Thursday, January 27, 2011

ஜித்தாவில் வெள்ளம், January 26th 2011 wednesday




ஜித்தாவில் மழை வந்தால் அதன் அலங்கோலத்தை சொல்லி தெரிவதைவிட மேலேயுள்ள வீடியோவில் பாருங்கள்.
 நம் நாட்டிலெல்லாம் ஒரு வருடம் மழை வரவில்லையென்றால் பிரச்சனை, இங்கே மழை வந்தால் தான் பிரச்சனை. நான் வந்து இரண்டரையாண்டுகளில் இது நான் சந்திக்கும் இரண்டாவது பெரும் விபத்து.

இதற்கு முன் பெய்த (டிசம்பர்,2009 ஆண்டு)மழையால் நடந்த உயிர் இழப்பை விட இந்த ஆண்டு குறைவுதான் என்றாலும் மக்கள் பட்ட அவதி இரண்டும் வெவ்வேறு விதம்

1.முன்னர் மக்கள் சுதாரிக்கும் முன் அவர்களை காரோடு இழுத்து சென்று விட்டது,

2.இப்பொழுது கார்களை ஆங்காங்கே போட்டு சென்று விட்டதால் மக்கள் உயிர் தப்பியது.

இப்படியே ஜித்தாவில் எல்லா ஏரியாவையும் சொல்லிவிட்டு என்னுடைய ஏரியாவ சொல்ல மறந்துட்டேன்

என் வீட்டுக்கு பக்கத்து ரோட்டிலுள்ள பெட்ரோல் ஷ்டேசனில் தண்ணியுடன் பெட்ரோல் கலந்ததால் பெட்ரோல் எல்லாம் தண்ணீருக்கு மேல் மிதக்க ஆரம்பித்தத்ன் விளைவு அந்த பகுதியையே பெரும் விபத்துக்குள்ளாக்கி விட்டது, எப்படி நெருப்பு பற்றியது என தெரியவில்லை. குடும்பத்துடன் தண்ணீரில் மாட்டிக் கொண்ட காரை தள்ள முற்பட்ட போது நெருப்பின் சிறு பகுதிஅதன் மேல் விழுந்து பற்றி எரிய ஆரம்பித்து ,கிட்டத்தட்ட அங்கிருந்த 5 கார்கள் எரிந்து விட்டன. ஒரு வழியாக நெருப்பை அணைத்து விட்டார்கள்.  இன்னும் நாங்கள் சந்தித்ததை எழுதினால் கட்டுரை நீண்டுக்கொண்டே போகும் அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

 கீழே கொடுத்துள்ள் அனைத்து  வீடீயோக்களையும் பார்த்தாலே மேலே சொன்ன இவ்விபத்தை அறிந்துக் கொள்ளலாம்.










ஒரு எட்டுக்கு இந்த போட்டோ கேலரியையும் பார்த்துடுங்களேன்
http://arabnews.com/saudiarabia/article243502.ece
read more...

Sunday, January 23, 2011

உயிர்காக்க உதவுங்கள் (சகோ.நிஹமதுல்லாஹ்-புதுத்தெரு)

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த சகோ.நிஹமதுல்லாஹ் [வயது 20] இருசிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்த முந்தைய கோரிக்கை அதிரை எக்ஸ்பிரஸில் 16/04/2008 அன்று வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகளும் நல்லுள்ளம் படைத்தவர்களும் பொருளாலும் துஆ மூலமாகவும் உதவினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்!)

தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதிஉதவி கோரியுள்ளார். 
 
கீழ்காணும் அவரது மடலை வாசிப்பவர்கள் தாங்களும் தங்கள் நட்பு வட்டாரங்களிலும் இந்த  கோரிக்கையை எடுத்துச் சொல்லி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மீண்டும் கோருகிறோம்.

அதிரை மற்றும் ஏனைய வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் இந்த கோரிக்கையை பிரசுரித்து அதிகபட்ச உதவிகள் உரியநேரத்தில் சென்றடையுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது உதவிகளை மறக்காமல் கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

அல்லாஹ்வின் நல அருள் நம் அனைவர் மீது கிட்டட்டுமாக.ஆமீன்

-அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு மற்றும் வாசகர்கள்-

----------------------------------------
Assalamualikum

My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011.

