Monday, February 2, 2009

No சிகரெட்

ஒரு சிகரெட் குடித்தால் உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்து போகுமாம். புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் உண்டு. ‘நிக்கோடின்’ படிந்த கருமையான உதடுகள், குழி விழுந்த கண்கள், பொலிவிழந்த தோற்றம். பார்க்கவே பரதேசியைப்போன்ற காட்சி.

இதையும் தாண்டி சுவாசக் குழாய்களும், நுரையீரலும் சுருங்கிச் சிதைந்து சின்னாபின்னமாகும். புகைக்கும் சுவை நமக்குப் புத்துணர்வு அளிப்பது போல் அளித்து பின்பு புதை குழியில் தள்ளுகின்றது. நிமிட இன்பம் காலமெல்லாம் துன்பம்.

ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் சிகரெட் என ஊதித் தள்ளும் இளைஞர்களே... உங்கள் வாழ்நாள் வெறும் நாற்பது வயதிற்குள் முடிந்து போகும் என்பதை மறந்து விடாதீர்கள்! முப்பதை முடக்கும்; நாற்பதை நாசமாக்கும்.

‘இழுக்க இழுக்க இன்பம்! புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம்’ எனத் தவறான விளக்கம் தந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இதில் குற்ற மனப்பான்மையும், தாழ்வும் தான் தலை தூக்கி இருக்கிறது.

புகைப்பதால் புத்துணர்ச்சி பெறலாம், இந்தப் பூமியையே வலம் வரலாம்; ஏன்! தேவலோகம்கூட சென்று வரலாம்’ என விளம்பரத்திற்காகத் தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் வரும் போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள்.

By Abu Sumayyah


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "No சிகரெட்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?