Sunday, February 8, 2009

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحيمْ
َلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் முஸ்லீம்கள் அன்று தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அண்ணியர்களை விரட்டியடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினர்.

அவ்வாறு அன்னியர்களை விரட்டியடிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்களால் பாரதம் முழுவதிலும் பரந்து கிடந்த தங்களின் பெரும்பான்மை சந்ததியினரின் எதிர்காலத்தைப் பற்றி அறவே சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஆனால் ஓர் இனம் மட்டும் தங்களுடைய சந்ததியனருடைய எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்தித்தது
நாமே வந்தேறிகளாக இருப்பதால் இந்த பூமியை ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?

ஆட்சி அரியணையின் ஓரத்தில் நமக்கோர் இடம் வேண்டும் !
நமக்குப் பின் நமது சந்ததியினருக்கு முழு ஆட்சி பீடமும் வேண்டும் என்று சிந்தித்தது.

ஒரு புறம் உச்சி வெயிலில் சுதந்திரப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே கொள்ளைப் புறத்தில் நள்ளிரவில் வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுக்கும் கள்ள அமர்வில் அந்த கயமைக் கும்பல் அமர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது.

சுதந்திரப் போராட்ட முஸ்லீம் வீரர்களுடைய முகாம்களையும்> பதுங்குக் குழிகளையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு காட்டிக்கொடுத்து அவர்களுடைய சிம்மாசனத்தை தாங்கிப் பிடிக்கும் தூத்துத் தூக்கிகளாக மாறி அன்றே அவர்களின் அரியனையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டார்கள்.

அதனால் இன்று சுதந்திர இந்தியாவின் முழு அரியணையையும் காட்டிக் கொடுத்தவர்களுடைய வாரிசுகள் கைப்பற்றிக் கொண்டனர்.

உயிரைப் பணயம் வைத்துப்போராடி தாய் மண்ணிலிருந்து ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சொந்த நாட்டின் ப்ளாட்பாரங்களில் பெட்டிக்கடை வியாபாரிகளானார்கள் !

இந்த நேரத்தில் இதை ஏன் நாம் இதை நிணைவுப் படுத்துகின்றோம் ?

இது ஆகஸ்ட் 15ம் அல்ல !
ஜனவரி 26ம் அல்ல !

ஆனால் மார்ச் 2ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி> ப்ளஸ் 2 க்கான முழு ஆண்டு பரீட்சை தொடங்கவிருப்பதால் தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக விழிப்புணர்வூட்டுகிறோம்.

கடந்த கால முஸ்லீம் சமுதாயத்துடைய உச்ச கட்டப் படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி வரை> அல்லது ப்ளஸ் 2 வரை தான் அதற்கு மேல் போக மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் அதற்கு மேலும் படிப்பைத் தொடர வேண்டும் படிப்பின் சிகரத்தை எட்ட வேண்டும் பின் வாங்கக் கூடாது என்பதற்காக இந்நேரத்தில் இதை நாம் நிணைவுப் படுத்துகிறோம்.

நாம் பிறந்த மண்ணிலேயே மற்ற சமுதாயத்தினர் அரசுத் துறைகளில் வேலை செய்து கைநிறையப் பொருளீட்டி தனது குடும்பத்தினருடன் நிம்தியாக வாழ்வது போல் நாமும் நம்முடைய வாழ்வை அவர்களைப் போல் சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்காக கல்வி கற்று அரசாங்க உத்தியோகத்தில் இடம் பிடிப்பதற்காக எத்தனையோ முறை அறவழிப் போராட்டங்கள் செய்துப் பார்த்தும் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் உள்ளது.

ஆள்வோருடைய செவிப்பறைகளைத் தட்டுவதைப்போல் அதை விட இன்னும் செவிலில் அறைந்தாற் போல் சச்சார் கமிட்டி தனது அறிக்கையை முஸ்லீம்கள் கல்வி அறிவிலும்> அரசாங்க உத்யோகத்திலும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கூறியும் அது அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களாகிய நாம் அயல்நாட்டில் பிழைப்புத் தேடித் திறியும் சமுதாயமாகி விட்டோம். நம்முடைய நிலமை இது தான் என்று தெள்ளத் தெளிவாக ஆனப்பிறகு அதிலாவது முறையாக ஏன் கால் ஊண்டக் கூடாது ?

படிப்பறிவில்லாமலும்> கைத்தொழில் கற்காமலும் அயல்நாட்டிற்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நம் சமுதயாத்தின் நிலை என்னத் தெரியுமா ?

• ஆடு> மாடுகளை மேய்ப்பவர்களாகவும்>
• விவசாயிகளாகவும்>
• ரோடு போடுகின்றவர்களாகவும்>
• ரோடு கூட்டுகின்றவர்களாவும்>
• கார் கழுவுகின்றவர்களாகவும்>
• கட்டடம் கட்டுவதற்காக கற்களை சுமப்பவர்களாகவும்>
• சந்தைகளில்> மார்கெட்களில் லோடிங்> அன் லோடிங் செய்பவர்களாகவும்.

