Sunday, March 8, 2009

வைட்டமின் 'டி' குறைவால் மூளை திறன் பாதிக்குமா?

வைட்டமின் 'டி' குறைவால் மூளை திறன் பாதிக்குமா?
வயதானவர்களுக்கு வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுவதால் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடலுறுப்புகள் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். இச்சத்துகள் வைட்டமின் 'டி'யில் உள்ளன. எனவே வைட்டமின் 'டி' குறைவதால் உடலியக்க செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மருத்து ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயதானவர்களின் மூளை செயல்பாட்டை பரிசோதித்ததில், அவர்களில் பெரும்பாலானோருக்கு நினைவுத்திறன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே வைட்டமின் 'டி' குறையாமல் உடல் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி நேரடியாகப் படுதல், எண்ணெயில் பொறித்த மீன், பால், சோயா பானங்கள் போன்றவற்றில் வைட்டமின் 'டி' அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக உப்பா...? ஆபத்து காத்திருக்கிறது!
'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்பார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால்..? நிச்சயம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை உண்பதால், உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தொடர்பாக டாக்டர்கள் ஹென் ப்ளேகல், பீட்டர் மேக்னர் மற்றும் குழுவினர் நடத்திய ஆய்வில், அதிக உப்புடன் கூடிய உணவுப் பண்டங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது.

உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் ஒரு பில்லியன் மக்கள் வாழ்வதாக எடுத்துக் கொண்டால், அவர்களின் 30 சதவீதம் பேர் அதிக உப்புடன் கூடிய உணவுகளை சாப்பிட்டதாலேயே இத்தகைய பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பொருத்தவரை குறைவான உப்பு கொண்ட உணவுகளையே சாப்பிடுகிறார்களாம். அதனால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இல்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஜப்பானைப் பொருத்தவரை நபர் ஒருவருக்கு 15 கிராம் உப்பு உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்த விகிதம் அதிகம் உள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலானோர் வலிப்பு நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது.

சுறுசுறுப்பான இளம் வயதினர் நாளொன்றுக்கு 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள் நாளொன்றுக்கு 2.2 கிராம் உப்பும் சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
சர்க்கரை நோயின்றி வாழ...
தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.A.Ahamed Ismathullah Sait


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வைட்டமின் 'டி' குறைவால் மூளை திறன் பாதிக்குமா?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?