As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed.


But Now His Blood  serum creatitine level is 20
Blood Urea is 164 . so doctor advised to immediately  start  the hemodayalasis process.
Now we do the hemodayalasis process

Also he need a dialysis process for every weekly for  two times.
per dialysis cost is min Rs.3000/-

insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs.
Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Thanking you
Best Regards
Najumudeen
---------------------------------------------
*மேற்கண்ட மடலை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு உடனடியாக அனுப்பித் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமின்.
நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்
 நன்றி: இஸ்லாம்கல்வி.காம்
read more...

Wednesday, January 19, 2011

அதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம் அவர்களின் எழுச்சி உரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான வாசகர்களே, கடந்த ஜனவரி 14ம் மற்றும் 15ம் தேதிகளில் அதிரையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.

நாம் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிறப்புப் பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சியுரை கானொளி முதன் முதலில்  அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.


இந்த கானொளியை பார்த்து பயனைடையுங்கள், இதை உங்களுக்கு தெரிந்த அதிரை சகோதரர்கள் மற்ற வெளியூர் சகோதரர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநாடு முடிந்த பிறகும் இந்த கானொளியை இணையத்தில் நம் அதிரைவலைப்பூக்களுக்காக தன் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி upload செய்து தந்த சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அல்லாஹ் போதுமானவன்.

-- அதிரைநிருபர் குழு
read more...

Sunday, January 16, 2011

திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம்

அதிரை வாழ் பெரியவர்கள், வெளிநாட்டு வாழ் அதிரை வாசிகள் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு,


"தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற புதிய கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பிட்ட இன்றைய பதினேழாம் தேதியிட்ட தினமலரில் வெளியான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.

ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் காத்திருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் முதல் திட்டமாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாகவிருப்பதால் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்வரும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற கருத்து மத்திய மாநில அரசு வட்டாரங்களில் நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மாநில அரசியல் வாதிகளை முன்னுதாரணம் காட்டி நம்முடைய அரசியல் வாதிகளும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும், பெரும்பான்மையான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றுவிடலாம் என குறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் ஊர் மற்றும் அண்டை ஊர் தனவந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோர் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மீண்டும் அந்த முயற்சியை முடுக்கிவிட்டு முக்கிய அமைச்சர் பெருமக்களையும் செல்வாக்குடைய எதிர்க்கட்சி பிரமுகர்களையும் உரிய முறையில் சந்தித்து முறையிட்டால் நம் நீண்ட நாள் கனவு நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்பது என் துணிபு.

முடிந்தோர் முயற்சிப்பார்களா?

அபு பஜ்லு (செ.ஒ.மு.ஹுசைன்)
ஜித்தா
read more...

Wednesday, January 12, 2011

கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை - LIVE start from 08:30am on 14.01.2011


அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
நாம் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நேரலை சுட்டி இதோ உங்களுக்காக. வரும் ஜனவரி 14ம் தேதி காலை 9 மணிமுதல் நேரலை ஒலிப்பரப்பகிறது. அல்ஹம்துல்லில்லாஹ்.
இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டை இணைந்து நடத்தும் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை இங்கு அதிரைநிருபர் வாசகர்களுக்கும், நம் அதிரைநிருபர் வலைப்பூவிற்கு வருகைத்தரும் அனைத்துமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நேரலைத்தொடர்ப்பாக கருத்துப்பரிமாற்றம் செய்வதற்காக தனிப்பதிவு நிகழ்ச்சி நடைப்பெறும் நாளில் பதியப்படும். அனைவரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை இணையத்தில் கண்டு மகிழுங்கள், பயணடையுங்கள், பயணடைய தூண்டுகோளாக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள் எங்கள் அருமை சகோதர சகோதரிகளே.
இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் நேரலையை எல்லா வலைத்தளங்களும் தங்களின் வலைப்பூக்களில் தாராலமாக நேரலை செய்யலாம் இதோ உங்கள் அனைவருக்காக இதோ கீழே தரப்பட்டுள்ள SCRIPTயை உங்கள் வலைப்பூவின் பதிவுகளிலோ அல்லது விட்ஜேட் பகுதிகளிலோ இணைத்துக்கொள்ளுங்கள். மற்ற ஊர் வலைப்பூக்களுக்கும் இந்த நேரலை சுட்டியை அறிமுகப்படுத்துங்கள்.


நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழுவுக்கும், இதற்காக முழு முயற்சி செய்துவரும்  நமது கணினி திறன் படைத்த சகோதரர்களுக்கும் மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.
--- அதிரைநிருபர் குழு
read more...

Monday, January 10, 2011

சென்னையில் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா - சகோ.மாகிரின் பங்களிப்பு

சகோ.மாகிர் அவர்களைப் பற்றி அறியாத அதிரையின் வலைதள உரிமையாளர்கள் யாரும் இருக்க முடியாது, அதே வேளையில் அச்சகோதரரைப் பற்றி இங்கு சில வார்த்தைகள் சொல்லாமல் இருக்க முடியாது.


நான் 11வயதாக இருக்கும் போது காரைக்கால் ஹமீதிய்யா ஹாஸ்டலில் அச்சகோதரர் எனக்கு அறிமுகமானார், என்னுடைய பெற்றோர்கள் ஹாஸ்டலில் சேர்க்கும்போது இச்ச்கோதரரிடமும் இன்னொரு சகோவிடமும் தான் பொறுப்பை ஒப்படைத்து சென்றார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அவரிடமிருந்து நிறைய அறிவுரைகளை கேட்டு பயன் அடைந்திருக்கிறேன், இறைவனுக்கே எல்லா புகழும்.

 அச்சகோதரரின் இணையப்பங்களிப்பு அளவிடமுடியாதவை , இந்த வலைப்பூக்கள்(பிளாக்ஸ்பாட்) வருமுன்னரே அதிரை மக்களுக்காக அவருடைய இனைய சேவையை செய்து வருகிறார்.
மேலும் அவரைப்பற்றி விபரங்களை அறிய கூகுளில் mahir78 என்று தேடி பாருங்கள்.

இக்கட்டுரையை பதிந்ததின் நோக்கம் நம் இளைஞர்களை இது போன்ற சேவைகளை ஊக்கப் படுத்துவதற்காகத்தான், மேலும் அவரைப்பற்றி செய்தியை தட்ஸ்தமிழில் படித்தேன்,



"சென்னை: இன்டர்நெட் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சென்னையில் சிறப்பு ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 15ம் தேதி குரோம்பேட்டையில் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாலை 3 மணிக்கு இக் கூட்டம் நடக்கிறது.

இதில் ஆங்கில விக்கிப்பீடியா குறித்தும், பத்தாண்டு நிறைவு விழா குறித்து 'விக்கியர்' ஒருவர் பேசுவார். மாகிர், பரிதிமதி ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் குறித்துப் பேசுவார்.

தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த விக்கிப் பயனர்கள், அவர்களின் பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

இதையடுத்து பொதுவான உரையாடல்கள் நடக்கும்.

பின்னர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்படும்.

இதைத் தொடர்ந்து ஜிம்மி வேல்சுடன் ஒர் இணைய உரையாடல் நடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது."

நன்றி தட்ஸ்தமிழ்
read more...

கல்வியே உன் விலை என்ன?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சீனா சென்றாயினும் சீர் கல்வி பெற்றிடுக!
கற்கை நன்றே கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி விழிப்புணர்வு நம் சமுதாயம் அடைந்த பயன்கள் என்றால் சொல்லிக்கொள்ளும்படி அதிகம் இல்லை. அடையப்போகும்(எதிர் காலத்தில்) பயன்கள் அதிகம் உண்டு. இன்ஷாஅல்லாஹ்.

சுதந்திரத்திற்காக தங்களின் கல்வியை விட்ட ஒரே சமுதாயம் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். வீரத்தோடு தங்கள் சொத்துக்களையும், உயிர்களையும் சமுதாய சதவீதத்திற்கு அதிகமாக தியாகம் செய்த ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான்.

