செலவே இல்லாமல் நமக்கு புண்ணியம் தேடித்தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவுகிறது. இந்த இணையதளத்திற்கு சென்று இலவச உணவு கொடுங்கள் என்ற மெனுவை கிளிக்கினால் போதும். நீங்கள் அன்றைய தினம் ஒருவருக்கு உணவு வழங்கிய புண்ணியவான் ஆகி விடுவீர்கள்.
இந்த இணைய தளத்தை நடத்துபவர்கள் பல நிறுவனங்களை ஸ்பான்சராக வைத்துள்ளனர். இணையதளத்தை பார்ப்பவர்களின் மூலம் ஸ்பான்சர் நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால், ஒரு நபர் பதிவுக்கு சமமாக ஒரு நபருக்கு உணவளிக்கும் செலவை ஸ்பான்சர் நிறுவனம் ஏற்கும். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.
இந்தியாவில் வருடத்திற்கு 25 லட்சம் பேர் பட்டினியால் இறக்கிறார்கள். இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேர் பட்டினியால் இறக்கின்றனர் என்பது போன்ற வறுமையின் கொடூரத்தை விளக்கும், புள்ளி விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கருணையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இணையதளம் இது என்பதில் சந்தேகம் இல்லை.
இதுதான் அந்தத்தளம்...www.bhookh.com
0 comments: on "நமக்கு புண்ணியம தேடித்தரும் இணைய தளம்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?