வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"
தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
read more...

Sunday, February 21, 2010

துபாயில் அவன்

துபாயில் அவன்  என்றவுடன் யாரும், ஏதோ எம்.ஜி.ஆர் படம் என்று என்னிட வேண்டாம், இது ஒரு உண்மையான(கசப்பான) சம்பவம், ஆமாங்க , மூன்று வருடத்திற்கு முன் ஒரு இளைஞன் துபாயுக்கு பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் சென்ற அவனுடைய பயணம் வெறும் கனவாகவே போனதைப்பற்றித்தான் இங்கு எழுதுகிறேன்.

ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று சென்னையை சென்றடைந்த அவன் ஒரே சோகமாக காணப்பட்டான், நாம் இந்நாட்டை விட்டு, வீட்டை விட்டு பிரியபோகிறோமே என்று நினைத்தானோ என்று தெரியவில்லை. அன்று மாலை ஏர்போர்ட்டை சென்றடைந்தவுடன் அவன் ஏதோ ஒன்றை பார்த்த படியே நின்றுக் கொண்டிருக்க நானும் அவனுடன் சேர்ந்து பார்த்த பொழுதுதான் என் மனமும் லேசாக கனத்தது, அது என்னவெனில் 21 வயது மதிக்கத்தக்க இன்னொரு பையன் அவனுடைய தாயை விட்டு முதல் தடவை பிரிகிரானோ என்னவோ தெரியவில்லை, தைரியம் சொல்லவேண்டிய தாய் ஏனோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை கண்ட அவனுக்கும் எனக்கும் சற்று மனது கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் சுதாரித்து கொண்ட நான் இதெல்லாம் ஏர்போர்டில் சகஜம்தாண்டா, அதை கவனிக்காமல் நீ தைரியமாக கிளம்பு என்று சொல்லிவிட்டேன், பிறகு அவனும் போய் துபாயில் இறங்கியவுடனே அங்கு அவனுக்கு ஒரே மகிழ்ச்சி அவனுடைய நண்பர்களை பார்த்தவுடன், ஆஹா நமக்கு தெரிந்தவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்களே இனி நமக்கு கவலையே இல்லையென அவன் நினைத்ததுதான் தப்பு.

துபாயுக்கு போகுமுன் இவனுக்கு தங்குமிடம் மற்றும் சுற்று வட்டாரத்தை பற்றி ஒரு சில கற்பனையுடன் சென்று அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது, தாங்கும் அறையைப்பார்த்த இவனுக்கு மனதில் ஒருவகையான நெருடல், ஏனெனில் ஒரு சிறிய அறைக்குள்(20 x 20 )அவனோடு சேர்த்து பத்து பேர், ஒவ்வொரு சைடுலையும் பெர்த் போடப்பட்டு ஒரு பக்கத்துக்கு இரண்டு பேர் விதம் மொத்தம் 8 + கீழே படுப்பவர்கள் இரண்டுபேர் ஆக மொத்தம் 10 பேர், அப்பொழுதான் அவனுக்கு புரிந்தது இதுதான் பேச்சுலர் ரூமோ என்று, சுற்று வட்டாரம் சென்னையில் மன்னடி போன்று இருந்ததாம், 23 வருடங்களாக மூட்டை பூச்சி என்று தெரியாத அவன் அன்றுதான் பார்த்தானாம், அந்த பூச்சி  இரவில் அவனையும் விட்டு வைக்க வில்லையாம் கடித்து கடித்து கலைத்து போய் "பாவம் இவன் எவ்ளோ கடிச்சாலும் வாங்கிடுறான் இவன் நல்லவேன்ன்னு இவன விட்டுட்டு போயுடுச்சாம்", ஒவ்வொரு தடவையும்  அந்த மூட்டையை  பார்க்கும் போது , அவர்கள் masking tape மூலம் ஒட்டி எடுக்கும்போதுதான் நினைத்தேன், இந்த டேப் ஒரு வேலை இதுக்காகத்தான்  தயாரித்து இருப்பார்களோ என்ற எண்ணம் வந்ததாம் .

