Saturday, May 1, 2010

தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்


தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்....

இப்போது பள்ளிபடிப்பு முடிந்து என்னபடிக்கலாம் என பசங்க குழப்பத்திலும் / தெளிவிலும் இருக்கலாம். இதில் வீட்டில் பெரியவ்ர்களின் பங்கு மிக முக்கியம்.நான் "சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..இதிலெ இவன் படிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது" என அடம் பிடித்தால் ஒரு இலக்கு இல்லாத சந்ததியினரை உருவாக்குகிறீர்கள என சரித்திரம் / பூகோளம் எல்லாம் உங்களை வைய்யும்.

பசங்க இப்போது 'மார்க்கெட் நிலவரம்' தெரியாமல் 'பெருவாதிபேர்' படிக்கிறார்கள். [இராலில் மண்ணைக்கலந்து விற்க்கும் நம் ஊர் கடைத்தெருவுவுக்கும் நான் சொல்லும் மார்க்கெட்டுக்கும் சம்பந்தம் இல்லை] என் மச்சான் படிக்கிறான் / தெரு பையன் படிக்கிறான் என்று விலை போகாத படிப்புகள் / பட்டங்களில் நமது மாணவர்கள் ரொம்ப ஜல்லியடிக்கிறார்கள்.

"எஸ்கிமோட்டெ யான் தம்பி ஐஸ்கிரீம் விக்கனும்?"-
அனுபவமிக்க ஒரு பெரியவர்- முத்துப்பேட்டையை சார்ந்தவர்.

இப்படித்தான் ஒருவன் ஜவுளிகடை திறந்தால் இன்னொருவனும் அதையே திறப்பது, நகை கடை திறந்தாலும் பக்கத்திலேயே அதே மாதிரி திறந்து நாசமாக போவது என அதே தவறை திருப்பி திருப்பி செய்து கொண்டிருகிறோம்.

சரி உறுப்படியாக என்ன செய்யலாம்..இப்போது Educational Fair தமிழ்நாட்டிலும் வர ஆரம்பித்து விட்டது.இதற்க்கு முன்னோடியாக இருந்தது சிங்கப்பூர் / மலேசியா / யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகள். சமீபத்தில் திருச்சி / சென்னையில் நடந்தது என நினைக்கிறேன். இதுபோன்ற இடங்களுக்கு உங்களக்கு தெரிந்த / தெரியாத யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். வருங்காலத்தில் அந்த பையன் 'கல்வி கண் திறந்த மாமனிதர்' பட்டம் உங்களுக்கும் தரலாம்.

பசங்களிடம் " அந்த காலத்து SSLC இந்த காலத்து M.A & M.Sc க்கு சமம் தெரியுமா?' என்று பன்ச் டயலாக் எல்லாம் பேச வேண்டாம். நீங்கள் அப்போது படித்த செலபஸ் இப்போது உள்ள பல்கலைகழகங்களின் காம்பவுன்டை தாண்ட கூட பத்தாது.

ஏவியேஷன் இன்டஸ்ட்ரி இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. Aircraft Engineerss & Aeronatical Engineers / தேவைகள் அதிகம். பெட்ரோலியம் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி Petrolium Exploration Engineer தேவையை அதிகப்படுத்தி இருக்கிறது. மருத்துவம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் & Stem Cell Reserach நிறைய நல்ல எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. Air Force Cadet Engineer சேர்ந்த்தால் அப்பாயின்ட்மென்ட் வரை Air Force செலவு செய்கிறது.
வளர்ந்து வரும் Financial Sector இப்போது உலகளாவிய ரீதியில் Financial analyst & Actuary க்கு பணம் அள்ளித்தருகிறது.

நன்றாக சம்பாதித்து வெளிநாட்டு சென்ட் எல்லாம் பர்மா பஜாரில் வாங்கிக்கலாம்.

இதற்கெல்லாம் நிறைய வெப் லின்க் இருக்கிறது. கொஞ்சம் நேரம் செலவு செய்து ரிசேர்ச் செய்ய வேண்டும்.

உயர்கல்வி தொடர நினைக்கும் மாணவர்கள் தயவு செய்து மண்ணடி தான்டாத காக்கா , புளிய மரத்தில், ரயிலடியில் உட்கார்ந்து சவடால் விடும் ஆட்களிடம் ஐடியா கேட்க வேண்டாம்.

