ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா...! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;"ஊனமுற்ற"நிலையே கிடைக்கும்.... வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து சுகம் தேடவேயில்லையே...!! கருவறையே உலகமென்று கருதியே சயனித்திருந்தாய், ஓருலகில் வந்து உதிப்பாயென்று ஒருபோதும் நினைக்காதது போலவே; மறு உலகம் உண்டென்பதை மறந்து விட்டாய் மனமே..! இரணமும்; மரணமும் இரகசியமாய்த் தான் இறைவனும் வைத்து விட்டான்; இரண்டையும் நோக்கியே இரவும் பகலும் பயணிக்கின்றோம்...... இரணத்தின் முடிவு; மரணத்தின் துவக்கம் சென்ற நிமிடம்- நின்று பேசியவர்கள் சென்ற இடம் எங்கே? சென்று பார்த்து வா; நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க) ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை நன்றாக உருவமமைத்த இறைவனே ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும் ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான் உண்மை இதுவென்று உணராத உள்ளமே உண்மையிலே "ஊனமுற்றவை"......... ="கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம் 00971-50-8351499 shaickkalam@yahoo.com |
0 comments: on "" ஊனம்""
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?