சரி வந்தது வந்தாச்சு இனிமேல் யோசித்து எந்த பயனுமில்லை என்று வேலை தேடும் படலத்தில் இறங்கிய இவனுக்கு முதல் 15 நாளாகியும் வேலையொன்றும் கிடைக்கவில்லையாம், அவன் போய் இருப்பதோ விசிட் விசா இன்னுமிருப்பதோ  கொஞ்ச நாள்தான் நாம் என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது, சரி கிடைத்ததில் முதலில் இருந்துக்கொண்டு வேறு நல்ல வேலையை தேடி கொள்ளலாமென்று நினைத்தான்  அப்பொழுதுதான்  அவனுக்கு இன்னொரு வேலையும் கிடைத்தது, அது கொஞ்சம் சம்பளம் அதிகம், வேலையும் அதிகம் அதோடு டார்ச்சரும்  அதிகம். வேறென்ன செய்வது இதுதான் நமக்கு விதியென்று அதிலேயே சிலகாலம் தொடர்ந்த அவனுக்கு நாளுக்கு நாள் டார்ச்சரும் அதிகமாகி கொண்டே போனது அப்படி அங்கு சகித்து கொண்டு இருந்திதுருந்தால் பெர்மனென்ட் விசா கிடைத்திருக்கும் ஆனால் டார்ச்சரோ அதிகம் , விசா முடியும் நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது, இனியும் தாங்க முடியாத அவன் அந்த கம்பெனியை விட்டு ஊருக்கு போக ஆறு நாட்களுக்கு முன் வெளியாகி விட்டு அவன் அடைந்த மன உளைச்சலும், துன்பங்களும் ஏராளம், பிறகென்ன விசாவுடைய நாட்களும் முடிந்தது   அவனுடைய கனவும் முடிந்தது.

இறுதியாக ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு 30 திர்ஹம் கொடுக்க வேண்டி இருந்தது ஊருக்கு போய் கொடுத்து கொள்கிறேனென்று சொல்லியும்  அவரும் அந்த பணத்தை வாங்காமல் விடவில்லையாம், விசிட்டில் துபாயிக்கு வேலை தேடிப்போகும் மக்களுக்கு இங்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லியாக வேண்டும், 

 வேலைத் தேடி செல்லுமுன்  நீங்கள் செய்ய வேண்டியவை
  •  நீங்கள் என்ன வேலைக்காக செல்லுகிறீர்கள் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். [ஏனென்றால் நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன், என்ன வேளை தேடி வந்திருக்கிறாய் என்று கேட்டால், ஏதாவது ஒரு வேலை என்பார்கள், அந்தளவுக்கு  அவர்களின் சுய முன்னேற்றத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.]
  • CV யை தெளிவாகவும் எம்ப்லாயருக்கு புரியும்படி தயார் செய்ய வேண்டும்
  • எப்படியெல்லாம் வேலை தேட வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் [உதாரணமாக : By paper , by website, by ஈமெயில்]
    உதாரணமாக ஈமெயில் மூலமோ, வெப்சைட் மூலமோ வேலை தேட விரும்பினால், நீங்கள் முதலில் அங்குள்ள recruitment agency வுடைய ஈமெயில் அனைத்தையும் சேகரிதுகொள்ள வேண்டும், பிறகு அங்குள்ள அணைத்து job searching வெப்சைட் அனைத்தையும் அங்கு போகும் முன்பே சேகரித்தால் நல்லது. இல்லையெனில் அங்கு ஒவ்வொருவருடைய கையையும் எதிர் பார்க்க வேண்டி வரும், குறிப்பாக அங்குள்ள மக்கள் ஊரில் பார்த்து என்ன மச்சான் என்று சொன்னவர்கள் அங்கு சென்றவுடன் எதோ தெரியாதவர்கள் போல் செல்வார்கள்.
    இதை ஏன் இங்கு சொல்லுகிறேனென்றால் அங்கு இறைவனுடைய உதவியும், அவனுடைய மாமுடைய உதவியும் இல்லையெனில், அவனுடைய நிலைமை வேறுமாதிரி போயிருக்கும்.
  • நாம் அங்கு சென்றால் யாரையும், எந்த ஒரு காரணத்திற்காகவும் எதிர் பார்க்ககூடாது என , செல்லுமுன் நீங்களே உங்களுக்குள் உறுதி எடுத்து கொள்ளுங்கள் .
கடைசியாக எந்த சோகத்தோடு சென்றானோ அதை விட அதிக சோகத்தோடு , 60   ஆயிரம் ரூபாயை இழந்தவனாக 2006 பிப்ரவரி மாதம் 17 ஆம்  தேதி காலை சென்னை வந்து சேர்ந்தான்  .
குறிப்பு : இன்னும் நிறைய எழுதலாம், அடக்கம் கருதி முடித்து விட்டேன், அப்புறம் இந்த கட்டுரையில் வரும் அந்த இருவரும்(அவன் , நான்) ஒருவரே, அவன்தாங்க  இந்த கட்டுரையை எழுதியது.
read more...