19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை மொத்தமாக ஓய்த்துவிடும் டெக்னிக் இதுவரை எனக்கு புரியாத புதிர்.

உயர்கல்வி ஒன்றே சமுதாய உயர்வுக்கு முக்கியம்.

விடுங்க........ அவய்ங்க படிக்கட்டும்

ZAKIR HUSSAIN

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்"

ஹுஸைனம்மா said...

ரொம்ப பிஸியா? ஒரே “காப்பி-பேஸ்ட்”டா இருக்கே?

பதிவு சுவையா இருந்துது.

SUFFIX said...

பல நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கீங்க, இன்ஜினியரிங் துறையில் Instrumentation நல்லா இருக்குன்னு நண்பர் ஒருவர் சொன்னார்.

அப்துல்மாலிக் said...

//உயர்கல்வி தொடர நினைக்கும் மாணவர்கள் தயவு செய்து மண்ணடி தான்டாத காக்கா , புளிய மரத்தில், ரயிலடியில் உட்கார்ந்து சவடால் விடும் ஆட்களிடம் ஐடியா கேட்க வேண்டாம்.//

இது நல்ல எக்ஸ்பீரியன்ஸோடு துபாய்க்கு வேலை தேடிவரும் நபர்களுக்கும் பொருந்தும்

அப்துல்மாலிக் said...

//19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை//

இதுதான்யா முக்கியமா வாழ்க்கைய, எதிர்பார்ப்ப‌ முட்டுப்போடும் ஒரு முக்கிய பாய்ண்ட், இதுலேர்ந்து விடுபட்டாலே அவன் முக்கால்வாசி வாழ்க்கைய ஜெயிச்சிட்டானு அர்த்தம்

Abu Khadijah said...

வாங்க ஹுசைனம்மா, ஆமா சரியான வேலை, எந்த பிலாக்கு பக்கமும் போக முடியல(என்னோட பிலாக்கும் சேர்த்து தான்), இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுத ஆரம்பித்து விடுவேன், இது காப்பி பேஸ்ட் அல்ல, இது என் நன்பருடைய பதிவு, சில சமயம் அவரும் இந்த பிலாக்கில் எழுதுவார்.

Abu Khadijah said...

@ஹுசைனம்மா
@ஷஃபி காக்க,
@அபுஅஃப்ஸர்

எல்லோரையும் நீண்ட நாட்களுக்கு பின் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஹுஸைனம்மா said...

//இது காப்பி பேஸ்ட் அல்ல, இது என் நன்பருடைய பதிவு, சில சமயம் அவரும் இந்த பிலாக்கில் எழுதுவார். //

ஓ, அப்படியா. தெரியாததால், பயனுள்ள பதிவுகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று நினைத்தேன். நல்லது.

Zakir Hussain said...

To SUFFIX

இன்ஸ்ட்றுமென்ட் இப்போது ரிமோட் சென்சிங் துறையில் நிரம்ப தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்தவர் யாரும் படித்து முடித்திருந்தால் [ இந்தியாவில்] இஸ்ரோ , மற்றும் ஏர்போர்சிலும் / தனியார் விமான நிருவனங்களிலும் [ ஹெலிபோர்ட் முதற்கொண்டு] வேலைகிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

To அபுஅஃப்ஸர்

நீங்கள் எழுதியதை பார்த்தால் நிறைய இலைஞர்கள் இன்னும் பாதிக்கபட்டுகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். தன்னால் திருந்தாவிடில் யாரும் திருத்த முடியாது

To AdiraiExpres: You are the first one to given me permission to write in blog. I always regard your permission with a high gratitude. Thank you once again.

ZAKIR HUSSAIN

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

/19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை//

நிதர்சனமான உண்மை. MBA, MCA, M.Sc.(Comp. Sci) 100ல் 50 சதவிகிதம் படிக்கிறார்கள், எல்லோருக்கும் தகுந்த வேலை கிடைப்பதில்லை, கனிப்பொறி துறையில் நியறைய certificate course இருக்கிறது, அவரவர் திறமைக்கு ஏற்றால் போலவௌம், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றால் போலவும் படித்தால் நல்ல வேலை கிடைக்கும். MBA படித்து விட்டு வேலை இல்லை என்று புலம்பும் இலஞர்களுக்கு: certificate course நிறைய இருக்கிறது, AAFM, AAPM போன்ற certificate course மூலம் நாம் நம்மை சிறந்த முறையில் தயாரிப்பு செய்து கொள்ளலாம்.

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?