துபாயில் அவன் என்றவுடன் யாரும், ஏதோ எம்.ஜி.ஆர் படம் என்று என்னிட வேண்டாம், இது ஒரு உண்மையான(கசப்பான) சம்பவம், ஆமாங்க , மூன்று வருடத்திற்கு முன் ஒரு இளைஞன் துபாயுக்கு பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் சென்ற அவனுடைய பயணம் வெறும் கனவாகவே போனதைப்பற்றித்தான் இங்கு எழுதுகிறேன்.
ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று சென்னையை சென்றடைந்த அவன் ஒரே சோகமாக காணப்பட்டான், நாம் இந்நாட்டை விட்டு, வீட்டை விட்டு பிரியபோகிறோமே என்று நினைத்தானோ என்று தெரியவில்லை. அன்று மாலை ஏர்போர்ட்டை சென்றடைந்தவுடன் அவன் ஏதோ ஒன்றை பார்த்த படியே நின்றுக் கொண்டிருக்க நானும் அவனுடன் சேர்ந்து பார்த்த பொழுதுதான் என் மனமும் லேசாக கனத்தது, அது என்னவெனில் 21 வயது மதிக்கத்தக்க இன்னொரு பையன் அவனுடைய தாயை விட்டு முதல் தடவை பிரிகிரானோ என்னவோ தெரியவில்லை, தைரியம் சொல்லவேண்டிய தாய் ஏனோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை கண்ட அவனுக்கும் எனக்கும் சற்று மனது கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் சுதாரித்து கொண்ட நான் இதெல்லாம் ஏர்போர்டில் சகஜம்தாண்டா, அதை கவனிக்காமல் நீ தைரியமாக கிளம்பு என்று சொல்லிவிட்டேன், பிறகு அவனும் போய் துபாயில் இறங்கியவுடனே அங்கு அவனுக்கு ஒரே மகிழ்ச்சி அவனுடைய நண்பர்களை பார்த்தவுடன், ஆஹா நமக்கு தெரிந்தவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்களே இனி நமக்கு கவலையே இல்லையென அவன் நினைத்ததுதான் தப்பு.
துபாயுக்கு போகுமுன் இவனுக்கு தங்குமிடம் மற்றும் சுற்று வட்டாரத்தை பற்றி ஒரு சில கற்பனையுடன் சென்று அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது, தாங்கும் அறையைப்பார்த்த இவனுக்கு மனதில் ஒருவகையான நெருடல், ஏனெனில் ஒரு சிறிய அறைக்குள்(20 x 20 )அவனோடு சேர்த்து பத்து பேர், ஒவ்வொரு சைடுலையும் பெர்த் போடப்பட்டு ஒரு பக்கத்துக்கு இரண்டு பேர் விதம் மொத்தம் 8 + கீழே படுப்பவர்கள் இரண்டுபேர் ஆக மொத்தம் 10 பேர், அப்பொழுதான் அவனுக்கு புரிந்தது இதுதான் பேச்சுலர் ரூமோ என்று, சுற்று வட்டாரம் சென்னையில் மன்னடி போன்று இருந்ததாம், 23 வருடங்களாக மூட்டை பூச்சி என்று தெரியாத அவன் அன்றுதான் பார்த்தானாம், அந்த பூச்சி இரவில் அவனையும் விட்டு வைக்க வில்லையாம் கடித்து கடித்து கலைத்து போய் "பாவம் இவன் எவ்ளோ கடிச்சாலும் வாங்கிடுறான் இவன் நல்லவேன்ன்னு இவன விட்டுட்டு போயுடுச்சாம்", ஒவ்வொரு தடவையும் அந்த மூட்டையை பார்க்கும் போது , அவர்கள் masking tape மூலம் ஒட்டி எடுக்கும்போதுதான் நினைத்தேன், இந்த டேப் ஒரு வேலை இதுக்காகத்தான் தயாரித்து இருப்பார்களோ என்ற எண்ணம் வந்ததாம் .