Tuesday, February 16, 2010

தற்காப்பு

தலைப்பு கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் உள்ளடக்கம் எப்படின்னு நீங்க கருத்து சொன்னதான் தெரியும், தற்காப்பை பற்றி எழுதும்போது சிலருக்கு கராத்தே, குங்-பு மற்றும் இதர கலைகள் தான் நினைவுக்கு வரும், ஆனால் இங்கு எழுத போவது அதைப்பற்றி அல்ல,

வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க, இறைவனின் உதவியால் நீங்கள் வைத்திருக்கும் பொருள் மற்றும் உங்களை சுற்றி உள்ள பொருளை  வைத்தே, உங்களை நீங்கள் காப்பற்றி கொள்ளலாம்,
அது என்ன பொருள்,
  • பேனா
  • சாவி
  • பல்குத்தும் குச்சி
  • மண்
  • மிளகாய்த்தூள்
  • ஜவ்வரிசி 
இதைபோல் ஏராளமான பொருட்கள் இருந்தாலும் இங்கு சிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்,
சரி மேலே குறிப்பிட்டுள்ள பொருளை எப்படி கையாளுவது என கேள்வி எழுகிறதா, முதலில்

பேனா


பேனாவை படத்தில் சொல்லப்பட்டவாறு பிடித்து கொண்டு , உங்களை தாக்க வரும்போது , ஒருகையை உங்களுடைய சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு ,இன்னொரு கையால் எதிராளியை தாக்க வேண்டும்.

சாவி
சாவியை படத்தில் சொன்னவாறும் பிடிக்கலாம் அல்லது உங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் வைத்துகொண்டு கையாளலாம்.


பல்குத்தும் குச்சி

இவை பெரும்பாலனரிடம் (குறிப்பாக பெண்களிடம்)  இருக்கும் , இது ஒரு அருமையான ஆயுதமென்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் இதை வெளியில் கொண்டு செல்வது எளிது, இவையை ஒன்றாகவும் பயன்படுத்தலாம், நிறையவும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இது பெரும்பாலான  ஆண்களிடம் இருக்காது, தேவைபட்டால் எடுத்தும் செல்லலாம்
மண்

இதைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லித்தர தேவை இல்லை, இருந்தாலும் நான் எப்படி கையாண்டேன் என்பதை உங்களுக்கு சொல்லித்தருகிறேன், யாரேனும் உங்களை நோக்கி வரும்போது, மண்ணிருக்கும் இடத்தை நோக்கி அவன் யுகிப்பதற்குள் சென்று கையில் மண்ணை எடுத்து தூவலாம், காலால் மண்ணை கண்ணை நோக்கி எத்துவது நல்லது. இவை இரண்டில் நான் காலைத்தான் உபயோகித்தேன்.
மிளகாய்த்தூள்
இது முக்கியமாக பெண்களுக்கு உதவும், இதை படிக்கும்போது கொஞ்சம் (ச்சில்லி)த்தனமாதான் இருக்கும், ஆனால் இது உதவுவது போல் எதுவும் உதவாது,  சரி எப்படி உபயோகிக்கலாம்? இதை வெறும் தூளாக கொண்டு சென்று தூவ முடியாது, ஆதலால் உங்களுகெல்லாம் தெரியும் விளையாட்டு தண்ணி துப்பாக்கி(Toys Water Gun), அதில் மிளகாய்த்தூள் கரைத்த தண்ணீரை நிரப்பி ஹான்ட் பாக்கில் வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும்போது சும்மா கண்ணுன்னு  அடிக்கலாம்
ஜவ்வரிசி

பெயரைக்கேட்டாலே ஜவ்வுனு ஓட்டுற மாதிரி இல்லே, இதை பொது இடங்களில் உபயோகிக்க முடியாவிட்டாலும், இதன் பலன் தெரிந்தவர்கள், கண்டிப்பாக இதை நாடாமல் இருக்க மாட்டார்கள், இது உங்களுடைய வீட்டின் முன் யாரேனும் தொல்லை கொடுத்தால் பயன்படுத்தலாம், எப்படி அது?