வெள்ளையனுக்கு சாமரம் வீசியவர்கள், அடிமை சேவகம் செய்தவர்கள். சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட எடுத்த போடாதவர்கள் என்ற பெரும் கூட்டமே வெள்ளையன் விட்டு சென்ற அத்தனை துறைகளையும்: கல்வித்துறை, பத்திரிக்கை துறை, தொழில் துறை, அரசு துறை, இராணுவத்துறை, இப்படி அனைத்து துறைகளையும் தியாகம் என்றால், சுதந்திரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் கூட்டங்கள் தந்திரத்தால் அபகரித்து, தியாகம் செய்த முஸ்லிம்களை சுதந்திரம் கிடைத்த அன்றிலிருந்து திட்டமிட்டு ஓரம் கட்டியது. இரண்டாம்தர குடிமக்கள் நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நரிகளின் திட்டம் இன்று போடப்பட்டதல்ல. மாறாக சுதந்திரத்திற்கு முன்பே திட்டம் போட்டு சரியானபடி முஸ்லிம் வாழும் அனைத்து பகுதிகளையும் புறக்கணிக்க ஆரம்பித்தது. இன்று வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

வெள்ளைக்காரன் முஸ்லிம்களுக்கு அளித்து வந்த இடஒதுக்கீட்டை நரிகள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்த இடஒதுக்கீட்டைத்தான் ஒழித்தார்கள். கல்வியை மார்க்க கல்வி உலக கல்வி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. நம் முன்னோர்கள் படிக்காத சமுதாயமாக ஆகிப்போனதால் வெளிநாட்டில் வேலை தேடும் அவல நிலைக்கு ஆளானார்கள். நரிகள் இந்தியாவை கபளீகரம் செய்து தம்மை வளம், பலம், கல்வி என்று எல்லாவற்றிலும் முன்னேற்றி எம்மை வெல்ல யாரும் உண்டோ? என்று எகத்தாளமாக முஸ்லிம்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சுதந்திரம் கிடைத்த பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த வெகுமதிகள் என்ன? முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கல்வி இல்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, தண்ணீர் இல்லை, சுகாதரா வசதி இல்லை, அரசாங்க துறையில் வேலை இல்லை, இல்லை - இல்லை - இல்லை எதுவுமில்லை என்று அயல்நாடு சென்றார்கள் முன்னோர்கள்.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தியாகமிக்க நல்ல மனிதர்களால் முஸ்லிம் வாழும் பகுதிகளில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு சேவை அடிப்படையில் நடக்க ஆரம்பித்தது. இருந்தாலும் எல்லோருக்கும் கல்வி சென்று சேரவில்லை. வயிற்றுக்கு சோறு இல்லாத பொழுது கல்வி எங்கே கற்பது. நம் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள தனவந்தர்களின் பிள்ளைகளும், ஏழைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களுக்கும் கல்வி கிடைத்து வருகிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இன்றும் அப்படியேதான் நிலைமை உள்ளது. ஆர்வமிக்க ஏழை முஸ்லிம் மாணவர்களின் நிலை இன்றளவும் பரிதாபம்தான் 6 அல்லது 10ம் வகுப்போடு அவனுடைய கல்வி வாசல் அடைக்கப்படுகிறது. மேற்கொண்டு படிப்பதற்கு குடும்ப சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. முஸ்லிம்களால் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டாலும், இந்த உதவிகள் திட்டமிடப்படாத உதவிகளாகவே சென்று கொண்டு இருக்கிறது.

மேற்படிப்பை பற்றியும், அரசாங்க வேலை வாய்ப்பை பற்றியும்  பேசிக்கொண்டு இருக்கிறோம். கல்வியை பாதியோடு விட்டுவிடும் ஏழை மாணவ, மாணவிகளின் நிலையை பற்றி அதிகம் பேசப்பட வேண்டும். இதற்காக சரியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

ஏழை மாணவ, மாணவிகளின் நிலைகள் ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்பட வேண்டும். செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் எப்படியும் படித்து விடுவார்கள். ஏழைகள் பாதியில் கல்வியை விட்டு விடுவதற்கு காரணங்கள் கண்டறிந்து சரியான வழியில் திட்டமிட்டு இவர்கள் கல்வியில் தொடர்ந்து படித்து மேற்படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர உதவிகள் செய்யப்பட வேண்டும்.

