வாழ்கை யென்பது ஒரு நாடக மேடை என்றும் , இந்த வாழ்கையில் வெற்றி அதிர்ஷ்டத்தில் தான் கிடைகின்றது என்றும் சிலர் நினைக்கிறார்கள், வெற்றி உங்களைத்தேடி தானே வராது, நாம் தான் தேடி செல்ல வேண்டும்.
வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் சில இளைஞர்கள் நாம் என்ன வேலை செய்ய போகிறோம் என்றுக்கூட தெரியாது , யாரேனும் உதவி செய்வதற்காக நிங்கள் என்ன வேலை தேடுகிரிர் என்றால் ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் இவர்களுக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? சரியான திட்டமிடல் வேண்டும்,
இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.
வெற்றி பெறுவதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
உதாரனத்துக்கு நீங்கள் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அதிரை மன்சூர்
0 comments: on "வெற்றி பெறுவது எப்படி?"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?