Monday, June 22, 2009

நூலகம் நுழைவோம்

கல்வி பயில்வது என்பது பாடப்புத்தகங்களை மட்டும் மனப்பாடம் செய்து தேர்வை சந்தித்து வெற்றி பெருவது மட்டும் வெற்றியல்ல. நிறைய பொது அறிவு, தொழில் நுட்பம், இது போன்று பல வகையான தகவல்களையும், அறிவது நிறைய புத்தகங்களை படிப்பதில்தான் கிடைக்கப்பெறும்.


அனைத்து வகையான புத்தகங்கள், பத்திரிக்கைகள் எல்லாம்.. எங்கே கிடைக்கும் .. அதாங்க நம்ம ஒவ்வொரு ஊரில் உள்ள அரசு பொது நூலகம்.. இங்கு சென்று நம் நேரத்தை பயணுள்ளாத கழித்தால் பயன்பெறலாம்.

அது மட்டுமில்லை ,, தினசரி செய்தி தமிழ், ஆங்கில‌ நாளிதள்கள், வாரம் , மாதம் என வரும் அனைத்து பத்திரிக்கைகள், கிடைக்கப்பெறும்..... சொல்லப்போனால் சுலபமாக ஒரே நாளில் அனைத்து வகையான செய்திகளையும் பல நாளிதழ் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு அறிவியல், ஆன்மீகம், உடற்கல்வி, வணிகம், மருத்துவம் போன்ற தகவல் நிறைந்த பல வகையான‌ புத்தகங்கள் இருக்கும்.....

இன்னும் நூலகம் பற்றி தகவல்கள்...

உலகத்தில் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள "காங்கிரஸ் நூலகம்" (Library of Congress) அதன் இணையதள முகவரி : http://www.loc.gov/index.html


இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் கொல்கத்தாவில் உள்ள "இந்திய தேசிய நூலகம்" (National Library of India) அதன் இணையதள முகவரி : http://www.nlindia.org/index2.html

சென்னை நூலகம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும் அதன் இணையதள‌ முகவரி : http://www.chennailibrary.com

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நூலகம் நுழைவோம்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?