Monday, November 8, 2010

மூட நம்பிக்கையின் முதலிடம்


மூட நம்பிக்கையின் முதலிடம்


மொத்தமாகவும், சில்லரையாகவும் மூடநம்பிக்கையை குத்தகைக்கு எடுத்திருக்கும் சீனர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். உலகத்தில் மொத்தமாக மற்ற இனங்கள் செய்யும் அனைத்து மூடப்பழக்கவழக்கங்களையும் ஒரு பேப்பரில் எழுதி சீனர்களின் மூடநம்பிக்கையுடன் ஒப்பிட்டால் நாம் எழுதியது ஜூஜூபி ஆகிவிடும். இது எல்லா நாடுகளிலும் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும். ஆகஸ்ட் மாதங்களில் செத்துப்போன முன்னோர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கிறேன் என்று ட்ராமா எல்லாம் போடுவார்கள்.

டிராமாவில் மேல் உலகத்தில் நடக்கும் கொடுமையெல்லாம் தேவதை / சாமி உருவில் வந்து சொல்வார்கள். ஒருவன் மரித்தால் இவர்கள் செய்யும் விமர்சையான சடங்குகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். வீட்டை விட்டு வெளியில் மரணம் சம்பவித்து இருந்தால் டெட்பாடியை வீட்டுகுள் கொண்டுவரமாட்டார்கள். [ ஏதோ சின்னபுள்ளையிலே வீட்டில் சொல்லாமல் படம் பார்க்க பட்டுக்கோட்டைக்கு போய் விட்டு வரும்போது ,வீட்டுக்குள் விடாமல் பிள்ளையை வெளியிலே நிற்க வைத்துதண்டிக்கிறமாதிரி ….வெளியிலேயே டெட் பாடி..என்ன கொடுமை சார் இது]

செத்துபோனவனை அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது இளநீர் மேல்புறமாக சீவி ஸ்ட்ராவெல்லாம் போட்டு வைத்துருப்பார்கள் வரும் வழியெல்லாம் [ "அம்மா" வந்து செத்துட்டானா என சாகுல் கேட்க வேண்டாம்] இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் " வீட்டுக்கு செத்தவன் வரும்பொது [ஆவிக்கு ] தண்ணி தவிச்சா?"]


அதை விட கொடுமையான முட நம்பிக்கை இப்போது உயிரோடு இருப்பவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களுக்கு ' 30, 40 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்த மூதாதையர் 'வாகு' சரியில்லை என்று கனவில் கம்ப்ளைன்ட் செய்ததாக சோகத்துடன் சொல்வார்கள் இதற்காக புதைத்த அந்த மனிதரை [ 30, 40 வருடங்களுக்கு முன்..] எழும்பையெல்லாம் தேடி எடுத்து "வாகா

' அடக்கம் செய்வார்கள். எனக்கு தெரிந்த ஒரு கிறுக்கன் தொட்டியில் போட்டு ஆட்டும் ஆட்டொமெடிச் மோட்டார் எல்லாம் ஃபி

க்ஸ் செய்திருந்தான் புதைகுழிக்குள்.

இவர்களின் வாஸ்த்து சாஸ்திரக்கு பெயர் "ஃபெங் சுய்' [FENG-SUI] இதற்காக இவர்கள் செலவிடும் தொகையில் ஒரு கஸ்ட் ஹவுஸ் கட்டிவிடலாம். வீட்டுக்குள் வளர்க்கும் 'அர்வானா' மீனுக்கு விலை ஒரு உயர்தர் கார் வாங்குவதிலிருந்து 2ம் நம்பரில் ஜப்பான் போகும் விசா அளவுக்கு விலை அதிகம். வீட்டு வாசலில் வலது புரம் தண்ணீர் ஊற்றிலிருந்து ஜேட் எனும் கற்கள் வரை இவர்களின் லிஸ்ட் தொடரும். தொழில் நடத்தும் இடங்களில் இவர்கள் பெரும்பாலும் 3 விதமான சாமி சிலை வைத்திருப்பார்கள். அதில் கையில் பெரிய வாளுடன் ஒரு சாமி இருக்கும்[ காக்கும் கடவுள்!!]...இன்னொரு சாமி கையில் ஒரு லெட்ஜர் புக்மாதிரி ஒன்று வைத்திருக்கும். எனக்கு ஒரு சீன நண்பன் இருந்தான்[ ரொம்ப சின்ன வயதில்] அவனிடம் ஏன் உங்கள்சாமியை அப்டேட் செய்ய வில்லை, இன்னும் மேனுவலாக லெட்ஜர் வைத்து கணக்கு பார்ப்பதற்க்கு ஒரு ஏஷர் / ஃபுஜிட்சூ / பி எம் நோட் புக் வாங்கி அவர் கையில் கொடுக்களாமே என தெரியாமல் சொல்லி விட்டேன். அவன் என்னை அடிக்காத குறைதான்.