ஜவ்வரிசியை அரை வேக்காடாக வேக வைத்து கொள்ள வேண்டும், எப்போதும் சூடு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டு , யாரேனும் வீட்டிற்கு முன்  ரொம்ப தொல்லை கொடுத்தால் அதை அகப்பையில் எடுத்து எறிந்தால் போதும் அவ்வளவுத்தான் ஜவ்வுனு ஒட்டிக்கொண்டு எடுக்கும்போது தோளோடுதான்  வரும்.

மேலே இவை அனைத்தையும் இக்கட்டுரையின் மூலம் சொன்னதின் நோக்கம், இப்படியும் தற்காத்து கொள்ளலாம்  என்பதற்காக  தான். இதை விட உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், அப்படியானால் எனக்கும் சொல்லித்தாங்களேன்.
read more...

Tuesday, February 9, 2010

ஒரு பெட்டியின் கதை


பெட்டி(carton) என்ற உடனே வெளிநாட்டில் உள்ள நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது விடுமுறையில் ஊருக்கு போற நாளைத்தான், ஆக ஒருதடவை ஊர் போய் திரும்பியதும், சில பேர் அதை பத்திரமாக வைப்பதுமுண்டு, சிலபேர் அதை ரோட்டில் உள்ள குப்பைதொட்டிக்கு பக்கத்தில் வைத்ததுமுண்டு .

இந்த இரண்டுபேருல, ரெண்டாவது ஆளிருகிறாரே அவர், அவருக்கே தெரியாமே ஒரு பெரிய உதவியை செய்கிறார்,
ஆமாங்க , இதன் மூலம் துப்புறவு தொழிலாளி முதல் குப்பை  பொறக்கும் ஆள் வரை பயனடைறாங்க,

"ஒருமுறை மாமாவோடு என் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தேன், உங்களுக்கெல்லாம் தெரியும் இங்கு  குப்பை வண்டிக்கு பின்னால் இருவர் ஏதோ பஸ்ஸில் தொங்குவதுப்போல் தொங்கிக்கொண்டு போவார்கள், அவர்களுக்குதாங்க இந்த பெட்டி பெரிதும் பயன் தருகிறது (இங்கு நான் பெட்டியைமட்டும் மையமாக வைத்து எழுதுகிறேன்,மற்ற பொருளும் பயன்தரும்). நாங்கள் அவர்களுக்கு பின்னால் கிட்டத்தட்ட மூன்று குப்பை தொட்டியை கடந்திருப்போம் (ஏனென்றால் அந்த வண்டி ரோட்டை அடைத்து கொண்டு சென்றதால்) எடுத்த பெட்டியை அவர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அதை பாதுகாத்து எடுத்து சென்ற விதம் என்னை நிறைய யோசிக்க வைத்தது, அவருடைய இந்த செயலுக்கு பின்னால் அவருடைய வறுமையும், கல்வியின்மையும்தான்  என் கண்ணுக்கு தெரிந்தது "

ஆகையால் ஏதேனும் பொருளை   உங்களுக்கு தேவை இல்லாத பட்சத்தில்  , அது மற்றவர்களுக்கு  தேவைப்படுமென்று நினைத்தால், அதை அப்படியே குப்பைத்தொட்டியின் உள்ளே போட்டு  விடாமல் வெளியே  வைத்தால்  , அவர்களுக்கு பயன் தரும் , இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் நீங்கள்  நிறைய நன்மையை பெற்றுக்கொள்வது  மட்டுமல்லாமல் , அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தினமும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதிர்கொள்ளுங்கள்.
__________________________________________________________________

SUFFIX said... இன்னும் இந்தப் பெட்டிகளை எடுத்து ஏழை மக்கள் பலர் சந்தையில் விற்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தும் கொள்கிறார்கள், மீள்சுழற்சிக்கும் (Recycle) பங்களிக்கிறது.
read more...