எப்படி செயல்பட வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் நம் உறவினர்களில் உள்ள மாணவ, மாணவிகள் என்ன படிக்கிறார்கள், அவர்கள் குடும்ப நிலை என்ன அவர்களால் கல்வியை தொடர முடியுமா? என்று ஆய்வு செய்து நம் வசதிக்கு தக்கவாறு அவர்களின் கல்வி தொடர உதவிகள் நம்மால் செய்யப்பட வேண்டும். மேலும் கல்விக்கு உதவி செய்வதோடு நின்று விடாமல் மாணவன் பள்ளி செல்வதை விட்டால்தான் அவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று தெரிந்தால் அவர்களின் குடும்பத்திற்கும் நிதி உதவி செய்து அவன் படிப்பு பாதியில் தடைபடாமல் தொடர உதவ வேண்டும்.

நம்முடைய ஏழை உறவினர்கள் நம்மிடம் வந்து உதவி கேட்கும்வரை அலட்சியமாக இருக்கக்கூடாது. அவர்களின் நிலை அறிந்து நாமே சென்று உதவிகள் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்களில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொறுப்பு எடுத்து கொண்டால் இதற்கான கூலியை வல்ல அல்லாஹ் நமக்கு தாரளமாக வழங்குவான்.

ஊர் அளவில் செயல்படும் திட்டங்களை பார்ப்போம்;: ஊர் அளவில் ஒரு தன்னலம் பாராத கல்விக்குழு அமைக்கப்பட வேண்டும்.(உதாரணத்திற்கு: அதிரை அறக்கட்டளை என்று வைத்துக்கொள்வோம்) ஒவ்வொரு தெருவிலும் சேவை மனப்பான்மை உள்ள ஒரு குழுவை ஏற்படுத்தி இந்த குழு மூலம் அந்த தெருவில் உள்ள மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களின் கல்வி தரம், குடும்ப பொருளாதார தரம் இரண்டையும் ஆய்வு செய்து, மாணவர்களின் கல்வி தொடர உதவி செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு  வாழ்வாதார வசதி இல்லை என்றால் அவர்களுக்கும் சேர்த்தே நிதி வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் மாணவர்களுக்கு மட்டும்தான் கல்வி உதவி தொகை வழங்குவோம், குடும்பத்திற்கு உதவி செய்ய மாட்டோம் என்றால் 2 ஆண்டுகள் கல்வி உதவி தொகை பெற்றவர்கள் குடும்ப வறுமை காரணமாக கல்வியை பாதியில் நிறுத்தி விடும் அவலம் தொடர்ந்து வருவதை காண முடிகிறது. மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பொருளாதார உதவி சென்றடைய வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் தலைமை குழுவிடம் அறிக்கை சமர்பித்து பொருளாதாரத்தை எப்படி திரட்டுவது என்ற ஆலோசனை செய்ய வேண்டும். அந்தந்த தெருவில்  உள்ள செல்வந்தர்களிடம் பொருளாதாரம் திரட்டப்பட்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்த ஆரம்பிக்க வரும் வரை மலையை பெயர்த்து வேறு இடத்தில் வைக்கும் அளவுக்கு கஷ்டமானதுதான். அல்லாஹ்வின் அருளால் சேவை மனப்பான்மை உள்ள, பெரியவர்களிடமும், இளைஞர்களிடமும் இந்த பணியை கொடுத்தால் இன்ஷாஅல்லாஹ் வெற்றி உறுதி.

இதை விட்டு விட்டு கல்விக்கு மட்டும் உதவி செய்வோம். மேற்படிப்புக்கு உதவி செய்வோம், வேலைக்கு உதவி செய்வோம் என்று சொன்னால் படித்து வந்தால்தானே மேற்படிப்புக்கும், வேலைக்கும் உதவி செய்ய முடியும்.