கால் நூற்றாண்டுகளைக் கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை ஈன்று தாயகம் திரும்புகினற்னர்
இதில் இன்னும் கொடுமை என்னத் தெரியுமா ?

இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்பும் பலருக்கு சொந்த வீடு இருக்காது.

வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் இளமை தேய்ந்து கொண்டே செல்லும் கடமைகள் முடிவதில்லை.

இதெற்கெல்லாம் என்னக் காரணம் ?
படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி வந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் லேபர் வேலையில் சேருவதால் லடசக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை> குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை. ஆனால் முருக்கேறிய வாலிபப் பருவம் சிறுது> சிறிதாக கரைந்து தொழைந்துப் போய் வீடுத் திரும்புகிறோம்.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் ஆக்ஸிடென்டுகள் மூலமும்> ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர்.

தலைமாட்டில் நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக் கூட நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அண்ணிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகிப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை.

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையரே !
கடன் வாங்குவதற்கும்> திருப்பிக் கொடுப்பதற்கும் இறைவன் அனுமதித்திருப்பதால் கடன் பெற்று உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து பட்டதாரியாக> பொறியாளராக> ஆங்கிலப் புலமையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அவ்வாறு செய்தால் கைநிறைய சம்பதாதித்து வெகு சீக்கிரத்தில் கடனை அடைத்துவிட்டு தனது குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன் தனது மனைவி பிள்ளகைளை வரவழைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத; தொடர முடியும்.

தவறினால்...
இந்தியாவில் முன்னேறிய சமுதாயத்தவர்கள் அரசு வேலைகளை மட்டும் நம்பாமல் இந்தியா> மற்றும் வெளிநாடுகளில் உதவும் விதமாக சாஃப்ட்வேர் இஞ்சினியராக> சிவில் இஞ்சினியராக> மெக்கானிக்கல் இஞ்சினியராக இன்னும் பிரபல தொழில் நுட்ப கல்விகயைப படித்து விட்டு வெளி நாடுகளில் வந்து நம்மை விட முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் முஸ்லீம் லேபர்களை வைத்து இயங்கக் கூடிய பிரபலக் கம்பெனிக்கு எம்.டி யாக ஒரு ஐயரையோ> கிருஸ்தவரையோ தேர்வு செய்து கொண்டு வருகின்றனர் அவரும் கம்பெனியை பிரமாதமாக நடத்துகிறார் அதற்குக்காரணம் அதற்கு தேவையானப் படிப்பு அவரிடம் இருப்பதுவேயாகும்.

அதே கம்பெனியில் சேல்ஸ் ரெப்ரஸென்டிவ்களாகவும்> சூப்பர்வைஸர்களாகவும்> அவர்களே இருப்பார்கள் அதற்கும் காரணம் அதற்கு தகுந்தப் படிப்பு அவர்களிடம் இருப்பதுவேயாகும்.

படிக்காமல் வெளிநாடு வரும் முஸ்லிம் லேபருடைய சம்பளம் 300 ரியாலாக இருந்தால் படித்து விட்டு வெளிநாடு வரும் அவர்களுடைய சம்பளம் மூவாயிரம் ரியாலாக இருக்கும்.

படிக்காமல் வெளிநாடு வந்து 300 ரியால் சம்பளம் பெருகின்ற உங்கள் பிள்ளைகள் 3 வருடமானாலும் தாய் நாட்டுக்குத் திரும்பி தனது மனைவி பிள்ளைகளை பார்க்க வர முடியாத அளவுக்;கு பண நெருக்கடி சம்பளம் பற்றாக்குறையினால் ஏற்படும்.

படித்து விட்டு வெளிநாட்டுக்கு வருகின்றவர்களுக்கோ வந்த மூன்று மாதங்களில் கடனையும் அடைத்து விட்டு மனைவிப் பிள்ளைகளை வரவழைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம.
மார்ச் 2ல் முழாண்டு தேர்வு தொடங்கவிருப்பதால் இப்பொழுதே உங்கள் மகனுக்கு எந்த காலேஜில் என்னப் படிப்பு ? என்ற விபரங்களை சேகரிக்கத் தொடங்குங்கள்.

காலச் சூல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது இந்திய ஆட்சியாளர்களுடைய உள்ளத்தை இறைவன் புரட்டி விட்டால் பிறந்த நாட்டில் உயர் பதவிகளில் அமருவதற்கும் அந்தப் படிப்பு உதவிடும்> இல்லை என்றாலும் அயல்நாட்டில் கைநிறைய பொருளீட்டுவதற்கு உதவிடும். படிப்பு வீண் போகாது.

படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவல நிலையும்>
படித்துவிட்டு வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய செல்வ நிலையையும் விளக்கும் வீடியோவை onlinepj.comல் வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள் எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவைக் காணத் தவறாதீர்கள்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?