Sunday, March 8, 2009

வைட்டமின் 'டி' குறைவால் மூளை திறன் பாதிக்குமா?

வைட்டமின் 'டி' குறைவால் மூளை திறன் பாதிக்குமா?
வயதானவர்களுக்கு வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுவதால் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடலுறுப்புகள் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். இச்சத்துகள் வைட்டமின் 'டி'யில் உள்ளன. எனவே வைட்டமின் 'டி' குறைவதால் உடலியக்க செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மருத்து ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயதானவர்களின் மூளை செயல்பாட்டை பரிசோதித்ததில், அவர்களில் பெரும்பாலானோருக்கு நினைவுத்திறன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே வைட்டமின் 'டி' குறையாமல் உடல் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி நேரடியாகப் படுதல், எண்ணெயில் பொறித்த மீன், பால், சோயா பானங்கள் போன்றவற்றில் வைட்டமின் 'டி' அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக உப்பா...? ஆபத்து காத்திருக்கிறது!
'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்பார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால்..? நிச்சயம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை உண்பதால், உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தொடர்பாக டாக்டர்கள் ஹென் ப்ளேகல், பீட்டர் மேக்னர் மற்றும் குழுவினர் நடத்திய ஆய்வில், அதிக உப்புடன் கூடிய உணவுப் பண்டங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது.

உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் ஒரு பில்லியன் மக்கள் வாழ்வதாக எடுத்துக் கொண்டால், அவர்களின் 30 சதவீதம் பேர் அதிக உப்புடன் கூடிய உணவுகளை சாப்பிட்டதாலேயே இத்தகைய பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பொருத்தவரை குறைவான உப்பு கொண்ட உணவுகளையே சாப்பிடுகிறார்களாம். அதனால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இல்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஜப்பானைப் பொருத்தவரை நபர் ஒருவருக்கு 15 கிராம் உப்பு உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்த விகிதம் அதிகம் உள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலானோர் வலிப்பு நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது.

சுறுசுறுப்பான இளம் வயதினர் நாளொன்றுக்கு 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள் நாளொன்றுக்கு 2.2 கிராம் உப்பும் சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
சர்க்கரை நோயின்றி வாழ...
தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.A.Ahamed Ismathullah Sait

read more...

Friday, March 6, 2009

தண்ணீரால் ஓடிய பாலைவனக் கப்பல் !



ஏகஇறைவனின் திருப்பெயரால்.....


ذَلِكُمُ اللّهُ رَبُّكُمْ لا إِلَـهَ إِلاَّ هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். 6:102

இதற்கு முந்தைய எமது 'அசந்துப் போகும் அதிசயம்' எனும் தலைப்பில் ஒட்டகப் பாலில் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுப் பிடித்துக் கூறியதையும் அதையே 1400 வருடங்களுக்கு முன் மொத்த மனித சமுதாய மேம்பாட்டிற்காக இறக்கி அருளப்பட்ட உலகப் பொதுமறை திருக்குர்ஆனில் ஏகஇறைவன் கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21. என்றுக் கூறியதையும், திருக்குர்ஆனுடைய மெஸேஞ்சர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஏகஇறைவனின் கூற்றுக்கொப்ப நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஒட்டகப்பாலை தொடர்ந்து அருந்தி வருமாறு உத்தரவிட்டு நோயாளிகள் நோய் குணமடைந்ததையும் எழுதி இருந்தோம்.

பாலைவனக் கப்பல்

ஒட்டகத்திற்கு பாலைவனக் கப்பல் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு ஏன் என்றால் ? அன்று பாலைவனத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களையும், அவர்களுடைய வணிகப் பொருட்களையும் சுமந்து கொண்டு குண்டும், குழியும், மணல் முட்டுகளுமானப் பகுதிகளில் தங்கு தடையின்றி சவாரி செய்து கொண்டிருக்கும் அதனால் அதற்கு பாலைவனக் கப்பல் என்று சாதி, மத பேதமின்றி உலகில் அனைவராலும் கூறப்படுவதுண்டு.


அதைப் பிரதிபலிக்கும் விதமாக முத்து முருகன் என்ற சகோதரர் பாலைவனக்கப்பலாகிய ஒட்டக்ததைப் பற்றி கீழ்காணுமாறு கவிதை ஒன்றை அழகாக இயற்றி இருக்கின்றார்.