படிப்புக்கு தடையாக முண்ணனியில் இருப்பது அவர்களின் வறுமை... வறுமை... வறுமை . . . சகோதரர்களே! இதைத்தான் தாங்கள் கவனத்தில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப்பசியோடு படி என்றால் எப்படி படிக்க முடியும். சொல்வது யாருக்கும் எளியது,  வறுமையை கண்டவர்களுக்குதான் அதன் உண்மை புரியும். மாணவர்களின் கல்வியையும், வறுமையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அதிக முக்கியமானது மார்க்க கல்வி - இந்த கல்வியை இரண்டாம் இடத்தில் தள்ளி தனியாக படிக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. காலேஜ் படிப்பை விட்டு விட்டு தனியாக மதரஸாவில் படிக்க கூடிய சூழ்நிலை இல்லை. மார்க்க கல்வியும், உலக கல்வியும் ஒரு சேர தரமாக ஒரே இடத்தில் கிடைக்கும் வரை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் விடுமுறை காலத்தை நன்கு பயன்படுத்தி மார்க்கத்தை நன்றாக போதிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கும், திரும்ப வந்து வீட்டு பாடங்களை எழுதுவதற்கும்தான் மாணவ மாணவிகளுக்கு நேரங்கள் இருக்கிறது. தொழ, குர்ஆன் ஓத அதிக நேரங்கள் கிடைப்பதில்லை என்பது வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது.

எப்பொழுது முஸ்லிம்கள் அதிக வாழும் ஊர்களில் ஆரம்ப படிப்பு முதல் வல்ல அல்லாஹ் தந்த குர்ஆன், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய உண்மையான மார்க்கம் போதிக்க கூடிய கல்விக்கூடங்கள் உருவாகும். உலக கல்வியும் - மார்க்க கல்வியும் சேர்ந்த கல்விக்கூடம் எப்பொழுது வரும் என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரையை முடிக்கிறேன். வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களை நிறைவேற்றித்தர போதுமானவன்.

உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (திருக்குர்ஆன் : 58:11)

குறிப்பு : கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு என்னுடைய ஆதங்கத்தை கவனத்தில் கொள்ளவும். (வறுமை, மார்க்கம் இவை மூன்றிற்கும் சரியான திட்டமிடல் அவசியம்). கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்து பயன்கள் சரியான வழியில் சென்றடைய வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

- அலாவுதீன். S.

http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_10.html
read more...

Thursday, January 6, 2011

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.


இந்த செய்தியை படிப்பதோடு இல்லாமல், தங்கள் வீடுகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டுகோள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருபுரிவானாக.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு பல நாட்களாக தன்னலம்பாராமல் உழைத்துவரும் மாநாட்டு குழு சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.


-- அதிரைநிருபர் குழு

-- முஜிப்.காம்

-- அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு
read more...

முஸ்லிம்களுக்கு உயர்பதவிகளில் அறியவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கீழ்கண்ட தமிழக அரசின் உயர் பதவிக்கான (GROUP 1 ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிக முக்கியமானது ஆகும். தமிழக அரசின் உயர்பதவிகளை நம் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில், இத்தேர்விற்க்கு நம் சமுதாயதிணை சேர்ந்தவர்கள் முன்னுரிமை கொடுத்து, எல்லா ஜும்மாவிலும் முன்னறிவிப்பு செய்தும், நம் சமுதாயத்தில் தகுதி உள்ளவர்களை இத்தேர்வை எழுதும்படி உடனடி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது களத்தில் இறங்கவேண்டிய தருணம். இதை மற்ற இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இத்தேர்விற்காண விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 28-01-2011 ஆகும்.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION / ADVERTISEMENT
Applications are invited upto 5.45 p.m. on 28-01-2011 for direct recruitment to the vacancies in the following posts included in Group-I Services (Service Code. 001):-.

