கருவாகி உருவாகி வளர விதை;
பருகும் பழமுண்டாக விதை;
கவிஞனின் கற்பனை விதை;
க"விதை" என்பதும் அதனாலே..!
விதை ஓர் ஒப்பற்ற ஆசான்;
அதைக் கொண்டு பாடம் பெறலாம்
வீரியமுள்ள விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...!
விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்;
எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்..
கணிணி முதல் கைப்பேசி வரை
அனைத்திலும் ஆதாரப் பொருள்
விதை வடிவமே..............
விதையே நீ வாழ்க! வளர்க!!!!!
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்"
0 comments: on "விதைகள்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?