தாய்மார்களே, சகோதரிளே அல்லஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள், நாம் ஒவ்வொறு நாளும் குரான் ஓத வேண்டும், தர்ஜுமாக்களை படிக்க வேண்டும் அதை விடுத்து டீவி முன் உட்கார்ந்து ஒவ்வொறு நாடகத்தையும்
,ஒரு நேரம் கூட தவரவிடாமல் பார்த்து வருகிறீர்கள், தொழுகைய கூட அவசரமாக தொழுது முடிக்கின்றீர்கள், உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் தொழ வேண்டும், குரஆன் ஓதினால் என்ன என்று கேட்டால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குதான் என்று சொல்லுகிறார்கள், அதே
சமயம் டீ.வி, நாடகம் பார்பதற்கு மட்டும் அரை மணி நேரம் என்று 4,5 நாடகதிற்கு நேரம் ஒதுக்கபட்டு கூட்டாக நாடகம் பார்த்து விட்டு அந்த கதையைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசி கொள்கிறார்கள், அதே சமயம் அல்லஹ் இறக்கிய கண்ணிய மிக்க குர்ஆனை ஓத நேரம் கிடைக்க வில்லையே, நாளை மறுமை நாளில் அல்லஹ் முன் நாம் அனைவரும் கேள்வி கேட்கபடுவோம் என்பதை மற்ந்து விட வேண்டாம், தாய்மார்களே, சகோதரிகளே நீங்கள் பார்கின்ற 4,5 நாடகத்தில் ஒரு பகுதியை விட்டு அரை மணி நேரம் குர்ஆனை ஓதுங்கள், தர்ஜுமாக்களை படியுஙகள், அதனால் நேர்வழி பெறுவீர்கள். நோன்புக்கு மட்டும் குர்ஆனை கையில் எடுத்து கட கட வென ஓதி முடித்தேன் என்று தராவிஹ் வீட்டில் பேசிக்கொள்வதிள் எந்த பலனும் இல்லை, அல்லஹ்விற்காகவே தொழ வேண்டும் ஓத வேண்டும். நாடகம் வந்து நம்மை நாளை மறுமை நாளில் காப்பாற்றிவிட முடியாது. நாம் உள்ளச்சத்தோடு தொழும் தொழுகையும் குர்ஆனும் தான் நம்மை பாதுகாக்கும் என்பதை மற்க்காமல் நாம் அனைவரும் குர்ஆனை ஓதுவோமாக, அல்லஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
அல் அன்Faல் - வசனம் 2
1.உன்மையான விசுவாசிகள் யாரென்றால் அல்லஹ் அவன் பெயர் அவர்களின் முன் கூறபட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து ஒடுங்கிவிடும் மேலும் இவ்வேததை இறக்கிவைத அவணுடய வசனங்கள், அவர்களுக்கு ஓதி கான்பிக்க பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகபடுத்தும் அவைகள் தங்கள் இரட்சகன் மீது தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கையும் வைப்பார்கள்,
2.அவர்கள் எத்தகையோரென்றால் தொழுகையை நிறைவேற்றுவார்கள் நாம் அவர்களுக்கு கொடுத்த செல்வத்திலிருந்து தானமாக செலவும் செய்யுவார்கள், இத்தகையோர்தாம் உன்மையாகவே விசுவாசிகள் அவர்களுக்கு அவர்கள் இற்ட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மண்ணிப்பும், சங்கையான உணவும் உண்டு.
by உம்மு மஹ்மூதா
ஜித்தா, K.S.A
read more...