Name of the Post Service                               

1. (i) Deputy Collector Tamil Nadu Civil Service                                                                                
No. of vacancies           33

(ii) Deputy Collector           
No. of vacancies:           23*
(Backlog vacancies for
SC/ST candidates only)                                                                     
(22 SC and 1 ST backlog vacancies in recruitment by transfer)

2. Deputy Superintendent of Police
(Category-I) Tamil Nadu Police Service
No. of vacancies: 29

3. Assistant Commissioner 
(Commercial Tax Officer)
Tamil Nadu Commercial Taxes Service
No. of vacancies    28

4. District Registrar
Tamil Nadu Registration  Service
No. of vacancies: 7

5. Assistant Director of Rural Development Department
No. of vacancies:  10
Tamil Nadu Panchayat Development Service

6. Divisional Officerin theFire                                                                                             
and Rescue Services
Department Tamil Nadu Fire and Rescue Services
No. of vacancies: 1 

Please visit for  more details:

http://www.tnpsc.gov.in/Notifications/257_not_eng_grp2k11.pdf
Thanks to MUJEEB.COM and ADIRAI MEERA
read more...

Wednesday, January 5, 2011

தேவை ஒரு தமிழ் நாளிதழ்

தி  டிவின் சிட்டி என்றழைக்கப்படும் இரட்டை நகரமான 
அபகா -கமீஸ் முஷைஎத் அல் அசீறி ஹாஸ்பிடலின் சீனியர் நீரோ சர்ஜன் டாக்டர் வேலு அவர்கள் மருத்துவ கருத்தரங்கு  நிமித்தம் ஜெத்தா -சவூதி அரேபியா வந்திருந்தவர்களை   நண்பர்கள் சந்தித்து உரையாடியபோது நமக்கென்று ஒரு நாளிதழ் தமிழில் வேண்டும் என்ற அவாவை வெளிப் படுத்தினார்கள்.
மலையாளிக்கு அடுத்த படியாக மிகுதமான மக்களை  கொண்டுள்ள நம் சமுதாய - சமூக மக்களை பிரயோஜனமாக நெறிப் படுத்துவது  என்று கோரப்பட்டது.

அரப் நியுஸ் அல்லது சவூதி கெசட் ஊடகத்துடன் நாம்  கைகோர்த்து கொணர முயற்சிக்கலாம் என ஆலோசனை தெருவிக்கப் பட்டது.

ஜெத்தா தமிழ் சங்க நிர்வாகிகள் இந்தியத்தூதரகத்தில் கான்சுலேட் ஜெனரல் அவர்களைஇன்று  சந்தித்தபோது இதே கருத்தினைக் கூறி,தமிழர்களின் பள்ளி ஒன்று கூடஜித்தாவில்  தென்பட வில்லேயே..? என  JTS ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபீக்  அவர்களிடம் வினவ, அதற்கு பள்ளிகளின் பிரின்சிபால்களாக தமிழர்கள்தான் உள்ளனர் என்று சகோ.ரஃபியாவும் சகோ.சிராஜூம் விளக்கினர்.நிர்வகிப்பது நம்மவர்கள்தான் என சகோ.ஷஃபீக் மாலிக் கூறினார்.   

மேலே உள்ள புகைப்படத்தில், ஜித்தா, சவூதி அரேபியா-  பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் சவூதி ஸ்பான்சருடன் நிற்பவரும் (பிரின்சிபால்-சென்னை), பரிசுக்கோப்பையை பெரும் மாணவனும்  (அதிரை/msm[a])  தமிழகத்தை சார்ந்தவர்களே..  இதை இந்நாட்டில் நாம் கண்ணுரமாத்திரமே முடியும், வாசிக்க வேண்டுமென்றால் தமிழ் நாளிதழைபற்றி இப்பொழுதே யோசிக்க வேண்டும்..

தமிழ் செம்மொழி மாநாட்டில் மார்தட்டிக்கொண்டோம்  "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்"  என்று.. ஆனால், எங்கும் வியாபித்திருப்பது என்னவோ "மலையாளமே"...

-- MSM. ராஃபியா
read more...

Sunday, January 2, 2011

எங்கே செல்லும் இந்த பாதை?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்?

