நான் எழுதிய பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை பற்றிய articleக்கு எனக்கு நிறைய இ-மெயில் வந்தது ,அதில் சகோதரர் SARFUDIN எழுதியது எல்லோரும் படிக்க உகந்தது.[ colour Font ல் பின்னிட்டாப்லெ]
Zakir Hussain
From SARFUDIN.......
முஸ்லீம்களாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற வேண்டும் என்று உண்மையிலேயே நமக்கு நம்பிக்கையும், மறுமையில் அல்லாஹ் இதைப்பற்றி விசாரித்து நமக்கு தண்டனை அளிப்பானே என்ற இறையச்சமும் உண்மையிலேயே இருக்குமானால், இதை மிகச்சுலபமாக உடனேயே ஒழித்துவிடலாம்.
1. மாமனார் வீட்டுக்கு (ஜெயில் அல்ல) வெளியூர் வாசிகள் போய்வருவது போல் மட்டுமே இருக்கவேண்டும்.
2. மனைவி வீட்டிலிறுந்து பணமாக, நகையாகவோ, வீடாகவோ (அதிரையினர்), வேறு எந்த வகையிலும் எதனையும் பெறமாட்டேன் என்று உறுதியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அப்படி வாங்குவதை மிகக்கேவலமான செயல் என்ற எண்ணம் முதலில் நமக்கு இருக்க வேண்டும். (வீடு வேண்டாம் மனைக்கட்டு மட்டும் நல்ல இடத்தில், உங்கள் மகளுக்கு வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்ற புதிய அயோக்கியத்தனம் இப்போது சிலவீட்டில் மட்டும் அறங்கேறுவதாக கேள்வி) உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. மாமனார் தருவதை நாம் பெறாவிட்டால் மறியாதைகுறைவாக
ஆகிவிடுமே என்று வெளியில் நல்லவர்போல் நடிக்க முயர்ச்சி செய்யாமல், இந்த காரியம் ஹராமானது, இதை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. இறைத்தூதர் காட்டித்தந்த வழிக்கு மாற்றமாக, கேடுகெட்ட செயல்களை செய்பவர்களின் நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளாமல் (உறவினர், நண்பர்களாக இருந்தாலும்) புறக்கனிக்க வேண்டும்.
பேச்சிலும், எழுத்திலும் இல்லாமல் இன்ஷாஅல்லாஹ் முதலில் குறைந்தபட்ச்சம் இதையாவது நடைமுறைப்படுத்த முயற்ச்சி செய்வோமே.
இந்த தீய செயளால் நமதூர் பொருளாதாரமும் ஆண்களின் உழைப்பும் எப்படியெல்லாம் வீனடிக்கப்படுகிறது என்பதை இன்ஷாஅல்லாஹ் விரைவில் அலசுவோம்.
SARFUDIN
0 comments: on "பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை-Feed back"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?