Saturday, February 7, 2009

* * * * * ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்

நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .

இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.

ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Thanks
SivaJustify Full

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "* * * * * ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?