Friday, February 6, 2009

Google தேடல் டிப்ஸ்

மேற்கோள் குறிகள் இரண்டாக அமையட்டும்: எப்போதும் நீங்கள் தேடும் சொற்கள் அல்லது சொல் தொகுதி கொண்ட இணைய தளம் வேண்டுமென்றால் அவற்றை இரு மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கவும். எடுத்துக் காட்டாக women who love rosesஎன்ற சொல் தொகுதி கொண்ட தளம் தேவைப்படுகையில் மேற்கோள் குறி இல்லாமல் தேடிய போது 3,46,00,000 என்ற எண்ணிக்கையில் தளங்கள் இருப்பதாகக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவை நாம் தேடும் தளங்களுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கலாம். இதனையே ""women who love roses'' என டைப் செய்து தேடிய போது தளங்கள் 45,500 என்று காட்டப்பட்டது. மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்படுகையில் மிகச் சரியாக நாம் எந்த வரிசையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அந்த வரிசையில் சொல் தொகுதிகள் இருந்தால் மட்டுமே தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரப்படுகின்றன.

1. சிறிய நட்சத்திரக் குறியீடு (*) : ஆங்கிலத்தில் wildcard என்று கூறப்படுவதனைக் குறிக்க சிறிய நட்சத்திரக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறோம். இதனை உங்கள் தேடுதல் பணியிலும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சொல்லினை அடுத்து எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்று அமைக்க இந்த குறியீட்டினை அமைத்துத் தேடலாம். குறிப்பிட்ட சொல் தொகுதியில் ஒரே ஒரு சொல்லை மறந்துவிட்டு அதனைத் தேட முயற்சிக்கையில் இந்த வகை குறியீட்டுடனான தேடல் கை கொடுக்கிறது. எடுத்துக் காட்டாக காவிரியின் குறுக்கே உள்ள பாலம் என்பதனைக் குறிக்க "the bridge on the river cauvery'' என அமைக்கலாம். ஆனால் காவேரி என்பது மறந்துவிட்டால் the bridge on the river XXஎன அமைக்க முடியாது. அது தவறான தகவலையே தரும். இங்கே the bridge on the river * என அமைத்தால் காவேரி குறுக்கே உள்ள பாலங்கள் குறித்த தகவல் கிடைக்கும். இரண்டு சொற்கள் இருக்கலாம் என தேட விரும்பினால் "the bridge on the river ** ”என அமைக்கவும்.

2.குறிப்பிட்ட தளத்தில் மட்டும்: இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நீங்கள் தேடும் தகவல் உள்ளது. ஆனால் அது எங்கே தரப்பட்டுள்ளது என்று நினைவில் இல்லை. அந்த தளத்தில் மட்டும் தேட விரும்பினால் "site:" என்று கொடுத்துத் தேடலாம். எடுத்துக் காட்டாக தமிழ் நாடு அரசின் இணைய தளமான www.tn.nic.in என்ற இணைய தளத்தில் மட்டும் ஞிச்ததிஞுணூதூ என்ற சொல் உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினால் "cauvery" site:www.tn.nic.in என டைப் செய்து கொடுத்து சரியான முடிவுகளைப் பெறலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் தேடும் தகவல் இருப்பது நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே இந்த தளம் இல்லாமல் மற்ற தளங்களில் தேடித் தகவல்களை அறிய வேண்டும் என்றால் ஒரு கழித்தல் () அடையாளத்தை இங்கு ண்டிtஞு: ஆப்பரேட்டருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக காவேரி குறித்து தமிழ்நாடு அரசு தளம் தவிர மற்ற தளங்களில் தேட வேண்டும் என்றால் "cauvery" site:www.tn.nic.in எனக் கொடுத்துத் தேடலாம்.

3. அதே பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல்லின் பொருள் சார்ந்து இருக்கும் மற்ற சொற்களை அறிந்து கொள்ள கூகுள் தேடலை வரையறை செய்திடலாம். இதற்கு ஆங்கிலத்தில் tilde ("~") என அழைக்கப்படும் அடையாளக் குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் தேடும் சொல்லின் முன்னால் எந்த இடைவெளியும் இன்றி அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக எம்.எஸ்.வேர்ட் தொகுப்பு குறித்து விளக்கமான குறிப்புகள் தரும் தளங்களைக் காண விரும்புகிறீர்கள். இந்த குறிப்புகள் என எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவற்றைப் பெறும் வழியை இந்த ஆப்பரேட்டர் தருகிறது. இங்கு "msword" ~tutorial என அமைத்தால் எம்.எஸ் வேர்ட் குறித்த basics, hints, guide, tips, tricks ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

4.விளக்கங்கள் பெற: ஒரு சொல்லின் விளக்கங்கள் பெற கூகுள் "define" என்ற ஆப்பரேட்டரைக் கையாள்கிறது. எந்த சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதன் முன்னால் இதனை இணைத்துச் செயல்படுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக nano technology என்ற சொல் குறித்து விளக்கம் வேண்டும் என்றால் define nano technology என்று கொடுத்தால் போதும். விளக்கத்தோடு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து தளங்களும் கிடைக்க what is nano technology எனக் கொடுத்துப் பெறலாம்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "Google தேடல் டிப்ஸ்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?