உயிர்க் கப்பல்!
பரந்தமணற் பெருங்கடலில்
பயணம் செல்லும் கப்பல் - இது
பக்குவமாய் உயர் முதுகில்
பாரம் சுமக்கும் கப்பல்!

வறட்சி மிகு நீரிலாவனத்தில்
போகுங் கப்பல் - இது
வாலும் முதுகும் கால்கள் நான்கும்
வாய்த்திருக்கும் கப்பல்!

நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்
நிறையக் குடிக்கும் கப்பல் - மிக
நெடும் பொழுது தாகம் தாங்கி
நிற்கும் உயிர்க் கப்பல்!

பார் முழுதும் உள்ள மக்கள்
பார்த்து வியக்கும் கப்பல் - இது
பாதம் மணலில் புதைந்திடாமல்
பாங்காய்ப் போகும் கப்பல்!

ஊர்ப் பயணம் செல்ல மக்கள்
ஓட்டிப் போகும் கப்பல் - மிக
உயர்ந்த உடலும் தடித்த தோலும்
உடையதிந்தக் கப்பல்!

பார்த்துப் புல்லை மேய்ந்து நல்ல
பால் கொடுக்கும் கப்பல் - இது
பாலைவனக் கப்பல் தம்பி
பார்! பார்! ஒட்டகக் கப்பல்!

- திட்டக்குடி முத்து முருகன்


சோலை வனமாவதற்கு முன்னிருந்த பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பாலைவனப் பகுதிகளுக்குள் எளிதில் கொண்டு வருவதற்கும் பாலைவனத்தில் விளையக் கூடிய பேரீச்சம் பழம், கோதுமைகளை எடுத்துச்சென்று வெளிச் சந்தையில் விற்றுக் காசாக்குவதற்கும் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் செல்வதற்கான வழித் தடங்கள் அறவேக் கிடையாது.
மிகப்பெரிய பொருளாதாரத்தை முடக்கி சாலைகள் உருவாக்க முடியாத அளவுக்கு அரசு கஜானாவில் வறட்சி நிலை.
மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து மோட்டார் வாகனங்கள் கண்டுப் பிடித்துப் பலநூரு ஆண்டுகள் ஆனப்பிறகும் பாலைவனத்து கடலுக்கடியில் கருப்புத் தங்கம் கண்டெடுக்கும் வரை இதே நிலை நீடித்தது.
உலகில் வாழும் மனித இனம் உட்பட மற்ற அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம் அவனே வழங்குவதாக திருமறைக் குர்ஆனில் கூறுகிறான். 11:6. பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.
இதேப் போன்று இன்னும் பல வசனங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும் பல இடங்களில் காணலாம் பார்க்க 6:14, 6:151, 29:79, 29:60, 42:19, 3:37, 3:169.

மேற்கானும் வாழ்வாதாரம் இறைவன் புறத்திலிருந்தே மனிதர்களை வந்தடைகிறது என்பதை அவ்வப்பொழுது தக்க சான்றுகளுடன் மனிதர்களுக்கு இறைவன் நிரூபித்துக் கொண்டே இருப்பான்.

அதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றுத் திரும்புவதற்கு வசதியில்லாத பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்களுக்காக அவர்கள் தங்கு தடையின்றி பயணிக்கக் கூடிய வகையில் அவனுடைய படைப்பாற்றல் மூலமாக ஒட்டகத்தை ( பாலைவனக் கப்பலை )ப் படைத்து வழங்கினான்.

ஒட்டகத்தின் உட்புறத்தில் ஏகஇறைவனால் அமைக்கப்பட்ட உறுப்புக்களைப் பார்வையிட்டால் அது இன்றைய வாகனங்களுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் பாகங்களைப் போலவே இருக்கும்.

பெட்ரோலில் ஓடும் இன்றைய வாகனமும் -தண்ணீரில் ஓடிய அன்றைய பாலைவனக் கப்பலும்.

இன்றைய வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் டேங்குக்கு நிகராக ஒட்டகத்தின் வயிற்றில் இறைவன் பொருத்திய அதிசய வாட்டர் டேங்க்.