ஆகஸ்ட் மாதங்களில் இவர்களின் முன்னோர்களுக்கு சில பொருள்களை வைத்து படைப்பார்கள்.அந்த பொருள்கள் எல்லாம் டூப்லிகேட்தான். அதில் க்ரெடிட் கார்டு, பணம் [சொர்க்க / நரக வங்கியின் கவர்னருடைய போட்டோவெல்லாம் இருக்கும்] இப்போது நாடு முன்னேற்றம் அடைந்து விட்டதால் மெய்டு, பென்ஸ்கார் எல்லாம் வைத்து படைக்கிறார்கள் ...ஏறக்குறைய சந்தனக்கூடு ஃபார்முலாதான். என்ன ஒரு வித்தியாசம் இதை அனைத்தயும் வைத்து நடு ராத்திரியில் எரித்துவிடுவார்கள், அப்பதானே தீ ஜ்வாலை வழியாக மேலோகம் போகும் என்பது இவர்களின் ஐதீகம்.

மற்றபடி வீடு குடி போகும்போது அழகான பெட் எல்லாம் வாங்கி அதில் நடுவில் மண்னை கொட்டி வைப்பது [ ஏதோ சிம்பாளிக்கா சொல்றாங்க நினைக்கிறேன் ] , தலைவாசலில் சிரிக்கும் புத்தர் என்று புத்தருக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலையை வைப்பது [ ஏதோ ஆரியபவன் முதலாளி ரேஞ்சுக்கு தொந்தி இருக்கும்]

சீனப்புத்தாண்டில் இவர்கள் 7 வது நாளில் [ அங்கும்கிழமை ராத்திரி” இருக்கும் என நினைக்கிறேன்] கரும்பு வீட்டு வாசலில் கட்டி வைத்து பட்டாசு எல்லாம் வெடிப்பார்கள்.[CHOP GO MEI] மேல் உலகத்திலிருந்து நல்ல தேவதை எல்லாம் அன்றுதான் இறங்குகிறார்களாம் ...எப்டினு கேட்கிறீங்களா கரும்பில் உள்ள 'கனு'தான் படிக்கட்டாம்.... முதல் ஏழுநாளில் ஆன்வல் லீவில் போயிருப்பார்கள், இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.


ZAKIR HUSSAIN

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "மூட நம்பிக்கையின் முதலிடம்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எத்தனை தடவை வாசித்தாலும் எழுத்து நடை எங்களை இழுத்துக் கொண்டேயிருக்கிறது...

"உள்ளே வரும்போது தலையில நெலப்படி இடிச்சுட்டா திரும்ப போயிட்டு வான்னு ஊரில் சொல்லுவாங்களே அதுமாதிரி அடிக்கடி தலையில இடிச்சுக்கிறேன்" :)

ஜலீல் நெய்னா said...

சரிதான் இனி சீனர்களிடம் எந்த பிரசனையாக இருந்தாலும் நன்பர் ஜாஹிர் தீர்த்து
வைப்பார்போள் தெரிகிறது சீனர் வாழ்கை வறலாறு போடலாமே.

என்ன ஜாஹிர், நான் தான்!
ஜலீல்... (அவளே என் காதலி......)ஞாபகம் வரலேன்டா சபீர்ட்ட கேளு.

ZAKIR HUSSAIN said...

ஜலீல்...எப்படி இருக்கீங்க...ஊரில் பார்த்தது...இந்த வலைப்பூவில் சந்தித்ததில் சந்தோசம். என்னுடைய மற்ற ஆர்டிக்கிள்ஸ் படித்து இருக்கிறீர்களா?

ஜலீல் நெய்னா said...

என்ன ஜாஹிர் திடீர்ன்டு, வாங்க போங்க
வா போ...வே போதும்.
உன்னுடைய கட்டுரையை அதிகமாக படித்து
இருக்கிறேன்.
எல்லாமெ அருமை, முக்கியமாக‌ எழுத்தின்
நடை பிரமாதம்.
சின்ன வயதில் பார்த்தது பகிர்ந்தது எதையுமே
நீ மறக்க வில்லை.
அதேபோல் சபீரும்...ம்.. ம்.. பிரமாதம்

எஸ்.ஆர்.சேகர் said...

ஒங்க நண்பர்களுடைய நெருக்கம் ரொம்ப புடிச்சிருக்கு

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?