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்த வேண்டும் என்று 4 மாதங்களுக்கு முன்பே அன்பு சகோதரர்களிடமிருந்து பல கருத்துக்கள் கேட்டறியப்பட்டது, முஸ்லீம்கள் எல்லாவையிலும் பின்னதங்கியுள்ள நிலை தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இது இருந்து வருகிறது இதில் அதிரைப்பட்டினம் மட்டும் விதிவிலக்கா என்னா? கல்வி, அரசுவேலை, இந்தியாவில் வேலை போன்றவற்றில் தகுந்த வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால் பின்னடைவில் இருக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்ப கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட உள்ளது.  இன்ஷா அல்லாஹ்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்? இதை நடத்துவதால் என்ன பயன்? மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்? என்று பலர் மனதில் தோன்றலாம், அவற்றிற்கான விளக்கத்தினை அனைவருக்கும் விளங்கும்படி எடுச்சொல்வது எமது கடமை.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நம்மூர் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிகள் மிக பழைமையானவை. இதில் படித்து பயனடைந்தவர்கள் பலர் என்பது உண்மை. தமிழகத்தில் நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் நடத்தும் ஆங்கில வழி பள்ளிகூடங்களில் இமாம் ஷாஃபி பள்ளியும் ஒன்று. இதில் பயனடைந்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் கடந்த 20 வருடங்களில் நம்மூர் கல்வி நிறுவனங்களின் கல்விதரத்தின் அடிப்படையில் நாம் கொஞ்சம் அலசிப்பார்த்தால், நமக்கு கிடைப்பது கீழே குறிப்பிட்டுள்ள சில கேள்விகள் மட்டுமே.

எத்தனை முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்? எத்தனை பேர் அதிரையில் உள்ள மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள்?

எத்தனை பெண் முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பேர் அரசு வேலைகளுக்கு சென்றார்கள்?

எத்தனை பேர் IAS IPS IFS ஆக உருவானார்கள்? எத்தனைபேர் இது தொடர்பான தேர்வுகளைப் பற்றியாவது அறிந்துள்ளார்கள்?

எத்தனை வக்கீல்கள் உருவாகினார்கள்? இதில் எத்தனைப் பேர் நம் சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள்?

எத்தனை பேர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்?

இன்னும் நிறைய கேள்விகள் நீண்டுக்கொண்டே போகும்.

மேல் சொல்லப்பட்டவைகள் அதிரைவாசிகள் மற்றும் முஸ்லீம்களிடம் நம்மால் கேட்கப்படும்  கேள்விகளே. பதில் இருக்குமா என்றால், அது குறைவே... எந்த குறிக்கோள்களும் இல்லாமல் செல்லும் நம் சமுதாய மக்களின் பாதை (எதிர்காலம்) எங்கே செல்கிறது? என்றாவது சீரியசாக சிந்தித்திருக்கிறோமா?

சரி நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனியாவது கொஞ்சம் சுதாரிக்க வேண்டாமா? சுதாரித்தே ஆகவேண்டும், இல்லையென்றால் காலம் போரப்போக்கில் வருங்கால சமுதாயத்தின் நிலை இஸ்லாமிய நிலையிலிருந்து தடுமாறி, ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்கும் அடக்குமுறைக்கு அடிபணிந்துக்கொண்டிருக்க போவது தொடரத்தான் போகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

அதிரையில் நடக்கவிருக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது, தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க பற்றுள்ள கல்வியாளர்கள் வருகைத்தர உள்ளார்கள் இவர்களின் அனுபவங்கள் ஆலோசனைகள் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி பேராசிரியர். டாக்டர். ஆபிதீன் அவர்களும், தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வுக்கு புகழ் பெற்ற CMN சலீம் அவர்களும் கலந்துக்கொள்கிறார்கள். இம்மாநாட்டில் சொல்லப்படும் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல்கள் நிச்சயம் நல்ல பயனுல்லதாக இருக்கப்போகிறது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இருக்கும்.

இனி, நம் சமுதாயத்தில் குறிப்பாக அதிரை போன்ற முஸ்லீம் ஊர்களில் நிறைய மருத்துவர்கள், IAS ஆபீசர்கள், IPS ஆபீசர்கள், IFS ஆபீசர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், உயர் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்று மிகப் பெரிய பட்டாலத்தை உருவாக்க வேண்டும். இதற்கான சந்தர்பத்தை அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு உருவாக்கப்போகிறது.  அன்பான மாணவ, மாணவிகளே, பெற்றோர்களே இந்த அறிய சந்தர்பத்தை பயன்படுத்தி கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் வந்து கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-- தாஜுதீன்
read more...