சரி வந்தது வந்தாச்சு இனிமேல் யோசித்து எந்த பயனுமில்லை என்று வேலை தேடும் படலத்தில் இறங்கிய இவனுக்கு முதல் 15 நாளாகியும் வேலையொன்றும் கிடைக்கவில்லையாம், அவன் போய் இருப்பதோ விசிட் விசா இன்னுமிருப்பதோ கொஞ்ச நாள்தான் நாம் என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது, சரி கிடைத்ததில் முதலில் இருந்துக்கொண்டு வேறு நல்ல வேலையை தேடி கொள்ளலாமென்று நினைத்தான் அப்பொழுதுதான் அவனுக்கு இன்னொரு வேலையும் கிடைத்தது, அது கொஞ்சம் சம்பளம் அதிகம், வேலையும் அதிகம் அதோடு டார்ச்சரும் அதிகம். வேறென்ன செய்வது இதுதான் நமக்கு விதியென்று அதிலேயே சிலகாலம் தொடர்ந்த அவனுக்கு நாளுக்கு நாள் டார்ச்சரும் அதிகமாகி கொண்டே போனது அப்படி அங்கு சகித்து கொண்டு இருந்திதுருந்தால் பெர்மனென்ட் விசா கிடைத்திருக்கும் ஆனால் டார்ச்சரோ அதிகம் , விசா முடியும் நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது, இனியும் தாங்க முடியாத அவன் அந்த கம்பெனியை விட்டு ஊருக்கு போக ஆறு நாட்களுக்கு முன் வெளியாகி விட்டு அவன் அடைந்த மன உளைச்சலும், துன்பங்களும் ஏராளம், பிறகென்ன விசாவுடைய நாட்களும் முடிந்தது அவனுடைய கனவும் முடிந்தது.
இறுதியாக ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு 30 திர்ஹம் கொடுக்க வேண்டி இருந்தது ஊருக்கு போய் கொடுத்து கொள்கிறேனென்று சொல்லியும் அவரும் அந்த பணத்தை வாங்காமல் விடவில்லையாம், விசிட்டில் துபாயிக்கு வேலை தேடிப்போகும் மக்களுக்கு இங்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லியாக வேண்டும்,
வேலைத் தேடி செல்லுமுன் நீங்கள் செய்ய வேண்டியவை
- நீங்கள் என்ன வேலைக்காக செல்லுகிறீர்கள் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். [ஏனென்றால் நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன், என்ன வேளை தேடி வந்திருக்கிறாய் என்று கேட்டால், ஏதாவது ஒரு வேலை என்பார்கள், அந்தளவுக்கு அவர்களின் சுய முன்னேற்றத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.]
- CV யை தெளிவாகவும் எம்ப்லாயருக்கு புரியும்படி தயார் செய்ய வேண்டும்
- எப்படியெல்லாம் வேலை தேட வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் [உதாரணமாக : By paper , by website, by ஈமெயில்]
உதாரணமாக ஈமெயில் மூலமோ, வெப்சைட் மூலமோ வேலை தேட விரும்பினால், நீங்கள் முதலில் அங்குள்ள recruitment agency வுடைய ஈமெயில் அனைத்தையும் சேகரிதுகொள்ள வேண்டும், பிறகு அங்குள்ள அணைத்து job searching வெப்சைட் அனைத்தையும் அங்கு போகும் முன்பே சேகரித்தால் நல்லது. இல்லையெனில் அங்கு ஒவ்வொருவருடைய கையையும் எதிர் பார்க்க வேண்டி வரும், குறிப்பாக அங்குள்ள மக்கள் ஊரில் பார்த்து என்ன மச்சான் என்று சொன்னவர்கள் அங்கு சென்றவுடன் எதோ தெரியாதவர்கள் போல் செல்வார்கள்.
இதை ஏன் இங்கு சொல்லுகிறேனென்றால் அங்கு இறைவனுடைய உதவியும், அவனுடைய மாமுடைய உதவியும் இல்லையெனில், அவனுடைய நிலைமை வேறுமாதிரி போயிருக்கும். - நாம் அங்கு சென்றால் யாரையும், எந்த ஒரு காரணத்திற்காகவும் எதிர் பார்க்ககூடாது என , செல்லுமுன் நீங்களே உங்களுக்குள் உறுதி எடுத்து கொள்ளுங்கள் .
குறிப்பு : இன்னும் நிறைய எழுதலாம், அடக்கம் கருதி முடித்து விட்டேன், அப்புறம் இந்த கட்டுரையில் வரும் அந்த இருவரும்(அவன் , நான்) ஒருவரே, அவன்தாங்க இந்த கட்டுரையை எழுதியது.