Friday, April 3, 2009

தேர்தல் பலிகடாக்கள்


தேர்தல் பலிகடாக்கள்

"இப்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதாவும் / கருணாநிதியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை"- இது குமுதத்தில் வந்தது

இது போன்ற பெரிய தேர்தலில் தான் பொது மக்களை ஹோல் சேலில் ஏமாத்தலாம்.
நேற்றுவரை கொள்கை பேசியவர்கள் எல்லாம் இன்று தன்னை தானே டென்டரில் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்
முன்பு கடற்கரைதெருவில் ஒரே கம்பத்தில் 3 விதமான கட்சிக்கொடிகள் ஏற்றி [ ஒரே நாளில் 3 அரசியல் தலைவர்களுக்கு 2 மணி இடைவெளியில் அப்பாயின்மென்ட் கொடுத்து ஒரு கட்சிக்கு 500 ரூபாய் வசூலித்து..பிறகு அந்த காசு நூர் லாட்ஜ் கடையில் இடியப்பம் / இறைச்சியானது வேறு கதை. அதில் நான் / மற்றும் என் நண்பர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று எங்களை காந்தி / காமராஜர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு திட்டினார்கள். "தலைவர்கள் பெயர் திட்டுவதற்க்கும் உதவும்" என்பது முதலில் தெரிந்த நேரம்.

எப்படி தொடர்ந்து ஒரு பில்லியன் மக்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்ற முடியும் என்பதின் பதில் "தேர்தல்".

[குமுதத்தில்] ஞானியின் எழுத்தில் உள்ள தேர்தல்விதி முறை "49 ஓ' வை அனைவரும் தெரிந்து இருப்பது அவசியம்.
இதில் எவன் நல்லவன் என்பது பற்றி கருத்துகணிப்பும் / பேட்டியும் எடுப்பது முதல் தரமான காமெடி. அரசியல் வாதிகளால் பிரச்சினைகளும் , போரும் அதிகரித்தது மறுக்கமுடியாத உண்மை.

ZAKIR HUSSAIN


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தேர்தல் பலிகடாக்கள்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?