நீர் கிடைத்தால் ஒட்டகம் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் பம்பிங்க் செய்து கொள்ளும் இவ்வாறு பம்பிங்க் செய்து அனுப்பிய 100 லிட்டர் நீரும் அதனுடைய பிற உறுப்புக்களுக்கு எவ்வாறுப் பிரித்து அனுப்புகிறது என்பதைப் படித்தால் உலகின் மூலையில் ஒரு இறைமறுப்பாளன் இருந்தாலும் இறைநம்பிக்கையாளனாக மாறி விடுவான்.

மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட வித்தியாசமான ரெத்தத்தின் சிகப்பனுக்கள்

  • பம்பிங்க் செய்து அனுப்பும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.
  • அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது.
  • குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழத் தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம் (Explosive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராத அளவுக்கு அதுனுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது.

கை தேர்ந்த படைப்பாளனாகிய இறைவனின் திட்டமிட்ட ஏற்பாடு.

பிற நாடுகளின் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு குடிநீர் குழாய்கள், அல்லது குட்டைகள், குளங்கள் இருப்பது போல் பாலைவனத்தில் இருக்காது அதனால் மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற அளவில் ஒட்டகத்திற்கும் இரத்தத்தின் சிகப்பணுக்களின் அளவு இருக்குமேயானல் குறைந்தளவு நீரையே தேக்கிக்கொள்ள முடியும்.

நீர் கிடைக்காத வழியில் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது இரத்த ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல் உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன் இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக அமைத்தான்.

பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. அதனால் அளவுக்கதிகமான வெப்பத்தினால் ஒட்டகத்தின் உடல் திசுக்களில் உள்ள நீர் குறைந்தாலும் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும்.

  • அதனால் ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
  • ஆனால் மனிதர்களின் உடலில் 12% நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும்.

குட்டிப் போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் படைப்பாளனின் வல்லமையை பறைசாற்றும் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை.

எரி பொருள் நிரப்பி வாகனத்தை ஸ்டார்ட் செய்ததும் எரி பொருள் அசுர வேகத்தில் எஞ்ஜினை அடைவதைப் போல்

ஒட்டகம் தண்ணீரை பம்பிங் செய்ததும் தண்ணீர் அசுர வேகத்தில் இரத்தத்தின் சிகப்பணுக்களை நோக்கிப் பாய்கிறது.

அவ்வாறு தண்ணீர் பாய்ந்தோடி வருவதை அறிந்த அதனுடைய சிகப்பு அனுக்கள் பழைய நிலையை விட அதிகமாக விரிந்து இடமளித்து அதகிபட்ச தண்ணீரை உறிஞசிக் கொண்டு ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது.

அதனால்

எத்தனை தொலை தூரமும்,

எவ்வளவு அதிகமான சூட்டிலும்,

சளைக்காமல் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்து கொண்டு பாலைவனக் கப்பல் (ஒட்டகம்) ஓடிக் கொண்டே இருக்கும். சுப்ஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன். ... ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

வாகனத்தின் பெட்ரோல் டேங்கின் எரிபொருள் தீர்ந்து விட்டால் லட்சக்கணக்கான ரூபாய் விலைக் கொடுத்து வாங்கிய ''வாகனம்'' பாதியில் நின்றுவிடும் அவ்வாறு நின்று விட்டால் மில்லியனர், பில்லியனரும் கூட நடராஜா தான்.

ஆனால்

இறைவன் கொடுத்த அருட்கொடை ஒட்டகத்தின் வாட்டர் டேங்கில் தண்ணீர் வற்றி விட்டாலும் தண்ணீரின் தேவை இன்றி ஒட்டகம் படு ஜோராக ஓடிக் கொண்டே இருக்கும் அதன் மேல் அமர்ந்து பயணிப்பவர் தங்கு தடையின்றி பயணத்தைத் தொடர முடியும்.

அடுத்த அதிசயம்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு பிறகு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.

சரி ரெத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது என்பதைக கண்டோம்.

ஒட்டகம் உயிர் பிராணி தானே அதற்கு தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ?

நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ?

என்ற சந்தேகம் ஏற்படலாம் அதையும் அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.

இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.

இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.

இனவெறி,

மொழி வெறி,
கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.

'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,

நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'
என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். நபிமொழி

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

read more...